19 Sep 2011

ரங்கோலி,,,,,,,,,


                        
      
       அதிகாலை பேருந்தில் பிரயாணம் செய்திருக்கிறீர்களா நீங்கள்?
அவசியம்கருதியும்,அவசரமனோநிலையிலுமாய்பிரயாணப்பட்டிருக்கிறீர்களா நீங்கள்?
பிரயாணத்தின் சுகம் அனுபவித்திருக்கிறீர்களா தாங்கள்?
     விடிந்தும்,விடியாத அந்த இளம் புலர் நேரத்தில் பேருந்தில் இருக்கும் அரைதூக்க மனிதர்களை,சிறியவர்களை,ஆண்களை,பெண்களை,குழந்தைகளை பார்த்திருக்கறீர்களா?
    அவர்கள்உடுத்தியிருக்கும்அடர்,வெளிர்,வண்ணஉடைகள்,அவர்களதுமுகக்களைப்பு,
வசீகரம் ,அவர்களது உடல் கிடக்கை,அவர்களது மடியில் தூங்கும் குழந்தைஅவர்களது முகக்களைப்பு, கவலைரேகைகள் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?
     நல்லதாக செய்த வீணையை போல வெளியூரில் தங்கிப்படிக்கிற கல்லூரி,மாணவ,மாணவிகள் பாடம் படித்துக்கொண்டும் தூங்கிக்கொண்டும் தாங்கள் அணிந்திருக்கும்சிறிய,நகை ,மோதிரம் இவைகளை காத்துக்கொண்டு பயணிப்பதையும் அவர்களின் உடையலங்காரத்தையும் கைபேசியையும் கவனித்திருக்கிறீர்களா?
     அவர்கள் எங்கு படிக்கிறார்கள்,ஏன் அந்நேரம் பயணிக்கிறார்கள்  என கேட்டுக்கொண்டதுண்டா தாங்கள்?
     பேருந்தில் ஓட்டுனர்,நடத்துனர் உட்பட யார்,யார் என்ன மனோ நிலையில் பயணித்தாலும் அவர்கள் எல்லோரது உள்ளம் திருப்புகிற மாதிரியான பாடல்கள் பேருந்தில் ஒலிக்கக்கேட்டிருக்கிறீர்களா?
     பழைய,புதிய பாடல்களிருந்து முன்னணி,பின்னணி வரிசையிலுள்ள  பாடல்கள் வரைக்கும் பேருந்தின் மேல்கூரைவரை சென்று மோதி பயணிப்பவர்களின் உள்ளம் தொட்டு வருடிவிடுகிறகதை தெரியுமாஉங்களுக்கு?
    காக்கி உடையணிந்து வட்டக்கட்டை பிடித்திருக்கிற ஓட்டுனரின் கண்ணயர்வும்,உடல் அசதியும்,அவர் எத்தனை நாட்கள் பேருந்தை விட்டு இறங்காமல் தொடர்ச்சியாக வேலை பார்க்கிறார் என்பதும் அவரது மனக்கவலையும், அடுத்த மாதம் அவரது வீட்டில் நடக்க இருக்கிற விசேசமும்,அதற்காக அவர் வாங்கியிருக்கிற கடனும்  தெரியுமா உங்களுக்கு?
    நடத்துனரின் டிக்கெட் கேட்கிற பேச்சு தொனியிலிருந்து அவரது மனஅசைவு வரை கவனித்ததுண்டா நீங்கள்?
   முன் பக்கம் இரண்டும்,பின் பக்கம் நான்குமாய்,,,,,, ஆறு டயர்களை கொண்ட செவ்வக வடிவ ஊர்தியைதான் பேருந்து என்றார்கள் என்பதை கவனிக்க முனைந்திருக்கிறீர்களா?
   இடது பக்கமாய் முன்னும்,பின்னும் வாசலுக்கு வழி விட்டு பஸ்ஸினுள்ளே இடது புறம் இரண்டு,இரண்டு பேர்களாக அமரக்கூடிய இருக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒன்பது வரிசையாகவும்,வலதுபுறம் மூன்று,மூன்று பேர்களாக அமரக்கூடிய இருக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக பதினோரு வரிசைகளாகவும் பேருந்தின் நடுவில் இடைவெளி விட்டு அமைந்திருப்பதையும் வெள்ளியில் முளைத்து நிற்பது போலான அவற்றின் பக்கவாட்டு கம்பிகளை பிடித்துமுறுக்கி நிற்கும் நட்டுகள் அவற்றின் நிக்கல் உதிர்ந்த தன்மை,பேருந்தின் வாழ்நாட்கள்,அது தன்வாழ்நாட்களில் எத்தனை பேரை தனது உடலில் தாங்கிசுமந்திருக்கிறது,அவர்களை அவர்களதுபிரயாண எல்லையில் அல்லது இலக்கில்பத்திரமாய்எத்தனைமுறைசேர்த்திருக்கிறதுஎன்பதைஎண்ணிப்பார்த்ததுண்டா
தாங்கள் ?
    பேருந்தின் வேகம் அதிகாலையின் சுகந்தம்,சாலையின் விரிவு என எதையாவது கண்டும் கேட்டும் மகிழ்ந்ததுண்டா நீங்கள்?
    இவ்வளவும் அடங்கிய பேருந்தின் அதிகாலை பயணித்திற்காய் இரவு பதினோருமணிக்கு தூங்கி நடு இரவு 2.00 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கிளம்பியதுண்டா நீங்கள்?
   மனைவி, பிள்ளைகளது அருகாமை இல்லத்தின் நெருக்கம் என எல்லாவற்றையும் பிரிந்து நடுஇரவும்,அதிகாலையும் அற்ற அந்த 2.30 மணி இரவில் ஆட்டோவை வரச்சொல்லி ஏறிச்சென்றிருக்கிறீர்களா?
   குடும்பத்தைபிரிந்து பிள்ளை குட்டிகளை பிரிந்து 250கிலோ மீட்டருக்கு அப்பால் யாரும் பரிச்சயமற்ற ஊரில் வாரம் முழுவதும் தனியாக ரூமில் த்ங்கியிருந்திருக்கிறீர்களா?
    10 லிருந்து 5.00 மணி வரையான அலுவலக புழக்கத்தை விட்டு மற்ற நேரங்களில் புழுங்கும் தனிமையில் மனைவி மக்கள் நினைவுடனும்,நண்பர்கள் தோழர்கள்,உடன் வேலைபார்ப்பவர்களின் நினைவுகளுடனும்,அவர்களுடனான செல்போன் பேச்சு துணையுடனும் ஒரு தோசை 25 ரூபாய் என சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிய அனுபவம் உண்டா,உங்களுக்கு?
    அலுவலகம் முடிந்து ரூமுக்கு வந்ததும் குளித்து முடித்து துணிகளை துவைத்து போட்டு விட்டு வேறு எந்த சிந்தனையுமற்று நேற்று ஆரம்பித்த புத்தகத்தை இன்று முடிக்க வேண்டும் என்று புத்தகங்களில் மூழ்கிக்க்கிடந்ததுண்டா தாங்கள்?
   இரவு படுத்ததும் தூக்கம் வராமல் புரண்டு,புரண்டு படுத்து பின் தூக்கம் வராமல் லைட்டை போட்டு கொஞ்சம் படித்து விட்டு பின்னும் தூக்கம் வராமல் தொலைக்காட்சியை பார்த்தவாறே 12 மணிக்கு தூங்கி நான்கு மணிக்கும் அல்லது அதற்கு இடையிலுமாய் விழிப்பு தட்டி திரும்பவும் தூங்க அதிக நேரமாகி அரைதூக்கத்துடன் அதிகாலை விழித்து குளித்து முடித்து  சடுதியில் அலுவலகம் கிளம்பிப்போயிருக்கிறீர்களா?
    கை நிறைய காசு, தங்குவதற்கு இடம்,நினைத்த இடத்தில் சாப்பிட ஊரெங்கும் ஹோட்டல்கள் அலுவலகத்திலும்,தங்கியிருக்கிற அறையை சுற்றிலும் மனிதர்களிருந்த போதும் கூட யாருமற்ற தனிமையில் இருப்பதான கழிவிறக்க நிலைமையில் உழன்றதுண்டா?
    அலசர்,சுகர்,ப்ளட்ப்ரசர் இவற்றுடனான இதர,இதர நோய்களுக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டும்,பயந்து கொண்டுமாய் பயந்து சங்கடப்பட்டுக்கொண்டுமாய் தனி மனிதன் ஒருவனுக்கு 6000 ரூபாய் வரை செலவளித்துக்கொண்டு இருந்திருக்கிறீர்களா தாங்கள்?
    வார நாட்களின் ஆரம்பமான திங்கள் இரவை கணக்கில் கொள்ளாமல் செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,,,,,, என நான்கு இரவுகள்தானே என் அதிருப்தி பட்டுக்கொள்கிற மனோ நிலை வாய்க்கப்பெற அறையில் தனித்து இருந்துள்ளீர்களா?
   அப்படி இருப்பவர்களை பொறுத்தவரை “சனிக்கிழமை நாளற்ற நாள் கணக்கில் சேர்ந்து விடுகிறது” என அடைகிற சந்தோசத்தை அந்த அரை நாள் அலுவலகம் முடிந்ததும் சாப்பிட்டும் சாப்பிடாமலும் அவசர,அவசரமாக அள்ளிக்கட்டிக்கொண்டு ஊருக்கு ஓடியிருக்கிறீர்களா?
    மதியம் 2 மணிக்கு முடியும் அலுவலகத்தை விரட்டி,விரட்டி,விரட்டி,,,,,,,,சடுதியில் அவசர,அவசரமாய் முடித்து ஹோட்டல் சாப்பாட்டை  அள்ளி வயிற்றுக்குள் எறிந்து விட்டு அலுவகத்திலிருந்து,பழையபஸ்டாண்ட்,பழைய பஸ்டாண்டிலிருந்து புது பஸ்டாண்ட்,புது பஸ்டாண்டிலிருந்து சொந்த ஊர் செல்கிற பேருந்து என அதில் ஏறி,,,,,,, சொந்த ஊர் வந்து கிடைக்கிற சனி இரவிலும்,ஞாயிறின் முழுநாளிலுமாய் வீட்டிலிருந்து நல்லசாப்பாடுசாப்பிட்டுவிட்டு,திங்கள்கிழமைஅதிகாலைபிரயாணம்செய்திருக்கிறீர்களா
நீங்கள்,,,,,,?
கண்டிப்பாக பிரயாணம் போக வேண்டும்.No comments:

Post a Comment