7 May 2012

புல்தரை,,,,,,,,


 அருகில்போய் பேசியிருக்கலாம்தான்.அது அல்லாது நேராக போய் விட்டேன்.
 தலை போகிற அவசரமெல்லாம் ஒன்றுமில்லை.பேருந்து நிலையத்தில் காத்திருக்கிற நண்பனைப் பார்க்க போய்க்கொண்டிருந்தேன்.
  அவனும் இப்போதுதான் வந்து இறங்கியதாக போன் பண்ணினான்.நல்ல நண்பன்/
கிட்டத்தட்ட 20 வருட காலப்பழக்கம்.அவன்நின்று கொண்டிருப்பான்.நான் அமர்ந்து கொண்டிருப்பேன்,அவன் ஓட்டத்திலிருப்பான். நான் நடையிலிருப்பேன். அவன் வானத்திலிருப்பான். நான்  தரையிலிருப்பேன்.  நல்லமனம்  அவனுக்கு  என்னையும்
அவனளவு நிற்கவும்,ஓடவும்,வானத்திலிருக்கவுமாய்கைகோர்த்துஅவனுக்கு சமதையாய் இருக்கவும்,வாழ்வுமாய் கற்றுக்கொடுத்தான்.
   அன்றுகோர்த்த கைஇன்று வரை விலகவேஇல்லை.நல்ல கை,நல்ல மனம் அவனுக்கு/
வாழ்க வளமுடன் என சொல்லத்தெரியாத வயதில் நடந்த அந்த இனிய விபத்து இன்று வரை எங்களை பசைபோட்டு பாதுகாத்து வைத்திருக்கிறது.
   கைபேசியைஅனைத்துவிட்டுவண்டியைஸ்டார்ட்பண்ணிஅமர்ந்துவிட்டுஏறிடுகையில்
இவர் உருவாய்படுகிறார் மென்நேர காட்சிப்படலமாக/
   வண்டியை  எடுத்த  வேகத்தில்  ஓரம்கட்டி  விட்டு  அவரது அருகில்போய்தோளோடு
தோளாய் நின்று பேசிக்கொண்டிருந்திருக்கலாம்தான்.ஆனால் போய் விட்டேன்.நேராக/    
ஸ்னேகமாய் பூத்து சிரித்து தோள் தொட வருகிற மனிதனை அலட்சியம் செய்கிற மனோபாவனையில்/
  நேற்றைக்கு முன் தினம் ஏதோ ஒரு வேளையாக எங்களது கிளை அலுவலகம் ஒன்றில் இருந்தபோது தோழர் கீணாவை பார்க்க நேர்ந்தது.
  எப்போது,  எங்குபார்த்தாலும்  படுஒட்டுதலாக  பேசக்கூடிய  மனிதர்.மென்மை பூத்த
பேச்சுக்குசொந்தக்காரர்.”ஆமாம்,அப்படியா,சரிதான்”,,,,,,,,என்கிறபேச்சுடனானசொல்லை
அவர் முடிக்கையில் அந்த சொற்களோடும் பேச்சுக்கட்டுகளோடும் பிணைந்துவருகிற ,உதிர்கிறஇளம் சிரிப்பும்,தலையாட்டலும் அவரை தனித்துவப்படுத்திக்காட்டும்.
  அன்றும்அப்படித்தான்.ஆனால்அவரதுபேச்சில்இருந்தஇளம்சிரிப்பு மிஸ்ஸிங்/
சொல்கிறார்,பேசுகிறார்,பறவையின்இறகாய்படபடக்கிறார்.
  “வீட்டம்மா யெறந்துட்டா,ஒடம்பு சரியில்லாம இருந்தா,ஏற்கனவே ரெண்டு தடவ ஆஸ்பத்திரியிலஇருந்தா,இந்ததடவபிரயோஜமில்ல.டாக்கரம்மாதான்வச்சிப்பாத்தாங்க.
ம்கூம்,,,,,,,,ஒன்னும்  செய்யமுடியல. தெரிஞ்ச  ஆஸ்பத்திரிதான்,  தெரிஞ்ச டாக்டர்தான்,
தெரிஞ்ச மருந்துக்கடைதான் எவ்வளவு கடன் சொல்லியும் மருந்து வாங்குற அளவுக்கு வசதி இருந்துச்சி.எல்லா உதவிக்கும் ஆள்க கூட நின்னுச்சி.வளந்து நின்ன பையன்,உள்ளூர்லயே கட்டிக்கொடுத்த பொண்ணு எங்க மாமனாரு,மாமியாரு,சொந்த பந்தம்,அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க,,,,,,,,,,எல்லாம் வாஞ்சையோட வந்து நின்னும் கூட  பொத்திபாதுகாக்க முடியாம போச்சு”.
 “இன்னைக்கோட மகராசி போயி சேந்து ஒரு மாத்தைக்கு மேல ஆகவும்போகுது”.என முற்றுப்புள்ளியிட்ட அவரது பேச்சு என்னை சற்று உறையச்செய்து விட்டது.
  “என்ன தோழர் ரொம்ப சாதாரணமா சொல்றீங்க” என்கிற ரீதியில்  அவரது தோள் அணைத்து எந்த ஆறுதல் வார்த்தையும் சொல்லாமல் ,,,,,,,, “அடடா எனக்குத்தெரியாதே தோழர் என்றும், அப்படியே வெட்டிக்கொண்ட வார்த்தைகளுடனுமாய் நான் வந்த வேலையைப் பார்க்கப்போய் விடுகிறேன்.
  நான்வந்தவேலை எவ்வளவு முக்கியமானதுஎன்ற போதும் கூட,என்னிடம் எது சம்பந்தமான பொருளோ அல்லது நினைவோ தங்கியிருந்த போதும் கூட நான் அவரை தேற்றிஆறுதல்சொல்லியிருக்கவேண்டும்.அல்லதுகுறைந்தபட்சம்நான்கு வார்த்தைகளாவதுஇதயம்தொட்டுபேசியிருக்கவேண்டும்.இதுஎதுவுமற்றுமொன்னை
தனமானஅல்லது கரடுதட்டிப்போன மனதுடன்  எங்களது கிளை அலுவலகத்திலிருந்து கீழிறங்கி வந்தபோது அன்று பார்த்த அவர்தான் இன்று தென் பட்டுத்தெரிகிறார்.
அந்ததனியார்கம்பெனியின்வாட்ச்மேனாகஅவர்ஒல்லியாகஉயர்ந்து,சிவந்து தெரிகிறமென்
மனிதர் அவர்.எந்நேரமும் வெத்திலை போடுவதால் அவரது உதடுகள் சிவந்தே/
  நான்கு முழ வேஷ்டி உடல்ப்போர்த்தியிருக்கிற  ஏதாவது ஒரு சட்டைஇவ்வளவுதான் அவரது தோற்றமாக.தினசரிஇரவு8.00வருபவர்மறுநாள்காலை9.00மணிக்குத்தான் செல்கிறார்
வீட்டுக்கு.
  எங்களதுகிளைஅலுவலகம்இருந்தமாடியின் கீழேதான் அவர் வேலை பார்த்தார்.முன்பு லோடு மேனாக இருந்தாராம்.
 தனது பிராயங்களில் இரண்டு தோள்களுக்கும் தோளுக்கொன்றாய் தலா ஒவ்வொரு குவிண்டால் மூட்டைகளை தூக்கி சுமந்ததை நினைவு கூர்வார்.
  உழைப்பின் ஈரம் மிகுந்த நாட்களையும்,தன் உடலில் வற்றாது ஓடி தடம் பதித்த வியர்வையின் வடுக்களையும்,வாசத்தையும் சொல்லுவார்.
  உள்ளூரிலேயே கல்யாணமான பெண் பிள்ளை.வெளியூர் மாப்பிள்ளையாக போய் விட்ட மூத்த பையன் என இருவர் இருந்தும் கூட பெண் பிள்ளையே இப்போது ஆத்திர அவசரத்திற்கு  தோள்தருபவளாக என்கிறார்.
  “உடல்  நலமில்லாத  மனைவிக்கு  பண்டுகம்  பார்க்கவே  நேரம் சரியாகிப்போகிறது,
ஆனாலும் அவள் இல்லாவிட்டால் இன்று நான் முழுதாக இல்லை” என்கிறார்.
 குழந்தைபிறந்துஆஸ்பத்திரியில்இருக்கிற உறவினர் ஒருவரை பார்க்க வந்திருக்கிறேன் எனச்சொன்ன நண்பனை பார்த்து பேசிவிட்டு அவரை அழைத்துக்கொண்டு உறவினர் இருக்கிற ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு திரும்பி வருகிறேன்.
  சாலையெங்கும்மென்பூக்கள்பூத்திருக்க,சிவப்பாகரத்தினக்கம்பளம் விரித்திருக்க,
சாலையின்இருமருங்கிலும்பூச்செரிய,மென்தூறலாய்மழைபெய்து கொண்டிருக்க,,,,,,,,,, 
 போகும்போது கண்டிப்பாக வாட்ச்மேனையும்,தோழர் கீணா,,,,,வையும் பார்த்து  பேசிவிட்டு  அவர்களது  தோளோடும்,  மனதோடும் அருகாமையாக நின்று ஒரு நல்ல தேனீர் அருந்திவிட்டும் செல்ல வேண்டும்.  

12 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இதை செய்திருக்கலாமே! செய்யாமல் வந்துவிட்டோமே என்று பின்னர் வருந்துகின்ற சூழல் வாழ்க்கையில் பல நேரங்களில் ஏற்படுகிறது.

விச்சு said...

தோழரே இயல்பாய் சொல்லிவிட்டீர். நம் சொந்த வேலைகளுக்காகப் பலமுறை பலரை அலட்சியப்படுத்திவிட்டுத்தான் செல்கிறோம். இதனைப் படிக்கையில் நான் கடந்து சென்ற மனிதர்களும் ஏனோ கண்முன் நிற்கிறார்கள்.

பாலா said...

நான் கடந்து சென்று பின்னர் வருந்திய தருணங்கள் ஏராளம்.

vimalanperali said...

வணக்கம் முரளிதரன் சார்.நன்றி உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,நலம்தானே?
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...

உங்களின் நட்பின் ஆழம் என்றும் பாராட்டுதலுக்குரியது

vimalanperali said...

நன்றி வேல்முருகன் சார்.

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

அனைவருக்கும் அன்பு  said...

உணர்வுகளின் எல்லையில் நிற்க வைகிறீர்கள் உங்களின் வரிகளின் ஊடே அருமை நண்பரே

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களது வருகைகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கோவை மு.சரளா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/