19 Apr 2012

வருடல்,,,,,,


                 
  பாடுகிற பாட்டின் சப்தத்திற்கு இடைஞ்சலாய் இருக்கக்கூடாது என்பதற்காக சற்றே உள்வாங்கி வீட்டின் வாசற்படியில் வந்து அமர்ந்து கொள்கிறேன்.
 அப்புறமாய் எனது கைபேசியில் பேசுகிறேன்.அல்லது பேசுவதற்காய் நம்பரை அழுத்துகிறேன்.சிறு குழந்தையின் மேனி தொட்ட சந்தோசம் கிடைக்கிறது பட்டன்களை அமுக்குகிறபோது/
    நம்பர்களை அழுத்தி பேசமுற்படுகிற,பேசப்போகிற எதிர்தரப்பு நபர் இந்நேரம் எங்கிருப்பார்?என்ன செய்து கொண்டிருப்பார்? பேசும் மனோநிலையில் இருப்பாரா அல்லது,,,,,,,,,,,,,,எதுவும் தெரியவில்லை.
  சிங்கநாதன்தான் போன் பண்ணியிருந்தார்.எனது கைபேசியில் அழைப்பொலி வந்ததும் அமர்த்திவிட்டார் சிறிது நேரத்தில்/
   அந்த சிறிது நேரஇடைவெளியில் நான் போய்போனைஎடுக்காதது தவறாகிப்போனது.
காலம் தப்பிய முக்கிய விஷயம் போல எனது தாமதம் காட்சிப்பட்டு தெரிந்தது.
 நல்ல அழகான அழைப்பாய் அது.நல்ல பாடல்களின் முதல் வரிகள் என் காதில் எட்டெடுத்துவைத்துஎன்னைதொட்டநேரம் டக்,,,,அமந்துவிட்டது  சப்தம்.
 நிசப்தங்களின் எதிர்பதம் சப்தம் என்கிறார்கள்.அதை கண்முன்னே கண்ட மௌன சாட்சியாக நான் கைகட்டி நின்று கொண்டு/
  அலை வீசி தொட்டுச்செல்கிற மனம் பிடித்தவர்க்களின் இளம் சிரிப்பு ஒன்று சட்டென்று காணாமல் போனது போல மின்னலாய் வந்து அமர்ந்து விட்ட அழைப்பின் குரலை யாரென அலசிப்பார்த்தபோது அட நம்ம சிங்கநாதன்தான்.
  அவருக்குபோன் பண்ண வெளியில் வந்து அமர்ந்த நேரம்தான் மேற்கண்ட காட்சியின் முகப்பு விரிந்து/
  வீட்டின் உள்ளே அமரமுடியவில்லை.அடுப்பு மேல் அமர்ந்திருந்தது போலவும் செங்கல் சூளையில் இருந்தது போலவுமாய் இருந்தது.
  வேர்த்து வடிந்த உடலெங்கும் பரவியிருந்த கசகசப்பு கரண்ட் வேறு இல்லாததால் எரிய ஆரம்பித்தது.
   ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு சொட்டு எலுமிச்சம்பழச்சாறு விட்டு குடித்தால் உடல் எரிச்சல் போகும் என எங்கோ யாரோ சொன்னதை கேட்ட ஞாபகம் நினவை உதைக்கிறது.
 எப்போதாவதுஒருமுறை போனால் போகிறது என செய்து பார்க்க முடிகிறது.மற்றபடி அதையெல்லாம் கடைபிடிப்பதுஇல்லை.நல்ல பழக்கம் என/
   வீட்டினுள் கிடந்த வயர் கட்டிலை வாசல் முன் போட்டு அமர்ந்திருந்த நேரமாய் மிதந்து வந்த பாடலின் மென்னியை பிடித்து அழுத்தி விடக்கூடாது எனவும்,அதன் வாயை பொத்தி விடக்கூடாது என்கிற நினைப்புமேலோங்கபடியில் அமர்ந்து போன் பண்ணுகிறேன்.மனதில்லா மனதுடனும்,பாடலை கேட்க முடியாமல் போய் விடுமோ என்கிற ஆதங்கத்துடனுமாய்/
  நிலவு பெய்த இரவு 9 மணிப்பொழுதின் அரை ,குறையான நிசப்தம்.வெப்பம் வீசிய வெம்மை காற்று.சூடாய் விரிந்திருந்த வீட்டின் முன் வெளி.வீட்டின் பக்கவாட்டு வெளியில் முளைத்துத் தெரிந்த மூன்று வேப்பமரங்கள்,இரண்டு பன்னீர் மரங்கள் மற்றும் இல்லாதிருந்த பூச்செடிகள் இவற்றுடன் வீட்டின் எதிர் சாரியில் வீடு கட்டுவதற்காய் குவித்து வைக்கப்பட்டிருந்த  செங்கல், மணல், ஜல்லி,கற்கள் இவற்றை கடந்துகாட்சிப்பட்டுதெரிந்தஎல்லாவறையும்பார்த்தவாறும் அவற்றுடன் பேசியவாறுமாய் கட்டிலை விரித்து அமர்ந்த போது பக்கத்து வீட்டுக்காரரும் அப்படியே செய்திருந்தார்.
 மேற்சொன்னகாட்சிகள் யாவினாலும் பாதிக்கப்பட்ட மனிதராய் இப்படி வந்துநொந்துஅமர்ந்திருக்கலாம்போலகாட்சிப்பட்டஅவரதுகைபேசியிலிருந்தோ,FM லிருந்தோ ஒலித்த பாடலின் மென்னியை பிடிக்கவும்,
வாய் பொத்தவும் மனதின்றி வாசல்படியில் அமர்ந்து எனது கை பேசியில் 
பேசிக்கொண்டிருக்கிறேன். 

7 comments:

 1. யதார்த்தமான வரிகளில் இயல்பாய் நடப்பவற்றை அழகாக பதிவு செய்கிறீர்கள்.

  ReplyDelete
 2. வணக்கம் விச்சு சார்.நலம்தானே?
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. காட்சிகளை எத்தனை அழகாய் விரிக்கிறீர்கள்.அதுவே கதைக்கு அழகு !

  ReplyDelete
 4. மிக அழகான இயல்பான எழுத்து நடை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வணக்கம் ஹேமே மேடம்,காட்சிகளின் அடுக்குகள்தானே நம்மை எழுத வைக்கிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன் அவர்களே/நன்றி தங்களது வருகைக்ம்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete