19 Oct 2011

அங்கலாய்ப்பு,,,,,,


 


இப்போது திருத்தமாய் பேசுகிறான்
முன்பு போல் இல்லை என
அவனது தாய் சொன்ன
கரியமேல் அழகருக்கு
இப்போது 25 வயதுதாம்/
திருமணமாகிவிட்டதாய் சொன்னவள்
மனைவி மூன்று மாத கர்ப்பம் என
சொல்ல மறக்கவில்லை.
பக்கத்து ஊரில்தான்
கொத்தனார் வேலைக்குசெல்கிறான்
என கூறியவள்
“அவனது சம்பாத்தியம்
முழுவதும் மனைவியிடமே
போய்விடுகிறது
முகம் கொடுத்துக்கூட
பேச மாட்டேன் என்கிறான்
இதற்கு அவன்
பழைய மாதிரியே
பேச்சு சரியாக வராதவனாயும்,
வெளிஉலகம் அறியாதவனாயுமே
இருந்திருந்திருக்கலாம் போல,
கைக்குள்ளேயாவது இருந்திருப்பான்
என்கிறாள்.

10 comments:

vimalanperali said...

வணக்கம் அருள் சார்.நன்றி உங்களது வருகைக்கு.

Philosophy Prabhakaran said...

நன்று...

அம்பாளடியாள் said...

கவிதை அருமை!... வாழ்த்துக்கள் சகோ .மென்மேலும் வளம் பெற .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

vimalanperali said...

வணக்கம் பிலாசபி பிரபாகரன் சார்.நன்று,நன்றன்று என சொல்லவைக்கும் படைப்புகளில் ஒரு துளியாக அங்கலாய்ப்பு,,,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

vimalanperali said...

வணக்கம் அம்பாளடியாள் அவர்களே/நலம்தானா?உங்களது அருளாசியாலும்,மேன்மையான கருத்துப்பகிர்வாலும் மென் மேலும் கண்டிப்பாக வளர்கிறேன்,நன்றி.

Anonymous said...

கவிதை அருமை... வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...

கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நலம்தானா?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

vimalanperali said...

வணக்கம் மாய உலகம் சார்.நலம்தானே?ரெக்கை முளைத்த கிளிகள் பறந்து போகவும்,பறந்து போன கிளிகளுக்கு ரெக்கை முளைக்கவுமான மந்திரம் பொதிந்த சமூகத்தில் கரிய மேல்அழகர்போல் உள்ளவர்கள் ஒரு உருவகம்தானே?

vimalanperali said...
This comment has been removed by the author.