5 May 2012

தடைச்சுவர்,,,,,,


                            
  நான் சென்று கொண்டிருக்கிறேன், கார்வந்துகொண்டிருக்கிறது. கார் வந்து கொண்டிருந்தது.நான் சென்று கொண்டிருந்தேன்.
 முதல் வேகத்தடையில்எனது இருசக்கர வாகனம் ஏற இரண்டாவது வேகத்தடையில் எனக்கெதிர்த்தாற்ப்போல கார் ஏறி இறங்குகிறது.
 இறங்கி ஏறிய கார் டயரின் பட்டன்களில் சிக்கியிருந்த தூசியும்,டயரில் ஒட்டியிருந்த அழுக்கும்,புழுதியும்,மண்ணும் காரின் டயர் தடத்திற்கு விலகி வழி விட்டு காற்றில் பறக்கவும் கீழே விழுந்துமாய் தெரிகிறது.
   எனதுஇருசக்கரவாகனத்திலும்அவ்வாறாய்இருந்திருக்கலாம்.நான் கவனிக்கவில்லை.
  மழை நேரமாய் இருந்தால் சேற்றை வாரி இறைக்கிறது.வெய்யில் காலமாய் இருந்தால் புழுதி பறக்கிறது.
  சிறிது காலத்திற்கு முன்பாக போடப்பட்ட வேகத்தடைதான்.அதற்கு முன் முடி முளைத்து காணப்படாத வழுக்கை தலையாகவே அது/
 பள்ளமான குடியிருப்பு பகுதியிலிருந்து மேலேறி வருகிற போது நெஞ்சுக்கு நேரெதிராய்முட்டுகிறரோடுஅது.
 எந்தக்காலத்தில்அந்தக்குடியிருப்புப்பகுதிஉருவாகியது என தெரியவில்லை.எத்தனை வருடங்கள்ஆனதோஅந்தவீடுகள்அங்கேமுளை விட்டும்,பதியனிடப்பட்டுமாய்/
 வாசலும்,கொல்லைப்புறமும்,சமையலறையும் கொண்ட 600 சதுர அடி வீடுகள்அவை. கைக்கும்,வாய்க்கும் பத்தாத மனிதர்களையும்,அவர்களது குடும்பங்களையும்,அவர்களது வாசனையையும்,அவர்களது வாழ்க்கை வழக்கங்களையும் தன்னகத்தே உள்ளிழுத்தும் வெளிப்படுத்திக்கொண்டுமாய் அடைகாத்துமாய் வைத்திருந்த வீடுகள்.
 கணவன் வெளியில் போகும் போது கதவு திறக்கும்,மனைவி உள்ளே வரும் போது தலை தாழ்த்தி வணக்கம் சொல்லும்.
  1ஆம் வகுப்பு முதல்+2,மற்றும் கல்லூரிவரை படிக்கிற பிள்ளைகள் போகும் போதும்,
வரும்போதும் கண் சிமிட்டி மகிழும்.வயதான பெற்றோர்களை தன்னகத்தே வாரி அனைத்துக்கொள்ளும்.
 வெறும் செங்கலும்,மணலும்,சிமிண்டுமாய் மட்டுமின்றி உயிரோட்டம் கலந்து தெரிந்த காட்சிப்படைப்பாகவே அந்த வீடுகள்/
 ஏறத்தாழ50ஆவது இருக்கலாம்.அதில் A, B, C என இல்லாமல் ஒரே மாதிரி ஒரே அளவிலான வீடுகளாய் அமைந்திருந்தது மிகவும் ஆறுதலாகவே/
 மிகச்சரியாக இல்லாவிட்டாலும் ஏறக்குறைய ஐந்தடிப்பள்ளத்தில் அமைந்திருந்த அந்த ஏரியாவில் மில் வேலைக்காரர்கள் முதல் அரசு ஊழியர்கள்வரைக்கும்,நகராட்சிபள்ளியில் படிக்கும் பிள்ளைகளிலிருந்து இங்கீலீஸ் மீடியம் படிக்கிற பள்ளிப் பிள்ளைகள் வரைக்கும் அந்த ஈரத்திலும்,புழுதியிலுமாய் நடமாடித்தெரிந்தார்கள் அதன் வாசத்துடன்.
 ஐந்தடிப்பள்ளத்திலிருந்து ரோட்டுக்கு மூச்சைப்பிடித்துஏறிவரும் அந்த ஏரியாவாசிகள் எப்போதும் பாவம் செய்தவர்களாகவே/
 மழை காலத்தில் தண்ணீருக்கும் வெயில் காலத்தில் வெக்கைக்கும்,காற்றடி காலத்தில் தூசிக்குமாய் பயந்து வாழ்ந்த அவர்களது வாழ்க்கை  அவர்கள் மேலேறி வந்து காண்கிற சாலையைப்போல சீராகவும்,சமமாகவும் இல்லை.
 நிறைய விபத்துகள் நடக்கிறதென இரண்டு மாதத்திற்கு முன்பாக போடப்பட்டிருந்த வேகத்தடை அது.
 போடப்பட்டிருந்தமுதல் நாள் அது,ஒரு நல்ல மாலை நேரமாக போட்டிருந்தார்கள்.அது என்னவோ சாலையை மறித்து சாலையின் பாதி உயரத்திற்கு சுவர் கட்டி எழுப்பியது போல இருந்தது.
  கவனிக்காமல் அதே வேகத்தில்  வந்தால்  தூக்கி  எறிந்து விடும்போல காட்சிப்பட்டுத்
தெரிந்தது.
  வேகமாய் வந்து கொண்டிருந்த நான் வேகத்தடை பார்த்து  நான் சடக்கென பிரேக்கிட கீழேவிழுகாமல்தப்பியதுபெரும்பாக்கியம்எனலாம்.
 எனக்கு பரவாயில்லை,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கணவன்,,மனைவி இருவருமாக வந்த இரு சக்கர வாகனம் வந்த  வேகத்தில் சடாரென பிரேக்கிட்டு ஏற வேகத்தடையில் வண்டி நிலை குலைந்து ஆடி நின்றது.
  நல்லவேளை,  யாரும்  கீழே  விழவில்லை.உட்கார்ந்த  இடத்திலேயே  உட்கார்ந்த
நிலையிலேயேலேசாக சீட்டில் தூக்கிப்போடப்பட்டதோடு சரி.
 அப்படியான அந்த மாலை நேர சம்பவத்துக்கு பின்பாக இன்று இரண்டு மாதம் ஒரு நாள் கடந்து எனது இரு சக்கர வாகனம் அதே வேகத்தடையில் ஏறி இறங்குகிறது லேசாக/
 பஸ்ஸீம்,லாரியும் இருசக்கர வாகனமும் கடக்கிற போதுகொஞ்சம் பயமாகவே இருக்கும்.அதிலும் சில தனியார் பேருந்துகள் உயிர் பயத்தை ஏற்படுத்தி விட்டு போய் விடுவதுண்டு.கட,கட,கட,,,,,,,,,என்கிற பயத்தை விதைக்கிற சப்ததுடன்/படியில் ஜனங்கள் தொங்கிக்கொண்டுபஸ்ஸேசாய்வது போல வந்தாலும் கூட அந்த வேகம் குறைவதில்லை.அதே கட,கட,கட,,,,,,,,தான் .அதே உயிர் பயம் ஏற்படுத்துதல்தான்.
  அது மாதிரி பேருந்துகள் வருகிற நேரங்களில் மரியாதையாக ஒதுங்கி நின்று கொள்வதுதான் நல்லது.இது தவிர அரைப்பாடி லாரிகள்.அடேயப்பா,அவை சமயத்தில் மேலே குறிப்பிட்ட தனியார் பேருட்ந்துகளை பிச்சை வாங்க வைத்து விடும்.இது தவிர கார்கள்,ஆட்டோக்கள்,இருசக்கர வாகனங்கள் தத்தமது பங்கிற்கு.
  விருதுநகரிலிருந்து  அருப்புக்கோட்டை நோக்கி பயணிகள் பலரைஅன்றாடம் தன் மடியிலும், மாரிலுமாய் தாங்கி சுமந்து பயணிக்கிற சாலை அது,
 கருத்து நீண்டு விரிந்து தெரிகிற அந்த சாலையில்தான் அன்றாடமாய் எனது பயணம் சுழியிடுகிறது.
 அதிகாலை ஆரம்பிக்கிற ஓட்டம் அல்லது துடிப்பு,தயார் நிலை ஆதல் என ரெக்கை கட்டுகிற தினசரிகளின்  அவசரங்கள்  காலையிலும்  மாலையிலும்  அலுவலகம்   செல்வதற்காய்,
அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்கான பிரவேசமாய் அந்த சாலையில்  எனது துவக்கமிடலும் ,பயணித்தலும்  இருக்கும். 
 காலை 9.00 மணிக்கு சாப்பாட்டுப்பையைக்கட்டினால் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டு மனதும் அவசர நிலையற்று மெதுவாக நிதானத்தில் போய்க்கொண்டிருக்கும்.9.30 அல்லது 9.15 என்றால் கொஞ்சம் பதட்டப்பட்டுப்போகும்.அதற்குத்தகுந்தாற்ப்போல வண்டியின்பயணமும்அமைந்துவிடுவதுண்டு.
 காலையில் எழுந்து வாக்கிங்,எக்ஸர்சைஸ்,யோகா,,,,,,,என்பது போன்ற நல்ல பழக்கங்கள் ஏதுமற்று காய்கறி நறுக்கிக் கொடுக்க வீட்டின் பக்கவாட்டு வெளியை சுத்தம் செய்ய,தண்ணீர் மோட்டாரைப்போட்டுவிடஎன்பதுபோன்றமிகபிரயோஜனமான வேலைகளைசெய்துவிட்டு
கிளம்பஇவ்வளவுநேரம்ஆகிப்போகிற போது வேறென்னதான் செய்வது ஆண்கள் இனம்.
 சொல்லுங்கள் என்கிற பொது ஒப்பிப்புடன்விடிகிற  காலை வேலைகளின் தினசரிகள் அப்படித்தான்காட்சிப்பட்டுதெரிகிறது.அதுதவிரஇப்போதெல்லாம்தினசரிசக்திகடையில்
சாப்பிடுவதென்பது அடிக்கடியான நிகழ்கிற நிகழ்வாகவே/
காரணத்தைக்கேட்டால்சிரிப்பார்கள்சாப்பாட்டைவயிறுநிறையஅடைத்துக்கொண்டுவண்டியை
ஓட்டிக்கொண்டுபோகமுடியவில்லைவயிறுகனத்துநெஞ்சுக்கு ஏறிக்கொள்கிறது.
 அந்த மாதிரியான வேலைகளில் கொஞ்சம் பயம்கூட வந்துவிடுகிறது. அதை  தவிர்க்கவும்,
தட்டிவிடவுமாய்இப்படியானஇடைநிலை ஏற்பாடுகளை சில நாட்களில் செய்து கொள்வதுண்டு.
 அன்பின் மனிதரான சக்தி கடையில் இரண்டு தோசை,அல்லது நான்கு இட்லிஒரு டீ இதுதான்எனதுகாலைஉணவாகிப்போகிறவேலைகளில்அன்பின்மனிதரான அவரின்ஒட்டுதல்
கொஞ்சம்கூடுதலாகவேஇருக்கும்.
  தேவைகேற்பவே  பழகுகிற  மனித  பழக்கங்களுக்கு  நடுவில்  இது  ஒருமாதிரியாக/
  “நல்லாயிருந்தால் நல்லதுதானே எல்லோருக்கும்”என்கிற அன்றாடங்களின் மிதப்பாக உள்ள நான் தினசரி காலையிலும்  மாலையிலுமாக  இந்த சாலையை  கடக்கையில்  வேகத்தடையை
பார்க்காமலும்,அதன்மீதுஏறிபயணிக்காமலுமாய் இருக்கமுடிவதில்லை.
 கூடவே ஐந்தடிபள்ளத்தில் இருக்கிற வேகத்தடையை ஒட்டி இறங்குகிற ஏரியாவையும் சேர்த்து/
 வேகத்தடையை நான் அன்றாடம் கடக்கிற கணங்களில் ஐந்தடிப்பள்ளத்தில் இருக்கிற ஏரியாவின் படமும்,அதில் வசிக்கிற மக்களின் வாழ்க்கையும் என்னுள் தோன்றி மறையாமல் இல்லை.
   நான்  சென்று  கொண்டிருக்கிறேன்.  கார்  வந்து  கொண்டிருக்கிறது,  கார் வந்து கொண்டிருந்தது.நான் சென்று கொண்டிருந்தேன்.கூடவே காலமும்/

12 comments:

 1. தினசரி வேலைக்கு செல்லும் பாதையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் உங்கள் பார்வையில் படைக்கப்பட்ட கட்டுரை கவிதையாக உள்ளது.

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 3. வணக்கம் வேல்முருகன் சார்.நலம்தானே?பார்வையில் பொதிகிற சமூக விஷயங்கள் யாவும் இப்படி படப்பிடிப்புக்குள்ளாவதில் தெரிக்கிற மனித மனங்கள் எங்கும் விதைக்கப்பட்டவையாகவே/
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் வலைஞன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. உங்கள் சொற்சித்திரம் அருமை. வாழத்துக்கள்!

  ReplyDelete
 6. வணக்கம் தோழர் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. //நான் சென்று கொண்டிருந்தேன்.கூடவே காலமும்//

  விரைந்தோடும் காலச்சக்கரத்தை (வேகத்)தடைச்சுவர் மூலம் விளக்கிய விதம் அருமை!.

  ReplyDelete
 8. வணக்கம் செய்யது இப்ராகிம்சா அவர்களே நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. விமலன் சார் வழக்கம்போல இயல்பான நடையில் அன்றாட நிகழ்வுகளை படைத்துள்ளீர்கள். பயணம் பாதுகாப்பாக அமைவது நம் கையிலும் நம் எதிரே வருவோரின் கையிலும்தானே..

  ReplyDelete
 10. எதிரே வருகிற,காட்சிப்படுகிற சமூகம் விதைக்கிற எல்லாம் நம்மில் ஒரு காட்சிப்படைப்பாக இருக்கிற அதே நேரத்தில் நாம் பயணிக்கிற தூரமும்,இடமும் முக்கியமாக இங்கு பதியம் கொள்கிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. வணக்கம்! ஊரெங்கும் இதே நிலைமைதான். சாலையின் அமைப்பையும், வேகத் தடையையும் மனதில் பதியும்படி எழுதியுள்ளீர்கள். அந்த வேகத் தடை போடச் சொன்ன கவுன்சிலர், ஊர் முழுக்க, தான்தான் அடிக்கடி நிகழும் விபத்துக்களை தடுப்பதற்காக போடச் சொன்னதாக பெருமைப் பட்டுக் கொள்வார்.

  ReplyDelete
 12. வணக்கம் தமிழ் இளங்கோ சார்.
  நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete