3 Jun 2012

பணயம்,,,,,,


            
வெருகு ஒன்று நடு ரோட்டில்
இறந்து கிடக்கிறது.
உடல் வரிந்த கோடுகளுடனும்,
தடித்துப் புஷ்பித்த உடலுடனுமாய்/
சாலையைக்கடந்த அவசர நிமிடங்களில்
கனரக வாகனமோ,இலகுரக வாகனமோ,
ஏதாவது ஒன்று
அதன் மீது ஏறி இறங்கியிருக்கலாம்.
அல்லது யாரேனும் அடித்துப்போட்டு
விட்டுக்கூடப் போயிருக்கலாம்.
பிடித்த எலியை கவ்விக்கொண்டு
அவசரமாக ஓடி வந்திருக்கலாம்,
அல்லது வீடுகளில் ஏதாவது
தின்று விட்டு விரட்டுப்
பெற்று வந்திருக்கலாம்.
இல்லையெனில் யாராவது
எறிந்த கல்லெறிதலிருந்து
தப்பிப்பிழைக்க ஓடியிருக்கலாம்.
அங்கு இங்கு தங்கியும்,ஓடியும்
போக்கிக்காட்டியும்திரிந்த
உயிர் ஒன்று எந்த வித சலனமும் அற்று
வாயில் ரத்தம் ஒழுக இறந்து கிடக்கிறது.
சாலை அதன் இயக்கத்தில் 24 மணி நேரமும்/

7 comments:

மகேந்திரன் said...

இயக்கமது சுழியாகி
இயக்கமற்றுப் போனால்
ஆகும் நிலைதனை
அழகாய் சொல்கிறது கவிதை..

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

ந.பெரியசாமி said...

நல்லா வந்திருக்கு நண்பா

vimalanperali said...

வணக்கம் பெரியசாமி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

ஒரு உயிரின் பெறுமதியைச் சொல்லியிருக்கிறீகள் அழகாய் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.உயிர்களின் பெருமத்யைச்சொல்லாமல் வேரெதைப்பற்றிச் சொல்ல?உயிர்களில் பொதிந்டுள்ல ரகசியமும்,செய்திகளும் நிறையவே/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/