வீதியில் போகும்போது
குரைத்த நாயொன்றையும்,
வீட்டிற்கு திரும்பிய பின்
வாலாட்டிய நாயொன்றையும்
ஒரே நாளின் வேறு,வேறு
தருணங்களில் காண நேரிடுகிறது.
குறைத்தது வெள்ளை.
வாலாட்டியது அடர் ப்ரவுன்/
அது குட்டை வால்,இது நீள வால்/
அது கலப்பின நாய்,இது நாட்டு நாய்/
அது வீட்டை மட்டுமே
சுற்றி சுற்றி வருகிறது.
இது தெருவெல்லாம்
சுற்றி,சுற்றி வருகிறது.
அது வீட்டை கடப்பவர்களைப்
பார்த்து மட்டுமே குரைக்கிறது.
இது தெருவில் அந்நியமாக
யார் வந்தாலும் குரைக்கிறது.
வீதியில் போகும் போது
குரைத்தநாயொன்றையும்,
வீட்டிற்கு திரும்பிய பின்
வாலட்டிய நாயொன்றையும்
ஒரே நாளின் வேறு,வேறு
தருணங்களில் காண நேரிடுகிறது.
2 comments:
நல்ல கவனிப்பு !
வணக்கம் ஹேமா அவர்களே நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment