ஈசல்கள் பறந்த
பெரு வெளியில்தான்
ஆடுகளும்,மாடுகளும்,
நாய்களும்,கோழிகளும்
சமயத்தில் பன்றிகளுமாக
நடமாடித்திரிகின்றன.
அது ஒரு நீண்ட தெரு.
அங்கிருந்து வருபவர்களுக்கு
கிழக்குப்பார்த்தும்,
இங்கிருந்து செல்பவர்களுக்கு
மேற்கு பக்கம் பார்த்துமாய்
தன் நடையை காட்டும்
நீண்ட தெரு அது.
எதிரும் புதிருமாக வீடுகள்
நட்டு வைக்கப்பட்டிருந்த
தெருவில் வீடுகளுக்கிடையிலும்
எதிர்வெளியிலுமாக தெரிந்த
வெற்றிடத்தில் துளிர்க்க
ஆரம்பித்திருந்த வீடுகளின் முன்
நடப்பட்டு தெரிந்த
மின் விளக்கு கம்பத்தை
சுற்றிய ஈசல்கள் பறந்த
பெரு வெளியில்
ஆடுகளும்,மாடுகளும்,
நாய்களும்,கோழிகளும்,
சமயத்தில் பன்றிகளுமாக
நடமாடித்திரிகின்றன.
கிராமத்திலிருந்து நகரமாகவும்,
நகரத்திலிருந்து பெரு நகரமாகவும்
உருமாற்றம் கொண்டிருந்த
50 வருட சரித்திரம் கொண்ட
அந்த வீதி பெருநகர
வளர்ச்சி குழுமத்தின்வரைபடத்தில்
முக்கிய இடத்தில்/
.jpg)
No comments:
Post a Comment