5 Jan 2012

நீர்விலகல்,,,,,,


                                     
    
    கண்ணுக்குள் அரித்தது. நண்பரைப் பார்க்கப் போக வேண்டும் எனகிளம்பி
விட்டேன்/

    காதருகே ரீங்காரமிடுகிற கொசு,வாசலில் கேட்கும் பால்க்காரரின் மணிச்சத்தம்.தெருவோர
சாலையில்கேட்டுக்கொண்டிருக்கிறஇரைச்சல்.வீட்டின்வெளியே குப்பையையும்கூடவே
மண்ணையும்சேர்த்து கிளறுகிற  வெள்ளைநிற போந்தாக்கோழி,உதிர்ந்து தரையில் கிடக்கிற
மரத்திலைகள்,அதன் பச்சையோடும்,பழுத்துதெரிகிற மஞ்சளோடும் தின்கிற கருப்பும்,வெள்ளையும் கலந்த ஆடுகள்.அதிலும் தாய் ஆடு தின்று விட்டு அதன் குட்டிக்கு கொஞ்சம் மிச்சம் வைத்து விட்டுப்போகிற வாஞ்சை.குரலெலுப்புகிற ஒரு மரத்துக்குருவி.குறுக்கும்,நெடுக்குமாக பறக்கிற காக்கைகள்.நடமாடுகிற மனிதர்கள்,விரைகிற வாகனங்கள்.இலகுரக,கனரக என/
    புலர்ந்து விட்ட பொழுதின் நிழலான இளம் வெயில் பட்டு சிலிர்த்து நிற்கிற  பச்சைகள்,மற்றும் தாவரங்கள்.ஆழ வேர் விட்டு கொடும் கரம் விரித்து நின்ற சீமைக்கருவேலை முட் செடிகள்,வீட்டின் முன் விரிந்த பாதை,அதில் மலர்ந்திருந்த மண்,நாசியில் வந்து மோதிய அதன் வாசம்,இன்று அதிசயமாக அதிகாலையில் எழுந்து பல் துலக்கிக்கொண்டிருக்கிற நான்.புதிதாக வீட்டிற்கு பூசப்பட்டிருக்கிற வர்ணம்.வீட்டிற்குள் கேட்ட மனைவிமக்களின் சப்தம்.என எல்லாம் கடந்து கண்களின் அரிப்பை போக்க நண்பனின் சந்திப்பே சாலச்சிறந்தது என்கிற முடிவுடன் கிளம்பலாம் சீக்கிரம் என்கிற மனோநிலையினாய் முன்னெட்டிப்பார்க்கிற பொழுது,,,,,,,,,
   “என்னங்க கொஞ்சம் காய்கறிகள நறுக்கித்தான் குடுங்களேன்,அந்த தண்ணி மோட்டார கொஞ்சம் போட்டாத்தான் என்னவாம்?எட்டுமணிக்கு டாண்ணு கரண்டு போயிருமில்ல,வீட்டக்கொஞ்சம் கூட்டுங்களேன்.எல்லா வேலையும் நானே பாத்துக்குட்டுஇருந்தாஅப்பறம்புள்ளைங்கஸ்கூலுக்குகெளம்ப லேட்டாயிரும்தான,/
ஒத்தை ஆளா எத்தனை கெடந்து மல்லாடுறது,,,,,,,,,,,,,,?”என சராசரி தமிழ் குடும்பப்பெண்களின் பிரதிநிதியாய் கேட்ட எனது மனைவியின் குரல்.
    அப்புறம்ஒவ்வொருவளையமாகவும்,அடுக்ககவும்,அல்லதுசுவராகவும்தாண்டி,
தாண்டி,தாண்டி,,,,,,,வெளியேவந்துகிட்டத்தட்டதப்பித்துப்போய்விடவேண்டும்
நண்பனை காண/
    இப்போழுது குளித்து கிளம்பினால்தான் நண்பனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்ல நேர சரியாக இருக்கும்.காலை எழுந்ததும் சூழ்கொண்டு விட்ட நினைப்பை மனதுள்சுமந்து கொண்டேயும்,மனைவியின் சொல்லையும் கிட்டத்தட்ட புலம்பலையும் புறந்தள்ளிவிட்டு கிளம்புகிறேன் இதோ வந்து விட்டேன் என/
   இப்படியும் கிளம்பலாமா, டீக்கடை வைத்திருக்கிற எனது   நண்பரையும் தோழரையும் பார்க்க/
    நிறை மாசமாய் சுமந்து கொண்டு நிற்கிற கர்ப்பவதி போலே எந்நேரமும் வாகன மற்றும் மனித நடமாட்டத்தையும்,ஓட்டத்தையும்,இரைச்சல்களையும் தாங்கி நிற்கிற முக்கு ரோட்டின் திருப்பத்தில்தான் அவரது கடை .
    பெயர் முனியப்பபாண்டி,வயது 55,மனைவி இரண்டு பிள்ளைகள் என அளவான குடும்பம்.கத்தரித்து விட்டது போல அளவானதொரு வாடகை வீடு,சின்னதொரு கடை,அளவான வியாபாரம்.
     டீமட்டும்இல்லை,வடை,முறுக்கு,தட்டை,சீடை,கடலைமிட்டாய்(கடலை மிட்டாயை சொல்லும் போது மிதுன்சாரின் ஞாபகம்உள்ளில்  வந்து துள்ளுவதை தவிர்க்க
முடியவில்லை) என கலந்து கட்டி இருக்கும்.
    அன்பான அவரது உபசரிப்பில்  கடைக்கு டீக்குடிக்க வருகிறவர்களின் கூட்டம் மிதத்திலும்இல்லாமல்பலத்திலும்இல்லாமல் நடுவாந்திரமாய் கைவிரித்து நிற்கும்.
    அந்த கைவிரிப்பிலும் அன்பொழுகளிலும் தோதுகளிலுமாய் வியாபாரம் விரிந்து
நிற்கிறது.
  
   அன்பும்,பண்பும்,சிரிப்பும்,நட்பும்தோழமையுமாய்பாவிநிற்கிற அவரைபார்க்க கிளம்பிக்
கொண்டிருக்கிறேன்.சீக்கிரம் போகவேண்டும் என்கிற நினைப்புடன்/

No comments:

Post a Comment