21 Mar 2012

கோடிட்ட இடம்,,,,,,,,,


                  
    ணக்கம் டீச்சர், நலம்தானே? நான் சூர்யகுமாரன்,தங்களது பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கிறேன்.
    இன்று ஒரு நாள் விடுப்புவேண்டிவிண்ணப்பித்துள்ளேன். நான் எனது அம்மா,எனது தந்தை எனது அக்கா ஆகிய எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.
 பள்ளிக்கு வர சோம்பேறித்தனப்பட்டோ, மனவிருப்பமில்லாமலோ நான்விடுமுறை  எடுக்கவில்லை.
   நேற்று மாலை ஹாக்கி விளையாடும் போது எனது எதிர் டீம் ஆட்டக்காரரின் பேட் எனது வலது காலில் கீழ்ப்பக்கம் அடித்து விட்டது.பட்ட இடம் ஏதாவது சதைப்பக்கமாக பார்த்து பட்டிருக்கலாம்.மிகசரியாக எலும்பில் பட்டுவிட்டது.நல்ல வலி.தாங்கமுடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.
  அதற்கப்புறமாக அரை மணி கழித்து எழுந்து திரும்ப விளையாடிய போது ஒன்றும் தெரியவில்லை.விளையாடிமுடித்துவீட்டிற்கு வந்ததிலிருந்து நல்ல வலி.
   அப்படியே படுத்தும் விட்டேன். படுத்திருந்தவனை எழுப்பி கடைக்கு அனுப்பினார் அப்பா.
சமயத்தில்அவருடையதொந்தரவும்,படுத்தல்களும் அதிகமாகிபோகும்.கடைக்குப் போய்விட்டு
வந்துதான் விஷயத்தை சொன்னேன் காலைக் காட்டியவாறு/
   “மொதல்லயே சொல்லவேண்டியதுதான?நான் போயிட்டு வந்திருப்பேன்ல” என்ற அப்பாவை ஏறிட்டநான்"சரியாப்போகும்ன்னுநெனைச்சேன்,போகல,தவுரஎதையுமேதாங்கமுடியைன்னா அப்புறம்சொல்லறதுதானஎன்னோடவழக்கம்இதுகொஞ்சம்தாங்குறமாதிரி இருந்துச்சு.
விட்டுட்டேன்”.   
    சொன்ன நான் பொதுவாக சந்தோஷங்களை மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதும்,
துக்கங்களை மனதுக்குள் போட்டு பூட்டி அதன் சாவியை தொலைத்து விடுவதும்தான் இதுநாள்வரையானஎனது பழக்கமாய்இருந்தது.திடீர்எனஅதை மாற்றிக்கொள்ளச் சொன்னால்
எங்கே போவது நான்.  இந்த விஷயங்களையும் சேர்த்துக்கொள்கிறேன் அந்த வரிசையில் என வலியோடுதான் சொல்கிறேன்.
  ஆனால் இப்படியெல்லாம் அடிபட்டாலும் கூட எனக்கு ஹாக்கியின் மீது இருக்கிற மோகம் குறையவில்லை.வெள்ளைநிறத்தில் உருண்டையான பந்தும்,அதன் மேனியில் விழுந்திருக்கும் புள்ளிப்புள்ளியானசின்னச்சின்ன வட்ட பள்ளங்களும் எனது இடுப்பளவு உள்ள ஹாக்கி பேட்டும் பார்க்க மிக அழகாகவும்,மனம் பிடித்தும் இருக்கும்.
  நீண்டு உயர்ந்து இடுப்பளவு இருந்த பேட்,பந்து  என இரண்டையும் வாங்க எனது சேமிப்பு பணத்தைதான் பயன்படுத்தினேன்.மொத்தம் ரூபாய் 700 ஆனது. என்னிடம் இருந்தது ரூபாய்600 மட்டுமே. “எதிர்கால சேமிப்பில் திருப்பிக்கொடுத்து விடுகிறேன் நிச்சயமாக” என்கிற உறுதியின் பேரில் ரூபாய் 100 எனது தாயிடம் வாங்கிக்கொண்டு தந்தையுடன்கிளம்பியமுன்மாலை நேரத்தில் மறையப்போன சூரியன் எங்களைப்பார்த்து சிரித்ததாய் ஞாபகம் எனக்கு.
   கூடுதாலாக விலை சொல்லி, கூடுதலாக விலை கொடுத்து மிகவும் சந்தோசத்துடன் வாங்கி வந்த பேட்டையும்,பந்தையும் வைத்து விளையாட நன்றாகவும் மனம் பிடித்து போயிருக்கிறது இது நாள் வரை/
 அதிகாலை எழுந்து சீக்கிரம் பள்ளிக்கு கிளம்பிய போதிலும்,பள்ளியிலிருந்து மாலை தாமதமாக வீடு வந்த போதிலும் கூட அதன் பிறகு சாப்பிட்டு விட்டு பாடம் படித்து மாங்கு,மாங்கு என பக்கம்,பக்கமாக வீட்டுப்பாடங்கள் எழுதி விட்டு இரவு தாமதமாக தூங்கிய போதிலும் கூட விளையாட்டின் மீதும் அந்த நேரத்தைய சுவையான  நிகழ்வின் மீதும் எனக்கு
ஈர்ப்புஏற்படாமல்இல்லை.
  அப்படி ஈடுபாட்டுடனும்,  ஈர்ப்புடனும், மனலயித்தலுடனுமாய்   பாடங்களை
படிக்கவும் அவைகளின் மீது ஈர்ப்பு ஏற்படவும் வழியிருந்தால் சொல்லுங்கள் டீச்சர்/

10 comments:

Anonymous said...

எப்படி சார் நேர்த்தியாக, பொட்டிலறைந்தாற் போல் எழுதறீஙக! அருமை! அருமை!

விச்சு said...

எதார்த்தமான உண்மை. விளையாட்டின் மீது உள்ள ஈர்ப்பு படிப்பின் மீது ஏன் வர மறுக்கிறது. அது குழுவாக விளையாடுவதாலும் சுதந்திரம் இருப்பதாலும்... படிப்பையும் மனனம் செய்யாமல் சுதந்திரமாக தேர்வு எழுதும் முறை நம் கல்வித்திட்டத்தில் வந்தால் ஒருவேளை ஈர்ப்பு ஏற்படலாம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல வேள்விதான்...

பாடங்கள் மீது ஈர்ப்பு என்பது மிக குறைந்த மாணவர்களுக்கு மட்டுமே இருக்கிறது...

இன்றை சமூகம் எதிர்பார்ப்பதும் இதைத்தான் கல்வியில் ஆர்வத்தை தூண்டுகின்ற கல்வி முறை, மாணவர்களை வருத்தாத ஒரு கல்வி முறை வேண்டும் என்றே வாதிடுவார்கள்...

ஆர்வத்துடன் படிக்கிற பாடமுறை வந்து விட்டால் அடிபடுகிற விளையாட்டை தாங்கள் விரும்ப மாட்டீர்கள்...

நல்லதொரு கருத்து...

vimalanperali said...

வணக்கம் கவிதைவீதி சௌந்தர் சார் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக என ஒற்றை வரியில் முடித்து விட முடியவில்லை.
ஆர்வத்துடன் எது செய்தாலும் ஓகேதானே,
மனம் விரிந்தும்,விரிந்தும் செய்யும் செயல்களில் கிடைக்கிற பலனுக்கும்,திணிக்கப்படுகிற வேலையால் கிடைக்கிற பலனுக்கும் மிகவும் வித்தியாசம் இருக்கிறதுதான்,திணிக்கப்படுகிறதை இன்றைய மாணவர்கள் துப்புகிறார்கள்.விருப்பமில்லாமல்/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நலம்தானே?ஈர்ப்புகளை ஏற்படுத்தவேண்டியவர்கள் யார் என தெரியவில்லை/

vimalanperali said...

வணக்கம் அடசயா அவர்களே/தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி/

சசிகலா said...

சொன்ன நான் பொதுவாக சந்தோஷங்களை மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதும்,
துக்கங்களை மனதுக்குள் போட்டு பூட்டி அதன் சாவியை தொலைத்து விடுவதும்தான் இதுநாள்வரையானஎனது பழக்கமாய்இருந்தது.திடீர்எனஅதை மாற்றிக்கொள்ளச் சொன்னால்
எங்கே போவது நான். இந்த விஷயங்களையும் சேர்த்துக்கொள்கிறேன் அந்த வரிசையில் என வலியோடுதான் சொல்கிறேன்.//
நிறைய பேரின் வழக்கமும் இதில் தெரிகிறது அருமையான பகிர்வு .

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.படைப்பின் பகுதியை எடுத்து தனியாக பாராட்டுவது நல்லாயிருக்கு,தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி.

ஹேமா said...

ம்...இதையேதான் பிரகாஷ்ராஜின் தோனி என்கிறபடமும் சொல்லியிருக்கு.பெற்றவர்களும் ஆசியர்களும் பாடங்களைத் திணிக்கிறார்களே தவிர ஆசையாய் ஊட்டுவதில்லை.ஆனால் வெளிநாடுகளில் முற்றிலும் மாறான பாடத்திட்டங்கள்.பிள்ளைகள் விரும்பிப் பாடசாலைக்குப் போகிறார்கள் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.யதார்தங்களில் கால் பதிக்கிற தமிழ் படங்களின் வருகை மனதுக்கு சந்தோசமளிக்கிறது,
பிரகாஷ்ராஜ் போன்றவர்களின் முன் கையெடுப்புக்கு மிகப்பெரியதாக நன்றியும் சொல்லத்தோணுகிறது.
தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக நன்றி.