16 Mar 2012

தளிர்,,,,,,,,,


துளிர்க்க ஆரம்பித்துவிட்ட
வேப்பமரத்து இலைகள்.
பூத்துச்சிரிக்கிற பன்னீர் மர பூக்கள்/
மூக்கு உரசி கொஞ்சிப்பேசிக்கொள்கிற
காதல்பறவைகள்/
தரை நிறைந்து உதிர்ந்து
கிடக்கிற பூக்களும்,இலைகளும்/
அவைகளை ஊடுருவி,
தரை பிளந்து செல்கிற பூச்சிளும்,புழுக்களும்/
அவைகளை கொத்திதின்ன காத்திருக்கும்
சாம்பல்நிற பறவைகள்.
தூரத்தில் கேட்கும்
பால்க்காரரின் சைக்கிள் மணி ஓசை/
அதிகாலை சேவலின் கூவல்.
புலர் பொழுதின் நிச்சலனமற்ற அமைதி.
முதல் டீக்குடிக்க கண்டிப்பாய்
நாளை நீங்கள் வரவேண்டும்
என நேற்றே பேச்சில்அன்புக்கட்டளை
இட்டு விட்ட டீக்கடைக்காரரினது நினைவு/
இன்னும் எழாமல்
தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள்.
அதிகாலை எழுந்து விட்டதனால்
உடல் போர்த்திக்கொண்ட சோம்பல்/
என்கிறதான அடையாளங்களுடன்
வீட்டோர பக்கவாட்டு வெளியில்
நடந்து கோண்டிருந்த பொழுது
உதிர்ந்து கிடந்த இலைகளினூடாகவும்,
பூக்களினூடாகவும் தரையுரசிக்கிடந்த
மூடியற்ற பேனா என்னைப்பார்த்து சிரித்ததாய்/  

9 comments:

விச்சு said...

அதிகாலை நேரத்தினை சிலாகித்து எழுதியுள்ளீர்கள்.

ஹேமா said...

கோடைகாலத்தின் ஆரம்பமா.குளிர்காலத்தில் தொலத்தவைகளை மீட்டெடுக்கும் மகிழ்ச்சி உங்கள் கவிதையில் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்/கோடையும் இல்லை குளிர்ச்சியும் இல்லை.நடப்பே இப்படி விரிகிறது.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,அதிகாலை காட்சிகளின் நெசவு அன்று முழுவதும் வட்டமிடும் என்பார்கள்.
வட்டமிடுகிறது நினைவுகள்.
தங்களது வாழ்த்துக்கள் இருக்கும் வரை எழுதுகிறேன்,தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக நன்றி/

சசிகலா said...

உதிர்ந்து கிடந்த இலைகளினூடாகவும்,
பூக்களினூடாகவும் தரையுரசிக்கிடந்த//
ரசனை மிகும் வரிகள்

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

ரசம் பூசிக்கொள்கிற வார்த்தைகள் இன்டஹ் மண்ணிலிருந்துதான் கிடைப்பதாகச்சொல்கிறார்கள்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Yaathoramani.blogspot.com said...

இறுதிவரை கவிதையை புதுவிதமாய் அர்த்தப்படுத்திப்போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.