30 Jan 2012

கோழிறெக்கை,,,,,,,,,


   

உதவி  என கேட்டவனிடம்  
முகத்திற்கு நேராய் முடியாது
என எப்படிச்சொல்ல?
என்கிற வார்த்தைகளில்தான்
வாஞ்சையும்,மனிதாபிமானமும்,
இன்னும் உயிரும் கொஞ்சம்  
ஒட்டிஇருப்பதாக நினைக்கிறேன்.
சகமாணவனின் வீட்டுப்பாடத்தை
சிரத்தை எடுத்து செய்து கொண்டிருந்த
எனது மகனிடம் கேட்டபோது சொன்னான்.
கேட்கிற உதவியை முடியாது என
முகத்திற்கு நேராக எப்படிச்சொல்ல?என/
வாஸ்தவம்தான்,சொல்ல வேண்டாம்,விட்டு விடு .
உனது ஈரம் பூத்த மனதாவது
உன்னிடம் அப்படியே இருக்கட்டும்.

18 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பிள்ளைகளிடமுள் இதுபோன்ற தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்...

அழகிய கவிதை

vimalanperali said...

நன்றி கவிதைவீதிசௌந்தர் சார் நலம்தானே,த்னளது வருகையும் கருத்தும் என்னை இன்னும் ஊக்குவிக்கும்,நன்றி,வணக்கம்/

Unknown said...

ஈரங்கள் காய்ந்து விடாது இருப்பது தான் மனிதனாய் நம்மை இருக்க வைக்கின்றது...

Admin said...

நல்லதொரு கவிதை..

உனது ஈரம் பூத்த மனதாவது
உன்னிடம் அப்படியே இருக்கட்டும்.

நன்றாக சொன்னீர்கள்..

Anonymous said...

உனது ஈரம் பூத்த மனதாவதுஉன்னிடம் அப்படியே இருக்கட்டும்...//

ஆதங்க வரிகள்...நம்பிக்கையோடு...

குடிமகன் said...

//சொல்ல வேண்டாம்,விட்டு விடு .
உனது ஈரம் பூத்த மனதாவது
உன்னிடம் அப்படியே இருக்கட்டும்//

அருமையாக சொன்னிங்க சார்..
வயதால் வளர்ந்தவர்களாகிய நாம்.. குழந்தைகளுக்கு யதார்த்தம் என்ற பெயரில் சூது, வாது கவடு சுயநலன் களை சொல்லிக்கொடுக்கமளிருந்தாலே
அடுத்த தலைமுறை மனிதம் செழிப்பாக வளரும்..

துரைடேனியல் said...

அருமையான வரிகள். அழகு.

சசிகலா said...

அருமையான் பகிர்வு இன்னும் ஈரம் பூக்கட்டும்

arasan said...

நீண்ட நாள் கழித்து வருவதற்கு மன்னிக்கவும் சார் ..
ஈரமான உணர்வுக்கு என் நன்றிகள

vimalanperali said...

வணக்கம் மரு,சுதரபாண்டியன் சார்.நலம்தானே?உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.காய்ந்து போகாமல் ஈரங்களை பாதுகப்பதும் இந்நேரத்தைய தேவையாக/

vimalanperali said...

வணக்கம் மதுமதி சார்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக நன்றி.

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்,நலம்தானே?நன்றி உங்கள்து வருகைக்கும்,கருத்துரைக்குமாய்/

vimalanperali said...

வணக்கம் குடிமகன் சார்.நல்ம்தானே?நன்றி உண்களது வருக்கைக்கும்,கருத்துரைக்குமாய்/

vimalanperali said...

வணக்கம் துரை டேனியேல் சார்,நன்றி உங்கஆளது வருகைக்கும்,மேலான கருத்துரைக்குமாக/

vimalanperali said...

vimalanperali said...

வணக்கம் அரசன் சார்.நீண்ட நாள் கழித்ஹத்ங்களது வருகை உவகை அளிக்கிறது.தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்கும் நன்றி

ஹேமா said...

மனிதம் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது.
வாழ்த்துங்கள்.வளரட்டும் நல்லதொரு மனிதனாய் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா அவர்களே?நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/