28 Jan 2012

பரப்பு,,,,,,,

       
 சாலையின் நடுவில் கிடந்த
சிவப்புத்துணி மீது
கார் ஒன்று ஏறிச்சென்றது.
ஒன்றிரண்டு லாரிகளும்,
பேருந்துகளும் கூட அப்படியே/
இருசக்கர வாகனங்களும்,
மிதி வண்டிகளும்
அதற்கு விதிவிலக்கில்லாமலும்,
அதை பின் பற்றியுமாய்/
காலில் சிக்கினால் தடுக்கிவிடக்கூடும்
என்றஞ்சி ஒதுங்கி நடந்த பாதசாரிகள்/
இவை எல்லாவற்றையும்
பார்த்தவாறு துள்ளித்திரிந்தவாறுமாய்
சாலையோரம் விளையாடியவாறுமாய்
இருந்த சிறுபிள்ளைகள்
துணியை எடுக்க கைநீட்டி
விரைந்த  போது
காற்றில் மேலெழுந்து
விரிந்து நின்ற துணி
அங்குள்ள அனைவருக்கும் நிழலளித்ததாய்/

8 comments:

Rathnavel Natarajan said...

அருமை.

கீதமஞ்சரி said...

அடிபட்டுக்கிடந்தபோதும், அலட்சியப்படுத்தியபோதும் வராத உத்வேகம், ஆசையாய் நெருங்கிய பிஞ்சுவிரல்களால் பிரசவிக்கப்பட்டுள்ளது போலும். மறைபொருள் விரிந்தால் பார்வைகளும் விரியலாம். பாராட்டுகள்.

Admin said...

வாழ்த்துகள் தோழர்..தொடர்ந்து எழுதுங்கள்..

vimalanperali said...

வணக்கம்ரத்தினவேல்சார்,நல்ம்தானே?உனளது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி/

vimalanperali said...

வணக்கம் கீதா அவர்களே/பிஞ்சுவிரல்களுக்கு இருக்கிற மந்திரசக்தியே தனிதானே/

vimalanperali said...

வணக்கம்,மதுமதிசார்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி.

ஹேமா said...

அவசர உலகில் சிறியவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் வளர வளர மாறிவிடுகிறது !

vimalanperali said...

நன்றி ஹேமா அவர்களே.தங்க்ளது வருகைக்கும் கருத்துரைக்குமாக/