20 May 2012

அரிசிமாவும்,உளுந்த மாவும்,,,,2


 வெயிலுப்பாண்டி தோழர் வடையது.உளுந்த வடை,கண்ணுக்கு குளிர்ச்சியாக மினுமினுப்பாய்காணக்கிடைக்கிற விதவிதமான வடைகளின் எண்ணிக்கையை அவரது கடை எப்போதுமே காட்டியதில்லை.
  ஏன் தோழர் அப்படி?அது அப்படித்தான் தோழர், அவர்களால் அது மட்டுமே சுட முடிகிறது. அதுதான் சுடுகிறார்கள். நாங்களும் வாங்குகிறோம். லாபம்கருதி மட்டுமல்ல,வேறுசிலவிஷயங்களையும்உள்ளடக்கிப்பார்க்கவேண்டியுள்ளது அதில்.
   அதனால்தான் வாங்குகிறோம்,விற்கிறோம்,எடுத்து சாப்பிடுங்கள் தோழர் நன்றாக இருக்கும் என்பதை விட இருதயச்சுத்தியுடன் இருக்கும்.
  அழுத்தி பிசையப்பட்ட மாவும்,  வெட்டிப்  போடப்பட்ட  வெங்காய துண்டுகளும்,உருவிப்போடப்பட்ட கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளும் மட்டும் கொண்டதல்ல இந்த வடை.
  ஒழுங்கற்ற வட்ட வடிவத்தில் பள்ளமும்,மேடுமாய் ஒரு பக்கம் வீங்கியும்,ஒரு பக்கம் வற்றியுமாய் காணப்படுகிற வடைகளை சுட்டெடுக்கிற கைகளுக்கு சொந்தக்காரியின் உழைப்பும்,வேர்வையும்,அவளது வாழ்க்கை முனைப்பும்இதில் உள்ளடக்கி  இருக்கிறது தோழர். ஆகவே ,,,,,,,,,,,,,,,ப்ளீஸ் எடுத்துச் சாப்பிடுங்கள்.முடிவில்லையா ஒரு விதமாக ஏளனமாய் பார்ப்பதை நிறுத்துங்கள்,என கடைசி வாக்கியத்தை மனதினுள்ளும்அதற்கு முந்தியதை வெளிப்படையாகவும் பேசிய வெயில் பாண்டி தோழர் இன்னும் வெயில் பாண்டியாகவே/
   பரவாயில்லை,சொந்தமாக டீக்கடை வைத்து ஒரு டீ மாஸ்டரை வேலைக்கு வைத்துகொள்கிற அளவு கடை விரிவாக்கமும்,ஓரளவு  வசதியும் வந்து விட்ட போது கூட அவர் இன்னும் மாறாத மனிதராகவே/     
   எங்களின் சகஊழியர் ஒருவர்தான் சொல்லுவார். எங்களது தொழிற்ச்சங்கத் தலைவரைப்பற்றி பேசிகொண்டிருக்கும் போது. அவர் மாரிக்கனி அல்ல,என்றுமே மாறாத கனி என/
  அந்த ரகத்தில் தோழர் வெயில் பாண்டியையும் சேர்த்துக் கொள்ளலாம்  தைரியமாக. யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.சம்பந்தபட்டவரும் ஒன்றும் சொல்ல மாட்டார் எனவே நம்புவோம்.ஓம் நம்பிக்கையாய நமக/
  தோழர் வெயிலுப்பாண்டி சொன்னார் என்பதற்காக மட்டுமல்ல.வேலை முடிந்து கிளம்புகையிலேயே மனதுள் வரிந்து கொண்ட முடிவுதான் அது.வெலுப்பாண்டி கடையில் இன்று டீ சாப்பிட வேண்டும்.
  இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன்.பின்னால் புலிப்பாண்டி அமர்ந்திருந்தான்.
  எனதுபால்யநண்பன்.திடீரென,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ரகம்.எப்போது சிரிப்பான்,
  எப்போது முறைப்பான் எனத்தெரியாது. லிப்ட் கேட்டு ஏறியவன் மிகவும் சிறப்பான குணத்துக்கு(?/)சொந்தக்காரன்.
  அவனது தேவையும் பேச்சும்,செயலும்,சொல்லும் பெரும்பாலும் பணத்தை சுற்றியே இருக்கும்.அவன் நிலையிலிருந்து பார்த்தாலும் மிகவும் சரியற்றதாக இருக்கிற செயலுக்கு சொந்தக்காரன்.
  ஒருசமயம் ஏதோ பெட்டிக்கடையில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு திரும்பிகொண்டு திரும்பினேன்,அப்போதுதான் கடையின் நடையை நெருங்கிய அவனை பார்த்து சிரித்த போது என்னை ஏற இறங்கப்பார்த்து விட்டு காறி தரையில் உமிழ்ந்தான்.
  அன்று அவன் உமிழ்ந்த எச்சிலின் ஈரம் இன்னும் காயாமலேயே எனது மனதில் ஆறாத வடுவாக /
  அப்படியான ஆறாத வடுவை என்னுள்  ஏற்படுத்தி சடுதியில் நகர்ந்து விட்ட அவன் பின்நாட்களில்அந்தவடுவைஅழிக்கமுயற்சிசெய்கிறான்.
  ரோட்டில்பார்க்கையில்,வண்டியில் விரைகையில்,எங்காவது எதிர்படுகிற தருணங்களில்வளைத்துவளைத்துவணக்கம் சொல்கிறான்,சிரிக்கிறான்,
குழைகிறான்.
  காரணம் நான் பதவி உயர்வு பெற்று விட்டேனாம்.எனது நிலை உயர்ந்து விட்டதாம்.அதனால் உங்களிடம் கூடுதல் ஒட்டுதல் என எந்த வித கூச்சமும் இன்றி சொன்னவனைபார்க்கபரிதாமாக இருந்தது.
 பரிதாபப்பட்டு என்ன செய்ய?அப்படித்தான் பாதிக்கும் மேற்பட்டு தெரிகிறார்கள்.பின் எதற்குஅனாவசியமாய்கவலைப்பட்டுக்கொண்டு?  என  அவனது  சிரிப்புக்கும்,
வணக்கத்துக்கும்,குழைவுக்கும் நானும் சிரித்தும்,வணக்கம் சொல்லியுமாய் வைப்பேன்.
 நடு வழியில் ஏறியவன் நடு வழியிலேயே இறங்கிக்கொண்டான் ராமர் கோயில் அருகில்/
  வண்டியில் பெரும் பாரம் குறைந்த மாதிரியிருந்தது என்கிற நினைப்புடனேயே வெயிலுப்பாண்டி கடையில் நின்றேன்.
  அன்பின் மனிதர் அவர்.எப்போது போனாலும் ஒரு டீ மட்டுமே எனது குடித்தலாய் இருக்கும்.சமயங்களில் இரண்டு டீ.
  இன்று எண்ணெய் மினுங்க தட்டில் இருக்கிற வடையை பார்த்தவுட்டன் எடுத்து சாப்பிட வேண்டும் போல ஒரு ஆசை.
  நான் கடையினுள் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து கைக்கெட்டும் தூரத்திலிருந்து வடையை தொட்டு தடவி எடுக்கையிலேயே தெரிந்து போகிறது.இது மெதுவான வடை என்று/
  இந்த வடைக்கு மத்தியில் துளையிட்ட கைகளுக்கு சொந்தக்காரி இந்த கடைக்குப்பின்னால் உள்ள பகுதியில்தான் குடியிருக்கிறாள் எனவும் இங்கிருக்கிற நான்கைந்து கடைகளுக்கு அவள்தான் வடை சப்ளை எனவுமாய் சொன்னார் வெயிலுப்பாண்டி.
   ஒரு  வடை 2.50எனபோடுகிறாள்.  நாங்கள்3.00  ரூபாய்க்கு  விற்கிறோம்.
எங்களுக்கு கிடக்கிற பைசா 50திற்காக  மட்டுமல்ல,இந்த தள்ளாத வயதிலும் அடுப்பில் வேகும் சனாதன விதவைதாயான அவளது வாழ்க்கை இந்த வடையை நம்பித்தான் இருக்கிறது, ஆகவே எடுத்து சாப்பிடுங்கள் தோழர்/  

10 comments:

ஹேமா said...

இது வெறும் வடையல்ல.வறுமையும் கண்ணீரும் கலந்த வாழ்வு.ஆனாலும் சுவை !

விச்சு said...

வடைக்குள் ஒரு அருமையான விசயத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். சிலபேர் தேவை வந்தால் ஒட்டிக்கொள்வார்கள் ரகம்.

சிவகுமாரன் said...

இனி டீக்கடையில் டீ சாப்பிடும் போது, வடையும் சாப்பிட வேண்டும். அது எப்படி இருந்தாலும்.
பள்ளிப்பருவத்தில் வாசலில் விற்கும் ஜவ்வு மிட்டாயை வாங்கித் தின்பேன். அம்மா திட்டுவாள். அந்தப் பாட்டி பாவம் அம்மா என்பேன்.

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சிவக்குமாரன் சார் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்டுரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

பால கணேஷ் said...

வடைக்குப் பின்னே நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் மனதைத் தொட்டது. சிவகுமாரன் சொன்னது போல இனி நானும் வடை சாப்பிடுவது என முடிவு செய்து விட்டேன். அருமை விமலன்.

புதுவை செல்வம் said...

வடைக்குள் விடை, அருமை நண்பா!

vimalanperali said...

வணக்கம் செல்வம் தோழர்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கணேஷ் சார் நலம்தானே?நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/