22 Apr 2012

கசப்பு,,,,,,,

                  
 வியர்வைபிசுபிசுத்தஉடலில்ஒட்டிஉதிர்ந்தவேப்பம்பூக்கள் மஞ்சளாயும்,வெளிர் பச்சைநிறம் காட்டியுமாய்/
  மரத்திலிருக்கிறபோது வெள்ளை கலர் காட்டி மாயம் செய்த பூக்கள் உதிர்ந்து உடலில் ஒட்டிய கணம் கலர் மாறி காட்சிப்படுவதாகவும்,கண் சிமிட்டுவதாகவும்/
 “பூவே,பூவே நலம்தானா?எங்கிருக்கிறாய்,என்ன செய்கிறாய் என நான் உன்னை கேட்கப்போவதில்லை.நலம்நலமறியஆவல்எனஉனக்குமடல் எழுதப்போவதுமில்லை.
  உழைப்பின் மக்கள் யாரோ ஊன்றிய விதையில் விருட்சமாய் வளர்ந்து விரிந்து  நின்று அதிசயம் காட்டுகிறநீ உனது வழித்தோன்றலில் எத்தனையாவது வித்து என தெரியவில்லை. நாங்களும் ஊணி விட்டோம்.நீயும் வளர்ந்து காட்சி தருகிறாய் கிளை விரித்தும், உனது ஆகுருதி காட்டியுமாய்/
 மண் பிளந்து துளிர்த்து,வளர்ந்து,கிளை பரப்பி, நெடித்தோங்கி காட்சியளிக்கிற உனது ஆரம்பம் ஒரு சின்ன கன்றில் ஆரம்பித்து சுழியிட்டது.இப்போது என்னை அண்ணாந்து பார்க்கவைத்துஎன் மீது பூசெரிகிறாய்.
 சின்னதாக குழிபறித்து மலர்ந்து சிரித்த மண்ணை இரண்டு கைகளாலும் ஓரம் தள்ளி உன்னை பதியனிட்டு நிற்க வைத்த நேரம் ஐந்தாறு இலைகளுடன் கம்பீரம் காட்டி நீ சிரித்து நின்ற உருவம் இன்னும் மனதில் உறைந்து நின்று காட்சி தருவதாக/
 கரம்விரித்து நிற்கிற சின்ன பிஞ்சு நடனமிடுவது போலவே இருந்தது பார்ப்பதற்கு.அது ஏனென சரியாக சொல்லத் தெரியவில்லை.அல்லது எதற்கு என புடிபடவும் இல்லை.
  இப்படியான அல்லது இதற்கு ஒத்த மாதிரியான காட்சிகளை பார்க்கையில் மனது லேசாகியும் அவிழ்ந்தும் போய் விடுகிறதுண்டு.
  கரடு தட்டாத மனங்களில் இப்படியான ஒரு மென்மை பூக்கும் என உன்னை மாதிரி வளர்ந்து பூச்செரிந்த மனிதம் ஒன்று மனதில் வார்த்தை பதியனிட்டு சென்றதாய் ஞாபகம்.
 உன்னை நட்டு வேலியிட்டு தினம் ஒரு முறை தண்ணீர் விட்டு  உன்னை ஆடு,மாடு தீண்டாமல் அவைகளின் நாவுகளிலிருந்து காப்பாற்றி ,,,,,,,(அவைகளும்தான் என்ன செய்யும் பாவம்,வயிறைபற்றி இழுக்கிற பசியின் பிராண்டலுக்கு ஏதாவது இட்டு விடலாம்என்கிற நப்பாசையில் வந்து வாய்வைக்கிறதுதானே?) அதில் சின்னவளுக்கும்,
பெரியவனுக்குமாய் கனத்த போட்டி.யார் முதலில் தண்ணீர் ஊற்றுவது என/
 இப்படி நடக்கிற பல சமயங்களில் போட்டியின் நடுவராக பங்கேற்கிற நானோ, எனது மனைவியோஅவர்களைசமாதானம் செய்து தடவிக்கொடுத்து நைசாகப்பேசி வாங்கி நாங்கள் வாங்கி ஊற்றி விடுவோம்.
 அதற்கு ஒரு தனி பஞ்சாயத்து நடக்கும்.அப்படியான நாட்களில் ஒரு மணி அல்லது அரை மணி வரை அவர்களது கோபமும், மனதிருகலும் நீடிக்கும்.
  அப்படியான கோபத்தையும்,மனதிருகைலையும்நீவிஎடுத்துவிடுவதற்காகவே உன்னை போல இன்னும் இரண்டு கன்றுகள் ஊன வேண்டியதாயிற்று.
   அதற்கும்உன்போலஎல்லாம்செய்வித்தும்கூடஉன்போல்வளர்ச்சி காட்டவில்லை.
அதில்அவர்களிருவருக்கும்லேசானதொருவருத்தம்.தங்கையின்செடி இது,அண்னனின் செடி இது,அதன் வளர்ச்சி அப்படி,இதன் வளர்ச்சி இப்படி,,,,,,,,என சீரற்று வளர்ந்து நிற்கிறது என்கிற வருத்தத்துடனும்,மனத்தாங்கலுடனுமாய் ஓடிய அவர்களது சிறிதே அளவான நாட்களை தொலைக்காட்சி தன்வசம் தத்து எடுத்துவைத்துக் கொண்டது.          
  தண்ணீர் ஊற்றுவதை மறந்து பின் தள்ளிவைத்து விட்டார்கள்.அவர்களது மனதின்
அடுக்குகளிலிருந்து சற்றே பின் வாங்கியும்,தள்ளப்பட்டுவிட்டுமாய் தெரிந்த அந்த வேலை எங்களிருவரின்(நான் மற்றும் எனது மனைவி)கவனத்தால் சிறப்பு பெற்றது.
 அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்,இப்படி வியர்வை பிசுபிசுக்கிற உடலில் பூச்செரிகிற நீமுன்பு இலை உதிர்த்தாய்,இப்போது பூஉதிர்க்கிறாய்,பின் பிஞ்சுகளை காய்களை,பழங்களை அள்ளி,அள்ளி இறைப்பாய் அல்லது உதிர்ப்பாய். இவைகளை உடல் தாங்கி கொள்கிறது சரி.வீட்டைச்சுற்றி  இருக்கிற பக்கவாடு வெற்றிடம் தாங்குமா  எனத்தெரியவில்லை.
  ஒரு நாள் கூட்டி அள்ளாவிட்டால் நிறைந்து விடுகிறது.மொட்டை மாடியிலும் அப்படியே/என்ன செய்ய?
 “உங்களது வீட்டு வெளியில் சில மரங்கள் நட்டால் உங்களது வாழ்நாள் கூடும் என இதைப்படிக்கிறவர்களைப்போலஒருபெரியமனிதர்சொல்லிப்போனதாக ஞாபகம்./
   ஆனால்இப்போதுமரமாவது,மண்ணாவதுஎல்லாமேதுட்டு,துட்டுஎன ஆகிப்போனது.
துட்டு உருமாறி பணமாக காட்சியளிக்கிறபோது இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அதன் மீதான மோகமும்,பிரேமமும் கவிந்து விடுகிறது.
 மண்ணையெல்லாம்கட்டம்கட்டி,படம்வரைந்து, விளைச்சல் நிலங்கள் மீது பொக்லைன் இயந்திரங்களின் வெப்ப மூச்சை படர விட்டு,மண்ணை மலடாக்கி கட்டிடங்களை நட்டு வைத்துச்சென்ற பின் மரம் நடுவதும்,வாழ்நாள் கூடுவதும் எப்படி சாத்தியபடும் என தெரியவில்லை?
 ஆனாலும் ஒரு சில சமயங்களில்,ஒரு சில நேரங்களில்,ஒரு சில இடங்களில் சாத்தியம் கொள்கிறது இது(காப்பிரைட்கொடுத்துவிட்டாலும்கூட) மாதிரியான மரம் நடுதல்களும் பூச்செரிதல்களும்/
  இன்னும் கூட சாத்தியம் கொள்ளும் பயப்படாதே நீ,உன் இனம் அப்படி ஒன்றும் வேரோடு தூர்ந்தும்,அழிந்தும் போகாது நம்பிக்கையிருக்கிறது.நீ வெட்டப்பட்டாலும் உன் இடத்தில் அல்லதுஉன்னைசமீபித்தோசற்றுதூரம்தள்ளியோஇன்னொருமரம்,இன்னொரு மரம்,
இன்னமும் ஒரு மரம் என முளைக்கும்.
 இப்படி மண் பிளந்து துளிர்த்து,வளர்ந்து ,கிளை பரப்பி ,நெடித்தோங்கி ,ஆகுருதி காட்டி பூச்செரிந்து நிற்கும் அதை தாங்க வியர்வை பிசுபிசுத்த உடலுடன் என்னை போலயாரவதுஒருவர் அல்லது பலர் இருப்பார்.
  நம்பு நீ,அந்த நம்பிக்கையுடனும்,கொஞ்சம் சிரிப்புடனும்,இன்னும் கொஞ்சம் பூச்செரி என் உடலில். மனமுவந்து தாங்கி ஏற்று கொள்கிறேன்.
   போதும்,போதும்நாம்பேசிக்கொண்டதுவையப்போகிறார்கள் இதைபடிப்பவர்கள்,
ரொமபவும்தான் போர் அடிக்கிறீர்கள் என, முடிக்கிறேன் இத்துடன்/
 வியர்வை பிசுபிசுத்த உடலில் உதிர்ந்த வேப்பம்பூக்கள் மஞ்சளாயும்,வெளி பச்சை நிறம் காட்டி சிரித்ததாயும்/    

4 comments:

ஹேமா said...

ஒரு கதையில் பல விஷயங்களின் வாசனை.வேப்பம்பூவின் வாசனை நாசித்துவாரத்தில் இப்போ !

மாலதி said...

நம்பு நீ,அந்த நம்பிக்கையுடனும்,கொஞ்சம் சிரிப்புடனும்,இன்னும் கொஞ்சம் பூச்செரி என் உடலில். மனமுவந்து தாங்கி ஏற்று கொள்கிறேன்.
போதும்,போதும்நாம்பேசிக்கொண்டதுவையப்போகிறார்கள் இதைபடிப்பவர்கள்,
ரொமபவும்தான் போர் அடிக்கிறீர்கள் என, முடிக்கிறேன் இத்துடன்/// ஆப்படி எல்லாம் இல்லை சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள் தொடர்க....

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.பலபூக்களின் வாசனையை முகர்ந்த நாம் சற்று பேப்பம்பூவின் வாசனையயும் நுகர்வோம்/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மாலதி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/