20 Sep 2011

மயிலிறகு,,,,,,,


                                      
  
       அன்பின்மனிதர் ஸ்டீபன் பொன்ராஜ் அவர்களுக்கு வணக்கம்.
அவர் இப்பொழுது எங்கு இருக்கிறார்,என்ன செய்கிறார்,எப்படி இருக்கிறார் எனத் தெரியவில்லை.அவருக்கு திருமணமாகிவிட்டதா?குழந்தைகள்இருக்கிறார்களா?
எதுவும்தெரியாது.எனக்கு.
     ஆனாலும் அவரைப்பற்றிய நினைவுகள் மட்டும் பச்சையாக இத்தனை வருடங்கள் கழித்தும் ஈரமாக இருக்கிறது என்னுள்.கருத்த ஒடிசலான உருவம்.இருகி வளர்ந்த தேகத்திற்கு சொந்தக்காரர்.சிந்தனை பொதிந்த முகமும்,அகல விரிந்த விழிகளுமாய் இருக்கிற அவர் சாத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
    சாத்தூரை சுற்றியுள்ள எத்தனையோ வளமற்ற கிரமங்களில் பிறந்து வளர்ந்த அவரை அந்த கல்லூரி எங்களது அறிவொளி இயக்கத்திற்காய் தந்தது.
கல்லூரிமாணவர்களையும்,பள்ளிஆசிரியர்களியயும்,வங்கிப்பணியாளர்களையும்,கல்லூரி பேராசிரியர்களையும்.இதரஅரசுத்துறை ஊழியர்களையும்,பணியாளர்களையும்,
தன்னார்வத் தொண்டர்களையும் உள்ளடிக்கி நடந்த இயக்கத்தில் கிடைத்த நல் முத்துவாய் இயக்கம் நடந்த காலம் வரை எங்களுடன் இருந்தார்.
   90 காலங்களின் முற்பகுதியில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த நாட்கள்.
   சாத்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் எங்களது குழு காலை ஏழு மணியிலிருந்து இரவு 10 அல்லது 11 மணி வரை நாடகங்களை நடத்தினோம்.பகலில் பள்ளி,கல்லூரி வளாகங்களிலும், மாலையில்,இரவில் கிராமத்தின்  தெருக்களிலும் நாடகங்களை நடத்துவோம்.
   அப்படி ஒரு நாள் இரவு சாத்தூரை ஒட்டியுள்ள கிராமத்தில் நாடகம் போட்டுக் கொண்டிருந்தோம்.இரவு எட்டு அல்லது எட்டரைமணி இருக்கலாம்.ஊரின் நடுவாக அல்லது ஊருக்கு ஒடுக்குப் புறமாகவோ அமைந்திருந்த பொட்டல்.அதை மந்தை என்றும்சொல்லிக்கொண்டார்கள்.கிராமத்துத்தமிழில்.   அதைசுத்தம்செய்துசுற்றிலும்
ட்யூப்லைட்கட்டி வெளிச்சமாக்கியிருந்தார்கள்.
   வட்டவடிவமான மைதானம்,அதில் பறந்து படர்ந்திருந்த புழுதி.எங்களது முகத்தில் அடித்த ட்யூப் லைட் வெளிச்சம்,ட்யூப் லைட்வெளிச்சத்தில் பறந்து கொண்டிருந்த பூச்சிகளும்,வண்டுகளும்,கரியநிறவானத்தில்கைகோர்த்துத்தெரிந்த நட்சத்திரங்களும்,
நிலாவும் எங்களை பார்த்து ஆசிர்வதித்தது போல் இருக்கஅப்போதுதான் எங்களது வயிற்றை நிரப்பிய உப்புமா,,,,,,,,,,,_
(அந்த கிராமத்தை சேர்ந்த எளிய மனிதர் வீட்டிற்கு அழைத்துப் போய் உபச்சாரம் செய்தார்.எங்களது பணியை பாராட்டியும்,சேவையை மதித்துமாய் அந்த கிராமத்திற்கு எங்களது கலைக் குழுவினர் அடங்கிய வேன் வரும்வரை காத்திருந்து எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்று அவர் தந்த அந்த உப்புமாவும்,கடும் டீயும்,,,,, எவ்வளவு பெரியவிருந்திற்கும் ஈடாகாது.)
   _,,,,,,,என்கிறவற்றுடன்களமிறங்கியநாங்கள்வரிசையா குறியிட்டும்,அடையாளமிட்டும்
நாடகங்களைநடத்திக்கொண்டுவருகிறோம்.எதற்காகவோஒரு காரணத்திற்காக
பையனை அடிக்கிற அப்பா,அடி வாங்குகிற மகன் என்கிற ஒரு காட்சி வரும் நாடகத்தில்.(20 வருடங்களில் நாடகத்தின் கதை மறந்து போனது மன்னிக்கனும்.)
    நான்தான் அப்பா,ஸ்டீபன் பொன்ராஜ் மகன்.நாடகம் நடக்கிறது.குறிப்பிட்ட அந்த காட்சியும் வருகிறது.மகன் முரண்டு பிடிக்கிறான்.தகப்பன் அடிக்கிறான்,மகன் தரையெல்லாம் விழுந்து புரண்டு அடம் பிடிப்பது போலவும்,தகப்பன் கையை வீசி,காலை தூக்கி காற்றில் விர்ரென வெற்று சுற்று,சுற்றி அடிப்பது போலவுமான காட்சி நடந்து முடிகிறது.
    நாடகம்,அதன் மையகரு,அது நடந்த விதம்,கூடியிருந்த மக்கள்,அவர்கள் செய்த ஆரவாரம்,ரசித்து கை தட்டிய விதம்,அமைதியாய் இருந்து,அழ்ந்து அழுது மனமிரங்கி உள்வாங்கியதனம் எல்லாமும் சேர்த்து நாடகத்தை சடசடவென நகர்த்திக்கொண்டு போய் முடிக்கிறது.
  ஓங்கி முறுக்கி விடைத்து அடித்ததாய் பாவனை செய்த கையுடனும்,அடிவாங்கியதாய் காட்டிக்கொண்ட உடலுடனுமாய் நாடகம் முடிந்து ஸ்டீபனும் நானும் வெளியேறும் போதுதான்கவனிக்கிறேன்.ஸ்டீபன்மூக்கிலிருந்துரத்தம் கசிந்திருந்தது.
பதறிப்போய்விட்டேன்.
எந்தவித மிகை நடிப்பும்,மிகைக்கற்பனையும் அற்ற நாடகத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று?என்னை அறியாமல் நடந்த தவறா அல்லது அதீதமாய் கோபம் காட்டி நடித்ததில் உண்மையிலேயே அடியேதும் பட்டு விட்டதா?என ஸ்டீபனிடம் விசாரித்தபோது, “இல்ல சார் சில்லு மூக்கு ஒடைஞ்ச்சிருச்சு,நீங்க அடிக்கிறதா காட்டவும் ஏங் சில்லு மூக்கு ஒடையவும் சரியா இருந்டுச்சு சார்” என முடித்தார்.
   “ரொம்ப தத்ரூபமான காட்சி,அப்பன் அடிச்ச அடியில புள்ளைக்கு ரத்தம் வந்துருச்சி.”என சில பேர் பாராட்டியதை ஏற்க மனமில்லாதவனாக எல்லாம் முடிந்து கிராமத்தை விட்டு வெளியேறிய அன்று இரவு எனக்கு தூக்கம் மறந்து போனது.
    “உண்மையிலேயே சில்லு மூக்கு உடைந்திருக்குமா?அல்லது என்னை சமாதானப்படுத்த அப்படிசொன்னாரா” என்பது இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை.அவரிடம் அழுத்திக்கேட்கும் போது ஒருவித மழுப்பலுடன் முடிந்து பொகிறது வார்த்தைகள்.
   “அட விடுங்க சார்,இது ஒரு பேச்சுன்னு இதப்போயி ஓயாம கேட்டுக்கிட்டு” என்றார் ஒருவிதபெரியமனித தன்மையுடன்.ஒரு வேலை என் மனது சங்கடப்படும் என உண்மையை சொல்ல மறுக்கிறாரோ,,,,,,,?
   அன்று தூக்கம் வர மறுத்த இரவு இன்று வரை நீள்வதாய் என்னுள் ஒரு உணர்வும்,தவறு செய்து விட்ட மனோ பாவமும் என்னை உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.
   “மதிப்பிற்குரிய ஸ்டீபன்பொன்ராஜ் இப்பொழுது நாமிருவரும் சந்தித்துக் கொண்டால் என்னை உங்களுக்கும், உங்களை எனக்கும் அடையாளம்தெரியுமா எனத் தெரியவில்லை”.
   “ஆயினும் அடையாளப்படுத்தப்பட்ட ,அடையாளம்பட்டுப்போன 90 காலங்களின் முற்பகுதியில் ஓர் நாள் இரவில் நாடகமேடையில் ஏற்பட்ட அந்த தவறுக்காய் நான் தங்களிடம் இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”.
    “என்னை மன்னிப்பீர்களா ஸ்டீபன் பொன்ராஜ்”/
    

No comments:

Post a Comment