30 May 2012

கந்தத்துணி,,,,,,,,,


                            
 அவள் கூந்தலிருந்து உதிர்ந்த ஒற்றை முடி காற்றின் திசை வழியே செல்கிறது.
 எங்கள் இருவருக்குமான பேச்சு பல சமயங்களில் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
“என்னம்மா, நல்லாயிருக்கீங்களா? சாப்டீங்களா? எப்பிடியிருக்கீங்க?
சௌக்கியமா?
அம்மாஎங்கவெளிய போயிருக்காங்களா?தனியா ஒக்காந்திருக்கீங்களேம்மா”?
இதுதான் எங்களுக்குள் உண்டான பாஷை புழக்கமும்,பழக்கமும்/
 அன்று அலுவலகத்தின் நடை ஏறப்போன என் செவியை எட்டிப்பிடித்த அவளது குரல் சேதி ஒன்றை சொல்லிச் சென்றது.
 “இப்பதான் தலைக்கு குளிச்சேன் சார்.அதான் தலை காயட்டும்ன்னு விரிச்சுப்போட்டுருக்கேன் என்றாள்.
  அவள்வீரம்மாள்.25வயதைகடந்திருக்கலாம்.உடல்வளர்ச்சிஇல்லாததாலும்,
நிரந்தரமாக உடலில் தங்கிப்போன எலும்புருக்கி நோயினாலும் ஆள் நறுங்கி குள்ளமாக உருக்குலைந்து போயிருந்தாள்.
 கருத்து ஒட்டி வாடிக்காணப்படுகிற உடல்.பொந்துவிழுந்த கண்கள்,எத்தித்
தெரிற பற்கள்,களையிழந்து காணப்படுகிற முகம்,ஈரமற்ற பேச்சு ,துருத்திதெரிகிற ஆடை என்கிற அடையாளத்துடன் இருக்கிற  அவள் எங்களது அலுவலகத்தின் பக்கத்து வீட்டில் குடியிருந்தாள்.
  ஒருநாள்  ஆளரவமற்ற  மாலைப்  பொழுதில்  அலுவலகத்தை  பூட்டிக்
கொண்டிருந்தேன்.
  இருமலுடன் சார்,சார் என வந்த குரல் கவனம் கலைக்க எட்டிப்பார்த்தால், அவள் வீட்டு நடையில் வீரம்மாள்.
வழக்கம் போலவே நானும்  சிரித்துக்கொண்டும், மற்ற விசாரிப்புகளுடனுமாய் சிரித்ததுதான் தாமதம்.
 “சாப்டுட்டு,சாப்டுட்டு நல்லாயிருக்கேன் சார்.என்ன செய்ய ,எனக்கு ஏதாவது விசேஷம் நடந்தா கண்டிப்பா வீட்டுக்கு வாங்க சார்” என்றாள்.”கண்டிப்பா வர்ரேம்மா” என சொல்லி விட்டுஅந்த இடத்தை விட்டு அகன்ற என்னைப்பார்த்து என்னுடன் வந்த சக ஊழியர் சொன்னார்.
 “இந்த அம்மாவுக்க்கு என்ன விசேஷம் நடக்கப்போகுதாம் பெரிசா” என்றார்.அவள் விசேசம் என சொன்னதன் உள் அரத்தம் அப்போது புரியவில்லை.
 மறுநாள் காலை வேலைக்கு வந்த போது வீரம்மாளின் வீடே அல்லோகல்லப்பட்டுக்கொண்டிருந்தது. 
 “என்னைய விட்டுருங்க,நான் மருந்தக்குடிச்சி செத்துப்போறேன்” என வீரம்மாள்சப்தம்போட்டுக்கொண்டிருக்கவும்அவளதுஅம்மா தலையிலடித்துக்
கொண்டு மூலையில் உட்கார்ந்து அழுதவாறு அமர்ந்திருக்கவும்,அவளது அண்ணன்அவளருகில்குற்றஉணர்ச்சியுடன் நின்று கொண்டிருக்கவும்,ஊரே கூடியிருந்தது அந்த வீட்டில்.
  நான் எட்டிப்பார்த்ததுதான் தாமதம். “சார் நான் நேத்து சொன்ன மாதிரி ஏங் விசேஷத்துக்கு வந்துட்டீங்களே” என பெருங்குரலில் அழுக ஆரம்பித்தாள் வீரம்மாள்.
அவள் அப்படிச் சொல்லவும் எல்லோரும் கேள்விக்குறியுடன்  என்னயே பார்க்கிறார்கள்.
நேற்று மாலை அவள் என்னிடம் கூறியதை கூறினேன்,
  “அட சண்டாளி ஏற்கனவே முடிவு பண்ணித்தான் இத பண்ணுனயா என அதுவரை தலைவிரிகோலமாக இருந்த வீரம்மாளின் தாய் அவளை நோக்கி வந்து வேகாளத்துடன் வீரம்மாளை அடிக்கிறாள்.
 “அடி,அடி என்னைய அடிச்சிக்கொல்லு,,,,இனி நா உசிரோட இருந்து யாருக்கு என்ன பிரயோஜனம்,பூமிக்கு பாரமா,இல்ல ஒங்களுக்கு பாரமா,இப்பிடி வாரத்துக்கு ஒருதடவ ஆஸ்பத்திரியில  போயி படுத்துக் கெடந்து  இந்தஈன  உசுரகையில   புடிச்சிக்கிட்டு
இருக்குறதுக்கு பதிலாபேசாம செத்துத்தொலையலாம்”,,,,என  பெருங்குரலில் அழவும்,அங்கிருந்தவர்கள் வீரம்மாளை அவளது தாயிடமிருந்து பிரித்தெடுத்து அவளது அண்ணனுடன் அனுப்பி வைத்தார்கள்.
  ஐந்தாம் வகுப்பு முடிக்கிற வரை அவளும் மற்ற பிள்ளைகளை போலவே பூங்கொத்தாய் சுற்றித்திரிந்தாள்.
  கைகால்  முளைத்த  புஸ்பம்  ஒன்று  கொத்தாக  நடந்து  திரிவதை போல/ ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,,,,,,,என வகுப்பறையின் படிகளிலும்,படிப்பிலும் பூப்பந்தாய் முன்னேறியவளை ஆறாம் வகுப்பு நுழைவின் போது ஒரு நாள் பள்ளியின் விளையாட்டு மைதானம் சறுக்கிவிட, மறுநாள் இடறிவிட ,,,,,,,,,,அவளுள் “எலும்புருக்கி நோயின் துவக்கம் கற்றாழை முள்ளாய் கைவிரித்து விஷ நகம் நீட்டியிருக்கிறது” என மருத்துவர்கள் சொன்னார்கள்.
 ஆனாலும் மருத்துவம் இருக்கிறது முள்ளை  பிடுங்கி எரிந்து விடலாம் அல்லது மக்கிப்போக செய்து விடலாம் என்கிற மருத்துவர்களின்  வார்த்தைகளுடன் மருந்து மாத்திரை, ஆஸ்பத்திரி வாசனை என  அவளது படிப்பு முற்று புள்ளி வைக்கபட்டு நின்று போனது.
பிரில்வைத்தபாவாடையும்பப்புக்கைவைத்தசட்டையும்அவளுக்குப்  போடப்
பிடிக்கும்.
அது அவளது அழகையும்,தோற்றதையும் கூட்டிக்காட்டும்.பள்ளிசீருடையாக இருந்த போதும் கூட/
பச்சைபாவாடை,வெள்ளைசட்டைதான்.மணிகண்டன்டெய்லர் தைத்துக்
கொடுப்பது.
 வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று செட். பள்ளியில் கொடுத்த யூனிபார்ம் இல்லை அது.அவர்கள் தனியாக எடுத்து தைத்துக் கொண்டது.
 அந்த அளவு வசதி என சொல்ல முடியாது.ஆனாலும் வசதி செய்து கொண்டார்கள்கைக்கும்வாய்க்கும்பத்தாத வருமானம்தான்.
வருடத்திற்கொருமுறை வருகிற காட்டு விளைச்சல்தான்.
  அப்பா இல்லை,வீரம்மாளின் இரண்டாவது வயதிலேயே இறந்து போனார் நோய்வாய்ப்பட்டு/
  கண் முழியாத கோழிக்குஞ்சுகளாக இருந்த வீரம்மாளையும்,அவளது அண்ணனையும் அவளது தாய்தான் பஞ்சாரத்து கோழிக்குஞ்சுகளாக பொத்திப் பாதுகாத்தாள்.
  அப்போது அவளது தாய்க்கு கைவரப்பெற்ற வட்டிக்கு விடும் தொழிலை இது நாள் வரை கைபிடித்து வருகிறாள்.
  உள்ளூர்,பிறந்து வளர்ந்த மண்,சுற்றியிருக்கிற சொந்தம்,ஒட்டியிருக்கிற உறவுகள் என அவளுக்கு ஒரு பிடிப்பாக ஆகிப்போக மேலும் இறுக்கிகொண்டாள்.
   நல்லமனம்,நல்ல தனம்,நல்ல மாதிரி,,,,, என்பதும் இருந்த அவளிடம் கொஞ்சம் கல்மிஷமும் இருந்தது.அப்படி இருந்ததால்தான் அந்தத்தொழிலை நடத்த முடியும் என்கிறாள்/
  அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவளாக வீரம்மாளும்,அவளது அண்ணன் முருகபாண்டியும்.
 அவளது அண்ணன் ஊர் எல்லை காலனி வீட்டுப்பகுதியில் தனியாக வொர்க் ஷாப் வைத்திருக்கிறான்.
  காலையில் எழுந்து கட்டிக் கொள்கிற ரெக்கைதான்,இரவு ஆனாலும் கழட்டுவதில்லை.
அவனுக்கு கழட்டி விடவும் ஆள் இல்லை.எல்லாம் அவனை ரெக்கை முளைத்தவன் என்றே சொல்கிறார்கள்.
 அவன்,அவனது குடும்பம் என தனியாக ஒதுங்கிக்கொண்டது மட்டுமில்லை,அரிசி பருப்பு,அன்னந்தண்ணி என எந்த பரிமாற்றமும் கிடையாது.
  வீரம்மாளும் அவளது அண்ணன் வீட்டிற்கு  பால் காய்ச்சிய அன்று போனதுதான்.அதற்கப்புறம் இவளும் போனது இல்லை,அவனும் வா என சொன்னதும் இல்லை.
  கூப்பிட்டாலும் ஆசையாக போய் வர அவளது உடலில் தெம்பு இல்லை.
 காலையில் எழுந்து கண்மாய்க்கரைபக்கம் போய் வருவதற்குள்ளாகவே உடல் தளர்ந்து போகிறது.கைகாலலெல்லாம் நடுக்கமெடுத்து ஒரு மாதிரியாக வர எங்காவது சிறிது நேரம்உட்கார்ந்துவிட்டுதான் வருவாள்.
 ஊர்,ஊர்மந்தை,டீக்கடை,மனிதர்கள்,பூங்கூட்டமாய் பள்ளிக்கு நகரும் சிறுவர் சிறுமிகள்,ஆடு மாடுகள் போய் வந்து கொண்டிருக்கிற பஸ் லாரிகள்,,,,,,,என எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறும்,தனது தள்ளாமையை நினைத்தவாறுமாய் வீட்டு நடையில் அமர்ந்து பாவாடை  தூக்கி முழங்கால் வரை சொரிகிற வீரம்மாளிடம் பேசுவதற்கு யாரும் ஆட்களுமில்லை,எவரிடமும் அவளுக்கான பேச்சுகளுமில்லை.
 
 தன்னந்தனியாக ரோட்டையும் வீட்டையும், வானத்தையும்,மோட்டு வளையையும் வெறித்துப்பார்த்துக்கொண்டும்,தன்னுள்ளாக ஏதாவது பேசிக்கொண்டுமிருக்கிறவீரம்மாளுக்கும்,எனக்குமானபேச்சு பலசமயங்களில்
இப்படித்தான் இருக்கிறது.
  
  "என்னம்மா எப்டியிருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா? சௌக்கியமா? சாப்புட்டீங்களா?",என/  

18 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல சிறுகதை,ஆரம்பித்த வரிகளை வைத்தே முடித்துள்ளது சிறப்பு.
நோயால் வாடுபவர்களை தூரத்தில் இருந்து பார்க்கும்போது பரிதாபமும் இரக்கமும் ஏற்படும்.
அருகாமையில் இருந்து அவர்களை பராமரிப்பவர்களுக்கு நாட்பட நாட்பட இரக்கம் பரிதாபம் குறைந்து விடுவது
கசப்பான உண்மையாகத்தான் இருக்கிறது.
தாய் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

vimalanperali said...

வணக்கம் tn முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

மகேந்திரன் said...

உண்மையான உண்மைகள்
கதை முழுதும்
வியாபித்திருக்கிறது நண்பரே..

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்,நன்றிட் தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

சசிகலா said...

வீரம்மாளிடம் பேசுவதற்கு யாரும் ஆட்களுமில்லை,எவரிடமும் அவளுக்கான பேச்சுகளுமில்லை.// எங்க ஊரில் உள்ள திண்ணைகளில் அமர்ந்திருக்கும் வயதான பெரியவர்களின் நினைவுகளோடு பயணிக்க வைத்தது உங்க வரிகள் .

ரிஷபன் said...

ஊர்,ஊர்மந்தை,டீக்கடை,மனிதர்கள்,பூங்கூட்டமாய் பள்ளிக்கு நகரும் சிறுவர் சிறுமிகள்,ஆடு மாடுகள் போய் வந்து கொண்டிருக்கிற பஸ் லாரிகள்,,,,,,,என எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறும்,தனது தள்ளாமையை நினைத்தவாறுமாய் வீட்டு நடையில் அமர்ந்து பாவாடை தூக்கி முழங்கால் வரை சொரிகிற வீரம்மாளிடம் பேசுவதற்கு ..


பேச்சிழந்து போகிறது.. எழுத்தின் தாக்கத்தில்.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/

பாலா said...

அருமை. உலகிலேயே பெரிய கொடுமை, தனிமையும் புறக்கணிப்பும் கொடுக்கும் வலிதான்.

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக மிக்க நன்றி.

மோகன்ஜி said...

ஆற்றோழுக்கு போன்ற நடை.. யதார்த்தமான விவரணைகள்... நன்று நண்பரே!

Anonymous said...

எப்டியிருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா? சௌக்கியமா நண்பரே?

யதார்த்த சிறுகதை அருமை...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நன்றாக் இருக்கிறேன்.நல்ல சௌக்கியம்,நீங்களெல்லாம் இருக்கையில் எனக்கென்ன கவலை?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மோகன் ஜீ சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் இந்தச் சிறுகதையை வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் இருப்பின் வாசிக்கவும்.
நன்றி.
http://blogintamil.blogspot.in/2012/06/2.html

vimalanperali said...

வணக்கம் முரளிதரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,தாங்கள் வலைசரத்தில் எனது படைப்பை வெளியிட்டமைக்கும்/

ஹேமா said...

பேச்சுத்துணை.ஒரு மனிதனின் துணை என்பதை ஆழமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ஒருவரில் ஒருவர் சார்ந்திருப்பதுதான் பாதுக்கபும் சந்தோஷமும் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/