4 Feb 2012

கண்ணாடிக்குமிழ்,,,,,,


                                   

       அவளுள் சுடர் விட்டு எழுந்த கோபமும்,கேள்வியும் ஞாயமென்றே படுகிறது அவனுக்கு/
     காலை பதினோரு மணி இருக்கும்.அவன் பணிபுரிகிற நிதி நிறுவனத்திற்கு வருகிறாள்.அடகு வைத்த நகையை மீட்டவேண்டும் என்கிறாள்.
    வீட்டின் அவசர தேவைக்காக வைத்த நகை.ஒரு வருடத்திற்கும் மேலாகிப்போனது. நேற்றைக்கு முதல் நாள்தான் நினைவூட்டல் கடிதம் வந்தது.அவசர,அவசரமாக பணம் புரட்டிக்கொண்டுதிருப்பவந்திருக்கிறேன் என்றாள்.
    பார்க்க பாந்தமாகத்தெரிந்தாள்.ஒல்லியாய் கசலையான  உருவம் தலைக்கு வாரி நெற்றிக்கு இட்டிருந்தாள்.
    நீண்டதாயும் இல்லாமல் கொஞ்சமாயும் இல்லாமல் பின்னலில் கொஞ்சமாக பூ சொருகியிருந்தாள்.
    காட்டனா,பூனம் சேலையா என தெரியாத் ஆளவிற்கு அடர் நிறத்தில் ஒரு சேலை உடுத்தியிருந்தாள்.
   பூப்போட்டுமல்லாமல் ,நவீன டிஸைன்களிலும் அல்லாமல் நடுவாந்திரமாய் உடலில் ஒட்டிக்கொண்டு சிரித்தது.
   வாடிக்களைத்து முகத்தில் ஒட்டியிருந்த ஏழ்மை அவளது நிலைமையை பளிச்சென சொல்லிச்சென்றவாறு/
    பூஒன்றின் மேனியிலிருந்து கசிகிற மெலிதான வாசனை போலானதாய் இருந்த அவளது ஏழ்மைச்சொல்லல் இன்னமும் அவளை அழகாக்கிக்காட்டியதாக/
    பக்கத்து ஊர்தானாம் சொன்னாள்.கணவன் தச்சு வேலை செய்கிறார்.இவர் கிடைக்கிற கூலி வேலைக்க்குச்செல்வாராம்.
    இரண்டு பிள்ளைகள்.அவளது பெண்பிள்ளையை உள்ளூர் பள்ளியிலும்,பையன் வெளியூரில்சென்றுவேலைபார்க்கவுமாய் இருக்கிற குடும்பம் வயிற்றுக்கும்,வாய்க்குமாய் ஓடுவதாக சொன்னாள்.
    நகர்கின்ற நாட்களின் கனம் மற்றும் லேசுகளில் கோர்த்திருக்கிற கை கோர்வையின் மொத்தத்திற்கும்  உள்ளாக  பல்சக்கரத்தில்  வாழ்க்கை   சீராகவும்,   சீரற்றும்   ஓடிக்
கொண்டிருப்பதாகச்சொன்னார்.
   தம்பி பையனின் மொட்டைக்கு செய்ய வேண்டிய செய்முறை செய்வதற்காக வைத்த நகையை திருப்ப இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது,வந்திருக்கிறேன் என்றவாறு அதற்காக கணக்குப்பார்த்து எழுதப்பட்ட ரசீதுடன் அவனிடம் பணம் கட்டவந்து நின்றாள்.
   மொத்தம் 15530 என போடப்பட்டிருந்தது.பணத்தையும்,ரசீதையும் வாங்கிக்கொண்டு எண்ணிப்பார்த்தான்.
   என்னம்மா எவ்வளவு குடுத்தீங்க எனக்கேட்க அவள் 15530 என சொல்ல அம்மா 100 ரூபாய் குறையாய் இருக்கிறதே எனவும்,சரியாய் எண்ணித்தருமாறும் திரும்பவுமாய் அந்தப்பெண்ணிடம் தருகிறான்.
   அவளும் வாங்கி ஒரு முறை எண்ணிப்பார்த்து விட்டு எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என திரும்பத்தருகிறாள்.எட்டாப்பு வரைக்கு படிச்ச நான் எண்ணுன நோட்டு தப்புன்னுட்டீங்களே?
   “ஏன் எண்ணிக்கையில எப்படி தப்பு வரும்?நான் என்ன அப்பிடியா கொறையா குடுத்து ஒங்கள ஏமாத்திறப்போறேன்”.என வெடித்த வார்த்தைகளுடன் கோபமாக பணத்தைத் தருகிறாள்.
   வாங்கி எண்ணிப்பார்த்தால் சரியாக இருக்கிறது.திரும்பவும் எண்ணுவதாய் பாசாங்கு செய்து விட்டு கொடுத்த பணம் சரியாக இருக்கிறதென வாங்கிப்போட்டு விட்டு ரசீதில் சீல் அடித்துத்தருகிறான்.
   இதில் எங்கு தவறு நடந்தது எனத்தெரியவில்லை.அந்த பெண்ணிடமிருந்து பணம் வாங்கி எண்ணுகையில் தவறாக எண்ணி விட்டானா அல்லது அந்த பெண் இப்போது திருப்பித்தருகையில் நூறை சேர்த்துக்கொடுத்துவிட்டாளா?(கம்பி போட்ட கூண்டுக்குள் அமர்ந்து பணத்துடன் உறவாட ஆரம்பித்த நாளிலிருந்து இப்படித்தான் ஆகிப்போனதாய் நினைக்கிறான்.எந்த எண்ணிகையில் உள்ள ரூபாய் நோட்டை யார் கொடுத்தபோதும் 1000,500,100,50,20,10 என எதைப் பார்க்கிற போதும் அதன்மீது விழுகிற சந்தேகம் தவிர்க்க முடியாது போலும்.அப்படியான மனோநிலை கோலாச்சுகிற இடத்தில்நின்று பணம் வாங்கிய போது நிகழ்ந்த தவறுதானா அது தெரியவில்லை/)
    எதுஎப்படியாயினும் அவ்வளவுநேரம் நன்றாகவும், இணக்கமாயும்  பேசிய அந்தப்பெண், அவள்மீதும் அவளது, செய்கையின் மீதும் தவறு என சொல்லப்பட்டதும் பொருக்கமாட்டாதவளாய்துள்ளிஎழுந்துசட்டெனசுடர்விட்டெழுந்தஅவளது கோபமும்,
கோபம்சார்ந்த  ஆழ்ந்த  வருத்தமும்  ஞாயம் என்றே படுகிறது.
    பரவாயில்லை, வேலைத்தளங்களில் இது மாதிரி நாலு விஷயங்கள் வரும்,போகும் அதில் ரெண்டு நல்லதாயும்,ரெண்டு கெட்டதாயும்/
     ஆனால் உரசிக்கொள்கிற சிறு சிக்கி முக்கி கற்களின் முனையில் பற்றிக்கொள்கிற    
     சிறுபொறியைப்போல எள் முனையளவு எழுகிற கோபமும்,ஆதங்கமுமே மனதின்    
     ஏதாவது ஒரு புள்ளியில் ஒன்றினைந்து சட்டெனகோபமாக,கேள்விகளாக
     உருவெடுத்து விடுகிறது போலும்/      

11 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய வரிகள்...

வாழ்க்கையின் பரிமாணங்கள்...
அழகிய படைப்பில்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏழையின் உண்மையான சொத்தே கோவம்தான்..

ஏழைகள் உரிமை மற்றும் உணர்வுகளை தூண்டும் போது கோவம் மிகவும் வீரியமாக எழும்....

கோவம் மட்டும் இல்லையேல் ஏழைகள் இந்தியாவிட்டே விரட்டப்பட்டு இருப்பார்கள்...



பதிவுக்கு ஒரு நன்றி...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

vimalanperali said...

வணக்கம்.கவிதைவீதி சௌந்தர் சார்.நலம்தானே?திரட்டப்படுகிற கோபங்களுக்கும், சிதறிப்போய் விடுகிற கோபத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Admin said...

வணக்கம் தோழர்..நலம் தானே..
வாசித்தேன.உங்களின் ஒவ்வொரு பதிவும் ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு..சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்வது சிறப்பு..வாழ்த்துகள் தொடர்ந்து பயணியுங்கள்.
கோபத்திற்கான விளக்கத்தை சொல்லி முடித்த்விதம் சிறப்பு.

vimalanperali said...

வணக்கம் தோழர்.நலம்தானே?
மேடு பள்ளமான நினவலைகளின் மிச்ச மீதியாய் நம்மிடம் இருக்கிற மிகப்பெரிய சொத்தாய் கோபம் ஒன்று மட்டுமே/
நன்றி உங்களது வருகைகும்,
கருத்துரைக்குமாக/

Yaathoramani.blogspot.com said...

அன்றாடம் நேரடியாக காணுகிற காட்சிகளை
ரத்தமும் சதையுமாய் நீங்கள் பதிந்து செல்லும் விதம் அருமை
100 பின்தொடர்பவர்கள் ஆயிரமாய்ப் பெருக வாழ்த்துக்கள்

ஹேமா said...

தப்பும் தவறும் செய்யாதவர்கள் யாருமே இல்லை.சிலசமயங்களில் கொஞ்சம் பொறுமையும் அவசியம்.இந்தச் சம்பவத்தில் இருவருக்குமே உடனடியாகக் கோபம் வந்திருக்கிறது !

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நலம்தானே?தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்கும்,உளமார்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி.

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நலம்தானே?வெட்டை விட்டு பணிக்குக்கிளம்புகையில் இன்றைக்கு கோபப்படவேண்டும் என நினைத்தோ,முடிவெடுத்தோ கிளம்புவதில்லை.
சூழலின் கரங்கள் நம்மை தீர்மானிக்க நடக்கிற சில விஷயங்கள் அப்படியாகிப்போகிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/