18 Apr 2012

சோலைவெளி


ரயில்வே கேட் அடைப்பில்
நின்றிருந்த வேனின்
பின்புற கண்ணாடியில்
உரிந்து தெரிந்த
கண்ணாடிப்பேப்பரின்  மிச்சம்
மானின் முகம் போலவே
காட்சிப்பட்டு தெரிகிறது.
வேனின் உள்ளே அமர்ந்திருந்த
புள்ளியற்ற இளம் மான்கள்
சிரிப்பும்,கும்மாளமுமாய்
வேலை முடிந்து வீடு
திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்
கண்ணாடியில் தெரிந்த
மான் உருவம் சாலை பார்த்து
சிரித்துக்கொண்டிருக்க
அடைக்கபட்டிருந்த
ரயில்வேகேட் திறக்கப்பட்டதும்
அந்த  இடம் சோலையாய் பூத்து நகர்கிறது.

10 comments:

விச்சு said...

//புள்ளியற்ற இளம்மான்கள்// உங்கள் கற்பனைக்குதிரை எங்கெங்கோ பறக்கிறது. //வண்டி நகர்ந்தவுடன் அந்த இடம் சோலையாகக் காட்சியளிக்கிறது//. அருமையான எண்ணத்திலிருந்து வெளிப்பட்ட வரிகள்.

சசிகலா said...

அடைபட்ட நேரத்தில் கூட காட்சியை ரசனையாக்கிய விதம் அருமை .

அம்பலத்தார் said...

மான்களின் முகங்களை நானும் உங்கள் கவிதையில் ரசித்தேன்

ஹேமா said...

புள்ளியில்லா மான்களை அதிகமாகவே ரசித்திருக்கிறீர்கள் விமலன் !

arasan said...

இயல்பான வரிகளில் இனிமை கொட்டும் வரிகள் ..
என் அன்பு வாழ்த்துக்கள் சார்

vimalanperali said...

வணக்கம் அரசன் சார்,நலம்தானே?நன்றி தங்கலது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.ரசிப்பின் மூலம்தானே பொதுவாக எழுத வைக்கிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அம்பலத்தார் அவர்களே நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.அடைபடல்கள் பலயோசனைகளை தோற்றுவிப்பது இயல்புதானே/நன்றி தங்களஹ்டு வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/