28 Sept 2011

நலம்கெடபுழுதியில்,,,,,,,,,,,


                      
  
·         ஹலோ,ஹாய்.நாங்க..........டீ.வியிலயிருந்து பேசுறோம்.
·         வணக்கம் நல்லாயிருக்கீங்களா?
·               ஓ/நல்லாயிருக்கேன்.
          ஒங்க பேரு?
·               ...................................../
·         ஓ,ஸ்வீட் நேம்.வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?
·               நல்லாயிருக்காங்க/
·         என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
·              சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன்/
·         வெரிகுட்.என்ன சமையல்?
·              தோசை சுட்டுக்கிட்டு இருக்கேன்.
·         வெறும் தோசையா? ரவா தோசையா?
·             வெறும் மாவு தோசைதான்/
·         எத்தன சுட்டுருப்பீங்க?
·             இப்பத்தான்ரெண்டாவதுதோசையஎடுத்துட்டுஸ்டவ்வ அணைக்கப்போறேன்/
·         என்னது ரெண்டு தோசைதானா?ரெண்டு தோசை எப்படிக்காணும் உங்களுக்கு?
·              எனக்கில்ல,ஏன் ரெண்டாவது பையனுக்கு/
·         அப்ப ஒங்களுக்கெல்லாம்.....?
·              அவருக்கு தோச,இட்லி எப்பவுமே ஆகாது.சோறுதான்.என்ன சாப்புட்டாலும் ஒருகை சோறு சாப்புட்டாத்தான் அவருக்கு சாப்புட்ட மாதிரி இருக்கும்.
பெரியவளுக்கு இட்லி,இப்பத்தான் ரெண்டு தட்டு வேக வச்சு யெறக்குனேன்/
·         அப்ப ஒங்களுக்கு?
·               எனக்குன்னு பிடிச்சது எதுவும் இல்லன்னு ஆகிப்போச்சு,இட்லியில ரெண்டு மிஞ்சும்.தோசைய பாதி அப்பிடியே வச்சிருவான் பையன்.அவருக்கு நான் பக்கத்துல ஒக்காந்தாத்தான் சாப்பாடு யெறங்கும்.அப்பிடியே அதுல ரெண்டு கவளம்.எல்லாம் கலந்த கதம்பமாத்தான் ஏன் விருப்பம் எப்பயும் விரிஞ்சிருக்கு/
·         மணி ஏழரைதான் ஆகுது, அதுக்குள்ள காலை டிபனுக்கு ரெடியாயிட்டீங்களா?
·               இல்ல அதுக்குள்ள எங்க ரெடியாக.......?அவருக்கும்,பிள்ளைகளுக்குமா போட்ட டீயிலயும்,பால்லயும் கொஞ்சம் மிச்சமிருக்கு.ரெண்டையும் கலந்து ஊத்தி கூடக் கொஞ்சம் டீத் தூளப்போட்டு கொதிக்கவச்சி குடிக்கப்போறேன்/
·         அப்படியா,இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே?
·              நான் மட்டும் இல்லைங்க,நம்ம குடும்பங்கள்ல முக்காவாசி பெண்களின் நிலைமையும் இதுதாங்க/
·         அப்பிடியா, ரொம்ப சந்தோசம், தினசரி காலையில எத்தனை மணிக்கு
எழுந்திருப்பீங்க?
·              அதிகாலை அஞ்சு,அஞ்சேகாலுக்கு/
·         அவ்வளவு சீக்கிரம் எந்திருச்சுருவீங்களா?ரொம்ப சுறுசுறுப்பா இருப்பீங்க போலிருக்கே?
·              ஹீம்.....அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல.அந்நேரம் எந்திருச்சாத்தான் வீட்ல அவ்வளவு வேலைகளையும் செஞ்சி முடிக்க  முடியும்/
·         சபாஷ்,நல்ல பதில். அவ்வளவு வேலைன்னா எவ்வளவு வேல?
·              காலையில எந்திரிச்சதும் அடிச்சிப் புடிச்சிப்போயி பால் வாங்கீட்டு வருவேன்.அப்பறம் அடுப்ப பத்த வச்சி பால வச்சிட்டு,ரோட்ல வர்ர ட்ராக்டர்ல  ரெண்டு கொடம் தண்ணி பிடிக்கப்போயிருவேன்.தண்ணி புடிச்சிட்டு வந்து அத  யெறக்கி வச்சிட்டு ஸ்டவ்வோட இன்னொரு பக்கம் சோறு வச்சிட்டு பக்கத்துல கரண்ட் ஸ்டவ்வுல இட்லிக்கு ஊத்திவச்சிட்டுவாசலுக்குப்போயி கோலம் போடப்போயிருவேன்/
·         என்னது கேஸ் ஸ்டவ்வு பக்கத்துல கரண்ட் ஸ்டவ்வா?அப்பிடி வைக்கக்கூடதுன்னு சொல்வாங்களே?
·            என்ன செய்யச்சொல்றீங்க?அப்பிடி வச்சாத்தான் சீக்கிரம் சமையல் முடிச்சி அவுங்கள ஆபீசுக்கும்,புள்ளைங்கள பள்ளிக்கொடத்துக்கும் அனுப்ப முடியும்.
வாசல்ல கோலம் போட்டு முடிச்ச கையோட வந்து டீ,பாலு கலந்து பிள்ளைகளையும்,அவரையும் எழுப்பி குடுப்பேன்.அப்பிடியே நானும் ஒரு வாயி/
குடிச்சிட்டு இருக்கும்போதே சட்னிக்கு ஓடிக்கிட்டு இருக்குற மிக்ஸிய ஒரு பார்வ பாத்துக்கிட்டு மோட்டாரப் போட்டு டேங்குல தண்ணி யேத்தணும்.இத்தன ஓட்டத்துக்கும் மத்தியில நான் பாத்ரூம், பல்விளக்கல் எல்லாம் முடிக்கணும்/
·         ஓ......../இவ்வளவு செரமமானதா ஒங்களோட காலை நகர்வு.அப்பிடின்னா நீங்க ஒரு இரும்பு பெண்மணிதான்.வெரிகுட்,வெரிகுட்,,,,,ஒங்க வீட்டுக்காரரு எங்க வேலை பாக்குறாரு?
·              அவரு........................டிபார்ட்மெண்டுல வேலை பாக்குறாரு/
·         புள்ளங்க என்ன படிக்குறாங்க?
·              மூத்தவ காலேஜ் போறா.சின்னவன் ஏழு படிக்கிறான்.
·         ரொம்ப அளவான சந்தோஷமான குடும்பம்னு சொல்லுங்க,ஆமாமாம்/நீங்க வேலை பாக்குறீங்களா?ஹௌஸ்வொய்பா.......?
·              நான் ..............................டிபார்ட்மெண்டுல வேலை பாக்குறேன்/
·         தப்பாநெனைக்கலைன்னாஒங்ககிட்டஒன்னுகேக்கலாமா மேடம்?
·              ம்ம்ம்.......தாராளமா............../
·         ஒங்கள விட ஒங்க கணவர் அதிகமா சம்பளம் வாங்குவாரா,இல்ல ஒங்க கணவர விட நீங்க சம்பளம் அதிகமா வாங்குவீங்களா?
·             ம்ம்ம்........யாருஅதிகமாவாங்குனாஎன்னங்க,எல்லாம்எங்ககுடும்பத்துக்குதானே
பயன்படுது/
·         பாத்தீங்களா,பாத்தீங்களா,,,,சிரிச்சு பேசி மழுப்புறீங்களே,சும்மா சொல்லுங்க,யார் வாங்குறது அதிகம்?
·              நீண்ட மெளனத்திற்கும் தயக்கத்திற்கும் பின் பதில் வருகிறது.
·             அவரவிட எனக்கு கொஞ்சம் சம்பளம் ஜாஸ்திதான்/
·         பாத்தீங்களா,பாத்தீங்களா பேசிக்கிட்டே இருந்ததுல ஒங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு கேக்க மறந்துட்டேன்.
·         கொஞ்சம் இருங்க, அடுப்புல ஏதோ தீயிற வாசம் வருது.என்னன்னு பாத்துட்டு வந்துர்ரேன்.






.


4 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக நாசூக்காக இன்றைய வேலைக்குச் சொல்லும்
பெண்களின் நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள்
தலைப்பு மிக மிகப் பொருத்தம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

vimalanperali said...

வணக்கம்ரமணிசார்.பெண்களின் நிலை பொதுவாக அப்படித்தானே உள்ளது,

மாய உலகம் said...

உண்மைதான் தொலைக்காட்சியில் இது போன்ற நிகழ்ச்சிகள் எரிச்சல் ஏற்படுத்தும்

vimalanperali said...

தொலைக்காட்சியில் மட்டுமல்ல,உண்மையும் அதுவாகத்தானே இருக்கிறது.