19 Mar 2012

பூவாளி,,,,,,,,,,,,


                                            
  தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து  பெரிதாக என்ன செய்து விட்டோம் அவைகளுக்கு?
     கூடவேகொஞ்சம்பிரியமும்,பாசமும் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். நான் ஒரு குடம்,எனது மனைவி ஒரு குடம்,மூத்த மகன் ஒரு குடம்,இளைய மகள் இரண்டு  குடங்கள்  எனமாற்றி,  மாற்றி  ஊற்றிய  தண்ணீர்  மண்  பிளந்து,  துளிர்த்து
நெடித்தோங்கி,உயர்ந்துகிளைபரப்பி,பூவும்,பிஞ்சும்,இலைகளும்,காய்களுமாய் நிற்கிறது.
     அதென்ன அவள் மட்டும் இரண்டு குடம்?ஆமாம் அவளுக்கு மரங்களின் மீது அலாதிபிரியம்உண்டு.மனிதர்களீன்மீதும்தான்/
    வேப்பமரங்கள் இரண்டு+ஒன்று=மூன்று,பன்னீர் மரங்கள் இரண்டு,அதோ நீங்கள் பார்க்கிற அந்த சிறு வெற்றிடத்தில் நின்ற நெல்லிக்காய் மரம் நிலைக்கவில்லை.பூச்சி விழுந்து இறந்துபோனது.அது தவிர  நீங்கள் நிற்கிற  இடத்திலும், மூலைக்கொன்றாயும்,
வரிசைதப்பியுமாய் ஊன்றி வைத்திருந்த நெட்லிங்கம் மரங்கள் வேர் புழு வந்து இறந்து போனது.
     மனிதர்களுக்குமட்டும்தானா,மரங்களுக்கும்,தாவரங்களுக்கும்நோய்வந்து விடுகிறதுதானே?
   நட்டு  முளை விடுக்கிற  நேரத்தில்,  பயிர்விளைந்து முழுதாகபலன்தருகிற நேரத்தில்,
இவை இரண்டும் இல்லையென்றாலும் கூட இடையில் வந்து விழுந்து விடுகிற நோயில் கருகிப்போகிற அல்லது மடிந்து விடுகிற நோய் தாக்கிய பயிர்களையும்,இது மாதிரியான மரங்களையும் நட்ட விவசாயிநிலத்தில்விதைத்ததைகையில்அள்ளிபலனாய் பாஅர்க்கிற வரைமனதில்ஈரத்துணியைசுற்றிக்கொண்டுதான் திரியவேண்டியிருக்கிறது.
     எங்களைப்போலவீட்டைசுற்றியிருக்கிறபக்கவாட்டுவெளிகளில்மரம்,செடி நடுகிறவர்
களின்கவலைமனதரிக்கிறஅளவிற்குஇல்லாவிட்டாலும்கூடமனமரிக்கிறவர்களின்  கவலையை  தன்னில்   தாங்கப்பழகிக்  கொண்டவர்களாகவும்,  மரங்களின்  மீது
தனி காதல் கொண்டு இப்படி இரண்டு குடங்கள் தண்ணீரை மொண்டு கொண்டு ஊற்றுவாள்.
    அதிலும் அந்த பன்னீர் மரங்கள் மீது அவளுக்கு தனிபிரியம் உண்டு.அதுதானே பூக்களைச்செரிகிறது.இலைகள் உதிர காய்கள் விழ,பிஞ்சுகள் கிடக்க மரங்களிலிருந்து செரிந்த பூக்களை பூ ஒன்று நடமாடி பெறக்கி எடுத்த காட்சியை காண கண் கோடி வேண்டும் போலிருக்கிறது.
   பன்னீர மரப்பூக்களை பொறுக்கி நீட்டிய உள்ளங்கையில் வரிசையாக வைத்து பார்ப்பாள்.வலது கையால் எடுத்து இடது கையில் அடுக்கி வைத்து இரண்டு கைகளாலும் தொடுத்து தலையில் சொருகிக்கொண்டு வளைந்த நாணலாய் நடந்து வருவாள்.
    அவளது ஆசைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.ஆனாலும் அணையிட்டு விடவும் முடியவில்லை.செய்யட்டுமே இதுமாதிரியானவைகளை அவள் மனலயங்களிலிருந்து மீட்டெடுத்தவாறு/
    “ஏன் இப்படியெல்லாம் செய்யிற அசிங்கமா” எனச்சொல்லும் அவளது அண்ணனின் காதில் இரண்டு பூக்களை சொருகிவிட்டு நாக்கை சுழற்றிக்கொண்டு முன் வரிசைபற்கள் தெரிய வாய் கொள்ளாமல் சிரிப்பாள்.
     “போ அங்கிட்டு” என அந்த சப்ததை பார்த்து அதட்டும் அவளது அப்பாவிடம்  “ஊம் அவன் மட்டும் நேத்து ஏன் ஜாமெண்ட்ரிபாக்ஸ தூக்கீவச்சிக்கிட்டான்”.என முகப்பலிப்புக்காட்டி அப்பாவின் கழுத்தை கட்டிக்கொள்ளுகிற அவளைப்போல் உள்ள பிள்ளைகளின்,பையன்களின் பேனா, ஜாமெண்ட்ரி பாக்ஸ் வரை மறைந்து  போகிறதாய் சொல்லப்படுகிற புகார்கள் வீடுகளெங்கும் நிறைந்து போய்த்தான் உள்ளது.
   “ஏன் அப்படி”? அவைகளைமட்டுப்படுத்த வேண்டியதுதானே?என்கிற கேள்விகளுக்கு “விடுங்கள் அதெல்லாம் வேண்டாம்,நடந்து விட்டுப்போகட்டும இது மாதிரியானநிகழ்வுகள்என்பதேபதிலாய்இருக்கிறது.
    அடித்துக்கொள்கிறசகோதர,சகோதரிகளும்காணாமல்  போகிற  அவர்களது   பேனா,
பென்சில்களும்,ஜாமென்ட்ரிபாக்ஸீகளும்தொடுத்துச்சொல்லப்படுகிறஅவர்களது
புகார்களும்இருக்கிறவரை வீடுகள் நிறைந்தே காட்சியளிக்கிறது.
    அந்தகாட்சிகளின்வெளிப்படுதலில்அன்பும்,கோபமும்,கண்டிப்பும்மன லயங்கலிருந்து மீட்டெடுக்கப்படுகிறநெகிழ்தலும்நடந்துபோய்விடுகிறதுதான்.
    அப்படியான  நடப்புகளும்,  பிள்ளைகளின்   அசைவுகளும்,  பூப்பெறக்கல்களும்,
பூத்தொடுத்தல்களும்  நன்றாகவேயிருக்கிறது  பார்ப்பதற்கு. மனம்லயிக்கவும்,ரசிக்கவும்
முடிகிறது.
    வாய்கொள்ளாஅவளதுசிரிப்பிலும்,கைவிரித்து மலர்ந்த அவளது மென்ஸ்பரிசத்திலும் மனம்அவிழச்செய்து விடுகிறாள்.
   தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து என்ன செய்தோம் அவைகளுக்கு?கூடவே கொஞ்சம்,பிரியமும் பாசமும்/

17 comments:

 1. துவக்க வார்த்தைகள் மீண்டும் இறுதியில் சொல்லப் படும்போது
  அதன் அர்த்தம் அழகாய் மலர்ந்து மனதிற்குள் மணம் வீசிப் போகிறது
  படிம யுக்தி அருமை
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பாசத்தை பற்றியும், சில கோபங்கள் பற்றியும் அருமையான வரிகள்

  ReplyDelete
 3. தாவரங்களோடு பேசிக்கொள்வதிலும் தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது . அருமையான பகிர்வு .

  ReplyDelete
 4. வணக்கம் ரமணி சார்,நலம்தானே?படிமங்களாய் நன்னில் விளையாடுகிற வாழ்விலிருந்து கற்றுக்கொள்கிறவையாக நிறையவே இருக்கிறது.நன்றி தங்கலது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் பாலா சார் நலம்தானே?
  நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் சசிகலா மேடம்.தவரங்களோடு மட்டுமல்ல.எல்லோரோடும் பேசவேண்டும் என்பதே எழுத்தின் நோக்கமாய் இருக்கிறது.

  ReplyDelete
 7. கடைசியில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மையும், கவித்துவமும் நிறைந்தவை.

  ReplyDelete
 8. //தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து என்ன செய்தோம் அவைகளுக்கு?கூடவே கொஞ்சம்,பிரியமும் பாசமும்///
  எவ்வளவு பொருள் பொதிந்த வரி சகோ!அருமை.

  ReplyDelete
 9. அருமையான பகிர்வு .

  ReplyDelete
 10. வணக்கம் மாலதி மேடம். தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி.

  ReplyDelete
 11. வணக்கம் சென்னை பித்தன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 12. வணக்கம் விச்சு சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 13. வணக்கம் விச்சு சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 14. அசத்தலாக இருக்கின்றது. தொடருங்கள் சகோ!

  ReplyDelete
 15. வணக்கம் அட்சயா அவர்களே,
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 16. தாவரங்களும் உணர்வு இருக்கிறதாமே.நாங்கள் சுகம் விசாரித்துப் பேசிப்பழகினால் நிறையப் பூக்கள் காய்கள் தருமாம்.என் தாத்தா சொன்னது !

  ReplyDelete
 17. வணக்கம் ஹேமா மேடம்.
  உணர்வுகளற்றதாக எது இருக்கிறது இப்போது?ஜடப்பொருட்களை தவிர்த்து/நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete