19 Apr 2012

காலவெளி,,,,,,,



உமிழ்நீர் சொட்டநாக்கை
தொங்கவிட்டுஅமர்ந்திருந்த
நாயின்கம்பீரம்
பார்க்க நன்றாகவேயிருந்தது.
முன்னங்ககல்களை ஊன்றி
பின்னங்கால்களை மடக்கி
கண்களை உருட்டி
காதுகள் விடைக்க அமர்ந்திருக்கும்
அதன் கவனம்கலைக்கவிரும்பாமல்
நேர்  கொண்ட பார்வையில்
அதை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்.
நான் கண் உருட்டுபார்க்கையில்
அது பார்வை தாழ்த்திக்கொள்கிறது.
அது கண் உருட்டுப்பார்க்கையில்
நான் பார்வை தாழ்த்திக்கொள்கிறேன்.
நானும் அதுவுமாய் மட்டும்தனித்து
விடப்பட்டிருந்த தேசத்தில்
அது என்னிடம்எதுவோ சொல்லவும்
நான் அதனிடம் எதுவோகற்றுக்கொள்ளவும்
முற்படுவதும் போலவுமாய் தெரிகிறது.  

8 comments:

மகேந்திரன் said...

அடடா...
அருமை நண்பரே...
ஏனைய உயிரினங்களிடம்
நாம் தனித்து விடப்படும் பொழுதுகளில்
பல பாடங்கள் நமக்கு உரைக்கப் படுகிறது
என்பது சத்தியமான வார்த்தை..

சசிகலா said...

தனிமைக்கு துணையாய் நன்றி உள்ள ஜீவன் நிறைய பாடம் கற்று விடலாம் .

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.தனிமைகளில் தத்தளிக்கிற மனது பல சமயங்களில் இப்படி ஏதாவது குறிவைத்து பாடத்தான் செய்கிறது.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்,நலம்தானே?தனிமைகள் கற்றுத்தருகிற பாடங்கள் நிறையவே/அதில் இதுவும் ஒன்றாய்/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

சிவகுமாரன் said...

காலவெளி சோலைவெளி இரண்டு கவிதைகளும் அருமை.
இப்படித்தான் எங்கள் நிறுவனத்தில் நேற்று தண்ணீர் அருந்த வந்த ஒரு வெண்புறாவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் சக அலுவலர் இந்த புறா, management technique ஏதும் கற்றுத் தருகிறதா என்றார்,

ஹேமா said...

என் அப்பாபோல பூனையார்,நாயார் எல்லோருடனும் கதைப்பீர்களோ விமலன் !

vimalanperali said...

வணக்கம் சிவக்குமாரன் சார்,நலம்தானே?எனக்கு தெரிந்த வரை பறவைகள் எப்போதும் நிர்வாகம் செய்ததில்லை,அவைகள் உழைப்பின் அடையாளங்கள்/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.