7 Feb 2012

மெல்லிறகு,,,,,


                                      


  மேல் டிபனில் இட்லி, கீழுள்ள டிபன் பாக்ஸில்  சாப்பாடுமாய் வைத்துள்ளேன்.
      இட்லியுடன் எண்ணெய் ஊற்றிய இட்லிப்பொடி கொஞ்சமும், அவன் நாவுக்கும் மனதுக்கும் பிடித்த கொத்தமல்லி சட்னியும் வைத்திருக்கிறேன்.
     சாப்பாடு வைத்துள்ள டிபன் பாக்ஸில் தக்காளி சாதமும்,அவன் மனம் கொள்ளை கொண்ட காலிபிளவர் கூட்டுமாய் குடிகொண்டுள்ளதென மறக்காமல் சொல்லி விடுங்கள்.
     வளர்கிற பையன்,கூடவே ஹாக்கி ,மற்றும் இதர விளையாட்டுக்கள் என திரிகிறான்.நன்றாக சாப்பிட்டால்தான் உடலில் கொஞ்சமாவது தெம்பு ஓடிசென்று ஒட்டும்.சும்மாவே  ஹேங்கர் கம்பிபோல இருக்கிறது அவனது உடம்பு.
    ஆகவே மறக்காமல் சொல்லி விடுங்கள்.முடிந்தால் அவன் ப்ரேயர் முடிந்து வரும்வரை பொறுமைகாத்துஅவனைப்பார்த்துசொல்லிவிட்டும்,ஞாபகப்படுத்தி விட்டும்  வாருங்கள் என்றாள் அவனின் மனைவி.
    அலுப்பு அப்பிய தேகம், களைத்து  வியர்வை பூத்து மினுமினுத்த முகம்,கலைந்து தெரிந்த தலைமுடி,அள்ளி சொருகிய புடவை,காலை நேர அவசரத்தின் எஞ்சிய உருவில் தெரிந்த அவள்.உதட்டோரம் சுழித்த ஒற்றை கீற்றாலான சிரிப்பு.
    ஏயப்பா அத் அப்படியே  மனதை அள்ளி முடிந்து கொள்கிறது.அள்ளி முடிந்த மனதை அவிழ்க்க முடியாமல் அல்லது அவிழ்த்துவிட  பிரியமில்லாமல் ஆகிப்போகிற தருணங்களில் மனதில் ஆயிரம் பூக்கள் மலர்ந்தும் விடுகிறது.
    என்னசெய்யஅனுமதிக்க வேண்டியதுதான். இனிமையாக இருக்கிறதே,நினைக்கவும் அசைபோடவுமாய்/
    வீட்டின் சுவர் பற்றி படர்ந்த முல்லைக்கொடி,ஆறு மாதங்களுக்கு முன்வரை வீட்டின்முன்பு நன்கு வளர்ந்து சிரித்த ஒற்றை ரோஜாச்செடி/மற்றும் விரிந்த வெளியின் மனிதர்கள்,அவர்களின் மனம் பிடித்த செய்கைகள்/
    அவன்வீடு,மனைவி,மக்கள் என  ஆகிப்போகிறவற்றில் இதுவும் ஒன்றாய்.
    மண்கீறி செடி முளைத்திருக்க,முளைத்திருந்த செடியில் இலைகள் லேசாக இறகு விரித்திருக்க,இலைவிரித்திருந்த செடியில் மொட்டு  வைத்திருக்க, வைத்திருந்த மொட்டு அவிழ்ந்து பூவாய் மலர்ந்திருக்க,மலர்ந்திருந்த பூ தன் வாசனையை தென்றலாய் திசை எட்டும் தவழ்ந்து பரப்பிக்கொண்டிருக்க பறவைகள் பறக்க,பூக்கள் பூக்க,மனிதர்கள்மலர, பொழுது புலர இப்படி எல்லாமும் கலந்தறிவித்த பறையறிவிப்பாய்,
மாயம்செய்கிறநிகழ்வாய்,,,,,,,
   பள்ளிக்கு காலையெழுந்து விளைடாடச்சென்று விட்ட மகனுக்கு அவனது தாய் தகப்பனிடம்சாப்பாடு கொடுத்தனுப்புகிற போது நடந்ததாய் மேற்கண்ட    நிகழ்வு.
 மேல்டிபனில்இட்லியும்,கீழ் டிபனில் சாப்பாடுமாய் வைத்துள்ளேன்,மறக்காமல் கொடுத்து விடுங்கள். 

8 comments:

 1. அவன்வீடு,மனைவி,மக்கள் என ஆகிப்போகிறவற்றில் இதுவும் ஒன்றாய்.
  சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 2. வணக்கம் தோழர் நலம்தானே?தங்கள்து வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 3. யதார்த்தமான பதிவு. நன்றித் தோழரே!
  http://atchaya-krishnalaya.blogspot.com

  ReplyDelete
 4. வணக்கம் அட்சயா அவர்களே,ந்ன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/

  ReplyDelete
 5. பள்ளிக்கு காலையெழுந்து விளைடாடச்சென்று விட்ட மகனுக்கு அவனது தாய் தகப்பனிடம் சாப்பாடு கொடுத்தனுப்புகிற போது நடந்த மேற்கண்ட நிகழ்வு...நிதர்சனம்...
  நன்றி நண்பரே...

  ReplyDelete
 6. இயல்பு வாழ்க்கையில் நடப்பவையும் அழகான கவிதைகள்தான் என்பதை உங்களின் எழுத்துக்களால் புரிந்து கொண்டேன் சார்.

  ReplyDelete
 7. வனக்க்ம் பாலாசார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்,மேலான பாராட்டுகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 8. வணக்கம் ரெவெரி சார்,நலம்தானே?நம்மில் அன்றாடம் சுழியிடுகிற காலை நேரங்கள் நன்றாகவும்,நெருக்கடி வாய்ந்ததாகவும் உள்ளதை இப்படியல்லாமல் எப்படிச்சொல்ல?

  ReplyDelete