19 Sept 2011

கோடிட்ட இடம்,,,,,,




எவ்வளவு வற்புறுத்தியபோதும்
கொடுத்த பணத்தை
வேண்டாம் என மறுதலித்த
அவனது மனம் கேரி பேக்கினுள்
ரூபாயுடன்,சில்லறையுமாய்
சேர்த்து இன்னும் பத்திரமாக/
இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களும்,
பச்சைகலர் நோட்டுமாய்
அடங்கிய “கேரிபேக்”
ஒன்று இன்னும் பத்திரமாய்
மடித்து வைக்கப்பட்ட
நிலையில் எங்களது வீட்டு
தொலைக்காட்சி மேஜையருகே/
நேற்று முன் தினம்
ஞாயிறின் விடுமுறையில்
பள்ளிக்கு விளையாடப்போன
மகனிடம் கொடுத்தனுப்புவதற்காய்
எடுத்து வைத்த காசு.
அவன் அணிந்திருந்த
சட்டையிலும்,டவுசரிலுமாய்
பை இல்லாததால்
கேரி பேக்கில்
போட்டு கொடுத்தனுப்ப
யத்தனித்ததை
மறுதலித்து போய் விட்டான்.
எவ்வளவு வற்புறுத்தியும்
பணம் வேண்டாம்
எனச் சொன்ன
அவனது மனம்
கேரி பேக்கினுள்
சில்லைறையுடனும்,ரூபாயுடனுமாய்
சேர்ந்து இன்னும் பத்திரமாக/

No comments: