25 Mar 2012

இறகு,,,,,,,,,


அம்மா வாருங்கள்,
அப்பா வாருங்கள்,
சகோதரியே வாருங்கள்,
சகோதரனே வா
உங்களது பிள்ளைகளை அழையுங்கள்.
சேர்ந்து நில்லுங்கள்.
குழுவாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வோம்.
ஞாபகார்த்தத்திற்கு இருக்கட்டும்.
வாருங்கள் என்ற போது
எதற்கு புகைப்படம்
எதற்கு சேர,
எதற்கு ஞாபகார்த்தம்
அதெல்லாம் வேண்டாம்.
நேற்று நீங்கள்,
இன்று இவர்கள்,
நாளை நாங்கள்,,,,,,,,
என பதில் சொல்லி விட்டு ஓடிவிட்டன
பட்டாம் பூச்சிகளாய்,
சகோதர,சகோதரனின் பிள்ளைகள்/

14 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலத்தின் உண்மை....

அழகிய கவிதை

பாலா said...

ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இதுதான் இன்றைய நிதர்சனம்.

arasan said...

உணர்ச்சி வரிகளுக்கு என் நன்றிகள் ...சார்

குட்டன்ஜி said...

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதை

சென்னை பித்தன் said...

அதுதானே வாழ்க்கை!
நன்று

சசிகலா said...

.நேற்று நீங்கள்,
இன்று இவர்கள்,
நாளை நாங்கள்//
என்ன ஒரு யதார்த்தமாய் வாழ்வியலின் இலக்கணத்தை சொல்லீடிங்க அருமை .

விச்சு said...

நேற்று நீங்கள்.. இன்று இவர்கள்.. நாளை நாங்கள் சொல்லாத செய்தியை சொல்வதாக உள்ளது. சில சங்கடங்களும் சில சந்தோசங்களும் அனைவருக்கும் பொதுவென்பதுபோல் உள்ளது.

vimalanperali said...

வணக்கம் கவிதை வீதி சௌந்தர் சார்.காலத்தின் உண்மை சரியானதை சரியாக சொல்லிச் செல்கிறது.தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும்,
வருகைக்குமாய் நன்றி/

vimalanperali said...

வணக்கம் பாலா சார்.நலம்தானே?நிதர்சனங்கள் நிறைந்த வாழ்க்கை.
நன்றி உங்களது வருகைக்கும்
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அரசன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் குட்டன் சார்,நலம்தானே?நண்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னை பித்தன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நலம்தானே?
நன்றி. தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/