18 Oct 2011

சுத்தம்,,,,,,,,,





விளக்கமாறு வாங்குவதாய்
கண்ட கனவு பாதியிலே
கலைந்து விட
தூக்கம் போனவனாய்
எழுந்து அமர்கிறேன்.
நடுநிசியின் அமைதியையும்,
மின் விசிறி சுழலும் சப்தத்தையும்
தவிர ஏதும் கேட்காத
அந்நேரத்தில்
விடிவிளக்கின் வெளிச்சத்தில்
சுவர் ஓரத்தில் சாத்தப்பட்டிருந்த
விளக்கமாறு
என்னை நோக்கி
எழுந்து வருவதாய் தோன
மனைவியைஎழுப்பிக் கூறுகிறேன்.
“பேய்களும் தூங்கிப்போன
அகாலத்தில் உங்களுக்கு மட்டும்
ஏன் புத்திபோகுது இப்படி,
நாளை காலை
முக்கு வீட்டு சாமியாரிடம்
திருநீறு போட வேண்டும்”
என படுத்து விட்டாள்.
நான் மட்டும் விளக்கமாறின்
நினைவாகவே விடியும் வரை/

4 comments:

Anonymous said...

ம்ம்ம்ம்...சுத்தம்...இது வயசுக் கோளாறு -:)

Philosophy Prabhakaran said...

வெளங்கிடும்...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நலம்தானே?வயசுமில்லை,கோளாறுமில்லை,எல்லாம் ஒரு பார்வைதான்.

vimalanperali said...

வணக்கம் பிளாசபி பிரபாகரன் சார்.விளங்குவத்ற்குத்தானே இத்தனையும்.