8 May 2012

அரப்பதம்,,,,,,,

  காளியண்ணனுக்கு  அப்படிவரும்  என கனவில்  கூட  நினைத்ததில்லை.
மலர் மல்லிகை மருத்துவமனையில்தான் இருந்தார்.
   15 ஆம் நம்பர் வார்டு.குளுக்கோஸ் இறங்கி க்கொண்டிருந்தது.மஞ்சளும்,பச்சையும் கலந்த ஒரு இளம் அடர் நிறத்தில் மருத்துவமனை வார்டுகளும்,மருத்துவமனை சுவர்களும்/
  அதே நிறத்தை ஒட்டி கொஞ்சம் அடர் கலரில் தரையிலும்,சுவரிலும் ஆளுயரத்திற்கு பதித்த டைல்ஸீகள்பார்க்ககண்ணுக்குகுளிர்ச்சியாகவே இருந்தது.அதைஅப்படியேஒத்திபறக்கிற
பறவைகளின்மீதுபூசிவிடலாம் போலிருக்கிறது.
கொத்தனாரின்ரசனையாடாக்டரின்தேர்வாஅதுஎனத்தெரியவில்லை.இரண்டு வருடங்களுக்கு முன்பு உருவான மருத்துவமனைதான் அது.ஆனால் அள்ளியது கூட்டம்.
 கைராசிக்காரமருத்துவர்என்பதுமட்டுமில்லை.வேறோரிடத்தில் சிறியதாக வைத்திருந்த மருத்துவமனையும்,அங்கு வந்து போய்க்கொண்டிருந்த மக்கள் புழக்கமுமே இங்கு இவ்வளவு கூட்டம் சேர ஒரு காரணமாய் ஆகிப்போகிறது.
 பெட்டிக்கடை,டீக்கடை,பலசரக்குக்கடைஐஸ்கிரீம்பார்லர்சினிமாதியேட்டகளுக்கு இணையாக இப்போது ஆஸ்பத்திரிகளிலும் /
 அதிலும் சிறப்புப்பட்டங்களை கொண்ட மருத்துவராக இருந்து விட்டால் கேட்க வேண்டியதில்லை.
  மருத்துவமனை  வாசலில் நிற்கிற கார்களும்,இரு சக்கர வாகனகளும்,சைக்கிள்களுமே சாட்சி/
 நேற்றுமாலைதான்வந்தாராம்,அமர்ந்துவேலை செய்து கொண்டிருந்தவருக்கு திடீரென உடல்உடல்வியர்த்துஎப்படியோவரஆட்டோபிடித்துகொண்டு வந்திருக்கிறார்கள்.
  ஆட்டோ சார்ஜ் 100 ரூபாய்.அவசரத்திற்கு அதெல்லாம் கவனிக்க நேரம் ஏது?வந்தவரை பரிசோதித்து  விட்டு விபரம் கேட்டு அட்மிட் பண்ணி விட்டார்கள்.
 இன்று இரவு ரவுண்ட்ஸ் முடிந்ததும் டிஸ்சார்ஜ் பண்ணுவதைப்பற்றி சொல்வார்கள் என்றார்கள்.ஆகட்டும் விரைவில்,அதுதான் நல்லது.
நோய்கள்அற்றுமருத்துவமனைக்குபோகவேண்டியதேவைகள்அற்று  இருப்போமேயானால்
இன்னும்கொஞ்சம்கூடுதல்சந்தோஷமே.அப்படிவாழ வாய்க்கப்
பெற்றவர்கள் பெரிய பாக்கியவான்களாகவே/
  நடு ராத்திரியில் வந்த வலி நெஞ்சு சம்பந்தமானது என தோண 24மணி நேர ஆஸ்பத்திரி தேடி ஆட்டோபிடித்துப்போய் நின்ற போது அப்படியெல்லாம் பெரிதாக ஒன்றும் இருக்கக்கூடாது உங்களது உடலுக்கு எனச்சொன்ன ஆஸ்பத்திரி உரிமையாளர் ஏனோ இப்போது நினைவில் வந்து போகிறவராக/
  நல்ல மனிதர்,வருகிறவர்களை அப்படியே அட்மிட் பண்ணி மருத்துவமனையை மேம்படுத்த நினைக்காமல் இப்படியான வார்த்தைகளை உதிர்க்கிற மனது வேண்டுமே?அது அவருக்கு இருந்தது.
 இந்த ஊரிலேயே பிறந்து இந்த ஊரிலேயே வளர்ந்து இந்த ஊரிலேயே படித்து,இந்த ஊரிலேயே தொழில் செய்கிற பாக்கியம் வாய்க்கப்பெற்றவனாக நான் என வருத்தப்பட்டு சொன்ன காளியண்ணனுக்கு உயர் ரத்த அழுத்தம் என்றார்கள்.
   நல்ல கலகலப்பாக பேசக்கூடிய பழகக்கூடிய மனிதர்தான்.நாங்கள் வசிக்கிற தெருவிலிருந்து நான்கு தெரு தள்ளி குடியிருப்பவர்.
 மனைவி,ஒரு மகன் என்கிற அளவிலான சின்ன குடும்பம்.ஆனாலும் வயதான பெற்றோர்களை தன்னகத்தே தாங்கியிருக்கிற பொறுப்பை சுமந்துகொண்டிருக்கிற அன்பின் மனிதர்.
 இடத்தரகு பார்க்கிறார்.ஆரம்பத்தில் ஐந்துக்கும்,பத்துக்குமாய் சிரமப்பட்ட நிலையில் இருந்தபோது நன்றாகயிருந்தவர் இன்று ஆபீஸ் போட்டு உதவிக்கு ஒருவரை வேலைக்கு அமர்த்துகிற அளவு முன்னேற்றம் வந்த பிறகு இப்படி ஆகிப்போனார் என்பதே கொஞ்சம் வருத்தமளிப்பதாக.கேட்டபோது சொன்னார்கள் கொஞ்சம் நெருங்கி வந்து ரகசியமாக.
  “சைக்கிள்ல அலைஞ்சு திரிஞ்சி,ஆட்கள பாத்து பேசித்திரிஞ்ச்சப்ப இருந்த கலகலப்பு இப்பக் காணமே?கௌரவம் பாக்காம நாலு யெடத்துக்கு அவரே போய் வர,மொகம் பாத்து பேசன்னு நல்லாத்தான் இருந்தாரு.’
  “இப்ப ஆபீஸ் போட்டு உக்கார்ற அளவுக்கு வசதி வந்ததும்நாலுபேர்கிட்ட பேசுறதில்ல,
பழகுறதில்ல.இவரமாதிரிவசதிஉள்ள ஆள்க கிட்டமட்டும்பழகுறது.பேசுறது,
பழக்கம் வச்சிக்கிறது எல்லாமும்.”
  “மத்தபடி கௌரவம்,கௌரவமுன்னு கௌரவம் பாத்து நாலு பேர்கிட்ட பேசாம,நாலு பேர மதிக்காம,பணம்,பணம்ன்னு திரிஞ்சதால ஹைபீ,பீயில வந்து படுக்குற அளவு ஆயிட்டாரு”.
   “நல்லாயிருந்த மனுசன பாடாப்படுத்துன கௌரவமா இப்பவந்து பாக்கப்போகுது”?
எனச்சொன்ன சொல்கள் ஞாபகத்துக்குவரபடுக்கையில் படுத்திருந்த அவரின் அருகில் செல்கிறேன்.
  படுக்கையின்தலைமாட்டில்ஸ்டூல்போட்டுஅவரதுஅமர்ந்திருந்த மனைவி.
அருகிலிருந்தசெல்பில் அடுக்கித்தெரிந்த  ஹார்லிக்ஸ் பாட்டிலும்,பழங்களும்.கூடவே பாதி மூடி திறந்த நிலையில் இருந்த ப்ளாஸ்க்கும்/
  அவரது மனைவியிடம் சொல்லி விட்டு கிளம்புகையில் அவரது மனைவி சொன்னாள். கொஞ்சம் சொல்லுங்க,நீங்ளெல்லாம் சொன்னா கேப்பாரு,இல்லாதப்ப நல்லாயிருந்த மனுசன் இருக்குறப்ப ஆஸ்பத்திரிய நம்பி கெடக்குற மாதிரி ஆயிட்டாரு.”
 “இத்தோட மூணு,நாலு தடவ இப்படி ஆகிப்போச்சு.பணமும்,காசும் வந்தா மனுச மனசு மேம்படும்ன்னு சொல்லுவாங்க,ஆனா இவரு விஷயத்துல அது தலை கீழா ஆகிப்போயி இப்ப பல்ல தொறந்துட்டு படுத்துக்கெடக்காரு,இவரால சுத்தியிருக்குற எல்லாருக்கும் செரமம்.கௌரவம்,கௌரவம்ன்னு கௌரவத்த தலையில தூக்கி வச்சி ஆடிக்கிட்டு திரிஞ்சவரோட கௌரவம் ஆஸ்பத்திரி வாசல்ல வந்து நிக்க வச்சிருச்சி அவர/
  இதுக்குப்பின்னாலயாவது திருந்துவாரா இல்லையான்னு தெரியல என்றாள்.
  நான் ஏதும் சொல்ல வார்த்தைகளற்றவனாய் கைகூப்பி கிளம்புகிறேன்/         

11 comments:

விச்சு said...

பணம் படுத்தும் பாடு. சிலர் வீம்பாக உசிரைவிட கவுரவம் பெரிசு என்று நினைப்பது. மனிதர்களில் பலவகை.

சசிகலா said...

எனக்கு நிறைய தடவ புரியாத ஒன்று இது ஆமாங்க இந்த கவுரவம் ...சிறப்பான சிந்திக்கும் படியான பதிவு அருமை .

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வலையகம் அவர்களே,கண்டிப்பாக வலையகத்தில் பதிவுகளை இணைக்கிறேன்.நன்றி.

ராஜி said...

இந்த கவுரவுததிற்காக உயிரை கூட கொடுக்கும் அல்லது எடுக்கும் ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

சிவகுமாரன் said...

காலனாய் மாறும் கௌரவம்.
அருமையான சிறுகதை.
வாழ்த்துக்கள்.

(வரிகளுக்கிடையேயான இடைவெளியை சற்று கூட்டுங்கள்.)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ?

vimalanperali said...

வணக்கம் ராஜி அவர்களே நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வனக்கம் சிவக்குமாரன் சார்.
நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் tn முரளிதரன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ஹேமா said...

கௌரவம்....ஒரு சுயநலம்.அடுத்தவர் வாழ்க்கையை சிந்திக்க மறுக்கிறது !