29 Apr 2012

ஒரப்பு,இனிப்பு,,,,,,,,,


   நான்   முன்னால்   போகிறேன்.  நீ  வா  பின்னால்  மெதுவாக/
   இருசக்கரவாகனத்தின்வேகத்திற்குஈடுகொடுக்காதுசைக்கிள்,உட்கார்ந்து கொண்டே
ஆக்ஸிலேட்டரைதிருகுவதற்கும்,உடல்நோகசைக்கிள்மிதிப்பதற்கும்மிகவும்வித்தியாசம்
இருக்கிறதுதான்.
  அதுவும் இந்த பசி மிகுந்த மதிய வேலையில்வயிறு எக்கி இழுக்க உடலை வளைத்து குறுக்கி உன்னி,உன்னி மிதிக்கையில் உடலும் மனதும் விதிர்விதிர்த்துப் போகிறதுதான்.
 ஆதலால் இதெல்லாம் வேண்டாம்.நான் முன்னால் போக பின்னால் அடியெடுத்து வைத்துஅல்ல,சைக்கிளை மெதுவாக மிதித்துவா, நான் போய்க் கொண்டிருக்கிறேன்
மிதமாகவும்,வேகமாகவும்அல்லாமல்/
   நான்வேண்டுமானால்இருசக்கரவாகனத்தின்மென்னியைப்பிடித்து அதன்  உறுமலை சற்றே அமத்திவிட்டு உன்னோடு நடந்துவரட்டுமா உனது தோள் தொட்டுக்கொண்டும்
உரசிக்கொண்டுமாய்.
 இதில் முக்கியமாக சொல்ல வேண்டிய விசயம் ஒன்று உள்ளது.இப்பொழுது இருக்கிற பையன்களுக்கும்,பிள்ளைகளுக்கும் தனது நண்பர்களுடன் தோள் உரசி சொல்தில் இருக்கிற பிரியம் தனது பெற்றோர்களுடன் வருவதில் இருப்பதில்லை.
  சரி அதுதான்  இன்றைய  இளைய தலைமுறையின் விருப்பமாய் உள்ளபோது நான் என்ன செய்ய முடியும்.
 அது சரி உனது சைக்கிளின் பின்சக்கரத்தில் கோட்டம் விழுந்தும்,இரண்டு கம்பிகள் காணாமல் போயும் இருந்தததே.அழகான வாயில் இருந்த பற்கள் இரண்டு விழுந்து விட்டதைப்போல/
 அதை கடையில் கொடுத்து சரி செய்தாயா? நான் நினைக்கிறேன் உனது வேகத்திற்கு சைக்கிள்ஈடுகொடுக்கமுடியவில்லைஎன.அப்படிஈடுகொடுக்கமுடியாதசைக்கிள்வேஸ்ட்
எனநினைக்கிறாய்நீ.அதை வெளிப்படையாக சொல்வதில் தயக்கமும் காட்டுகிறாய்.     
   இதுமட்டுமல்லஎதையுமேவெளிப்படையாகபேசுவதில்உன்னிடம்இருக்கிற தயக்கம்
சரியானதில்லை.என்னிடம்சொல்லாமல்யாயிடம்சொல்வாய்நீ/      
   இன்னும் சின்னப் பிள்ளையைப் போல அம்மாவின் முந்தானை முனையைப் பிடித்து
திருகிக்கொண்டுஉனதுகோரிக்கையைஅவளிடம்சொல்லிஅவள்அதைஎன்னிடம்
கொண்டுவந்துசேர்ப்பிக்கிறமுறையைகையாள்கிறாய்நீ,அதுசரியில்லை.அதுபோலதான்
சைக்கிளின் விசயத்திலும்இருக்கிறாய் நீ என நினைக்கிறேன்.
  உனது வேகத்திற்கு ஈடு கொடுக்காத சைக்கிள் என்னதான் செய்யும் பாவம்.அதை கொஞ்சம் சூதானமாக கையாளப் பழகிக்கொள்.நமது சத்திற்கு சைக்கிளுக்கு அடிக்கடி செலவு செய்து மாளாது. ஆதலாலே சொல்கிறேன்,கொஞ்சம் கேட்டு வாங்கி காதில் வைத்துக் கொள்.அதை முடிந்தவரை அமல் செய்.அல்லது முயற்சியாவது செய்.
   நமக்கென சைக்கிளை ரிப்பேர் செய்யவும் சரி செய்யவுமாக இருக்கவே இருக்கிறது
P.R சைக்கிள் கடை.சைக்கிள் டயரில் இருக்கிற பட்டன்களின் தன்மையைக்கூட அவர்கள்அறிவார்கள்.அனுதினமும் சைக்கிளோடு பேசிக்கொண்டு இருப்பவர்களாய் அவர்கள் தெரிகிறார்கள்.அவ்வளவு  தூரம்  நுட்பம்  வாய்ந்தவர்க்களாகவும்,  மென்
மனதினராகவும் இருக்கிறார்கள்.
  அதுவும் நம்மைப்போல வாடிக்கையாளர்களுக்கென தனி கவனம் எப்போதுமே அவர்களிடம் இருந்ததுண்டு .அப்புறம் என்ன கவலைஉனக்கு..கையில் காசு இல்லை என்கிற கவலையும்,பேச்சும் அனாவசியம் உனக்கு.நம்மை நம்பி ஆயிரங்களில் கூட கடன் எழுதிக்கொள்ள தயாராய் இருக்கிறவர்கள் அவர்கள்.அது நமது நடப்பின் பால் வந்த நம்பிக்கையில் விளைந்தது. உனக்கு எப்போது கடைக்கு போக வேண்டும் என தோணுகிறதோ அப்போது போய் வா தயங்காமல்/
   நான் போய் அம்மாவிடம் சொல்கிறேன் மகன் வருகிறான் மடல் எதுவும் எழுதாமல் சாப்பாடுஎடுத்துரெடியாகவை என/
  இன்றைக்கு காலையில் இட்லியும் சட்னியும்/பூப்போன்ற இட்லி,அதற்காக எடுத்து தலையில் எல்லாம் சூடிக்கொள்ள முடியாது அதை. நாலு இட்லி, கொஞ்சமாக சட்னி, தோய்த்து  அவசரம்,  அவசரமாக  விழுங்கிவிட்டு  ஓடினேன்  அலுவகத்திற்கு/நீயும்
அப்படித்தான் என நினைக்கிறேன்.
 சாப்பாட்டு நேர அவசரம் என்பது நமதுசமூகத்தில் தவிர்க்க முடியாத மிக மிக்கியமான ஒன்றாக  மாறிப்போகிறது.  வீட்டிலும்,  அலுவலகத்திலும்,  பள்ளி,  கல்லூரிகளிலும்
அப்படித்தான் என ஆகிப்போனது.
  இட்லிக்கான அரிசி இந்த தடவை சரியாக வாய்க்கவில்லைஎன்பதுஉனது அம்மாவின் மிக முக்கிய கவலையாக இருக்கிறது .என்ன செய்ய? இது உனது அம்மாவினது கவலை மட்டுமல்ல,நம் சமூகத்தில் உள்ள பெண்களின் கவலை.
 பெரும்பாலும் ஆர்களது கவலையும்,அன்றாடப்பாடுகளும்  அடுப்பை சுற்றியதாகவே இருக்கிறது.கேட்டால் ஆண்களை குறை சொகிறார்கள்.அவர்கள்தான் நாக்கை ருசிக்கு அடகு கொடுத்து விட்டு இப்படி வீட்டில் உள்ள பெண்களை சமையலில் அது சொட்டை,இதுசொட்டைஎனகுறைசொல்லித்திரிகிறார்கள்.ஆகவே இப்படி பெரும்பாலம் அடுப்பிலேயே வெந்து போவது எங்களது விதியாக உள்ளது என்கிறார்கள்.
என்ன செய்ய சொல்கிறாய்?உறக்கிற உண்மையாக இது உள்ள போது/
   இன்று மதியம் உறைப்பும் இல்லாமல் ,புளிப்பும் மிகாமல் மொச்சைக் குழம்பு வைத்து சாப்பாடு ஆக்கி வைத்திருக்கிறேன் முடிந்த அளவு சீக்கிரம் வாருங்கள் அலுவலகத்தில் இருந்து என அவள் சொன்ன  சொல்  நெஞ்சாக்  கூட்டின்  உள்ளில்  இன்னும்  இழுபட்டுக்கோண்டும்,இனித்துக்கொண்டுமாய்/
 விரைந்து வந்து கொண்டிருந்த  என் முன்னே  பத்தடி இடைவெளில் நீ சைக்கிளில் உடல்தளர்த்தி அமர்ந்து சென்ற போது உன்னை கவனிக்கிறேன் நான்.
  உன்னிடம் சொல்லிவிட்டிதான் இப்போது வந்து கொண்டிருக்கிறேன்.வீட்டுக்கு வா அவள் செய்துவைத்திருக்கிறமொச்சைகுழம்பையும்சாப்பாட்டையும்ஒரு கை பார்க்கலாம் என்கிற  நினைப்புடனும்  அடகு  வைத்து  விட்ட  நாக்கின்  ருசியுடனுமாய் போய்க்
கொண்டிருக்கிறன்.
 ஆனாலும் வர வர சாப்பாடு எல்லாம் கூட பின்னாடிதான்.முதலில் அவளது முகம் பார்க்கவேண்டும்.நாலு  வார்த்தைகள் பேசவேண்டும் அவளைப்பார்த்து. அப்புறம்தான் சாப்பாடு.அப்படித்தான் எங்களுக்குள்.அது,,,,,,,,,,,,,,,,,,/
 சரி வா நான் போய்க்கொண்டிருக்கிறேன் முதலில்.அவளை உனது அம்மா என சொல்லிக்கொள்வதை விட முதலில் எனது மனைவி என சொல்லிக்கொள்வதில் எனக்கு விருப்பம் அதிகம்.
  அதுஅப்படித்தான்திருமணமானநாளிலிருந்துஇன்றுவரைதனதுவிருப்புவெறுப்புகளை
ஓரம்கட்டிவைத்துவிட்டுஎனக்கானவளாய் தன்னை உருமாற்றிக்கொண்டவள்.
 அப்படிஅதிகமாகிப் போன விருப்பு வெறுப்புகளுடனும், பிரியங்களுடனுமாய்
 இன்றுவரை நெசவிட்டு ஓடிக்கொண்டிருக்கிற வாழ்க்கை இனிப்பும்,கசப்பும்    
 விரக்தியும் கலந்த கலவையாய் கலர் காட்டி  ஓடிக்கொண்டிருக்கிறது.
 சாதக,பாதகமற்று.சரி,சரி வா, நான் போய்க்கொண்டிருக்கிறேன் மகனே/

16 comments:

 1. ஒரப்பு இனிப்பு என்றதும் சின்ன புள்ளையில் புளிப்பு இனிப்பு மிட்டாட் தான் நினைவுக்கு வந்தது.

  ரொம்ப இயல்பாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ரசித்தேன்

  சாப்பாட்டை விட முகம் பார்க்க ஆசை இந்த வரிகளில் என் உணர்வுகளை பார்த்தேன்

  ReplyDelete
 2. மிக அருமையாக எழுதுயிருக்கிறீர்கள்.
  ஒரப்பும் இனிப்பும் கலந்து கலக்கியிருக்கிறது.
  பாராட்டுகள்..

  ReplyDelete
 3. கதை வாசித்தபின்தான் தலையங்கத்து ஒரப்பு இனிப்பின் சுவை நன்றாகவே தெரிந்தது !

  ReplyDelete
 4. ம்ம்ம்ம் ....
  ஒரப்பு இனிப்பு
  சுவை

  ReplyDelete
 5. எதார்த்தமான வரிகள், இயல்பாக வெளிப்படக்கூடிய உணர்வுகள். அருமை

  ReplyDelete
 6. வணக்கம் ஹைதர் அலிசார்,நலம்தானே?நாவின் சுவை அரும்புகளில் தங்கிக்கிடக்கிற இனிப்பும்,துவர்ப்பும்,கசுப்பும்,நமது வாழ்வின் இனிமையை பறைசாற்றுவதாகவே என்று இருக்கிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. வணக்கம் மலிக்கா சார்.நலம்தானே/நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 8. வணக்கம் ஹேமா மேடம்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. வணக்கம் செய்தாலி சார்.நலம்தானே?நன்றி தங்களஹ்டு வருகைக்கும்,கருத்துரைக்குமாக.சுவை கலந்து நிற்கிற வாழ்க்கையில் இனிப்பும்,ஒரப்பும் எப்பொழுதும் /

  ReplyDelete
 10. வணக்கம் பாலா சார்.நலம்தானே?வாழ்வில் பளிச்சிடுகிற யதார்த்தங்களில் இடுவும் ஒன்றாக நம் கண் முன்னே/நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. நல்ல பதிவு தொடர்ந்து நல்ல கருத்துக்களை பதிவு செய்யும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

  ReplyDelete
 12. வணக்கம் வேல் முருகன் சார்.நன்றி தங்களது வருகைகும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 13. நண்பரே டாட் காம் ஆக மாறியிருக்கிறேன்

  ReplyDelete
 14. நன்றி.தகவலுக்கு.

  ReplyDelete
 15. இன்றைய பெண்களின் நிலையைப்பற்றி அழகாகச் சொல்லி சென்றுள்ளீர்கள். அடுப்பு...சமையல் இதனைச் சுற்றியே அவர்களது வாழ்க்கை. நல்ல வரிகள். யோசிக்க வேண்டியதும் கூட.

  ReplyDelete
 16. வனக்கம் விச்சு சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete