19 Jun 2012

கைவளவி,,,,,


    
கூந்தல் தைலம் ஒன்று,
கழிவறை சுத்தம் செய்கிற திரவம் ஒன்று,
ஊட்டச்சத்து பானம் ஒன்று/
வெவ்வேறு பயன் பாடுகளுக்குண்டான
மூன்றையும் வாங்கி வரச்சொன்ன
மனைவி பேச்சையும்,சரக்குகளையும்
மற்ற சரக்குகள் வாங்கிச்செல்கையில்
மறந்து போனேன்.
கடைக்காரர் சரக்குக்கேட்க,
பணிபுரிபவர் எடுத்துக் கொடுக்க
இடையில் எங்கெங்கோ பயணப்பட்ட
மனதின் ஓய்வற்ற அலைகளுடன்
வீடு வந்து சேர்ந்த போது உறைத்தது
வாங்க மறந்து போன மற்ற மூன்றும்/
நாளை மற்றும் பின் வருகிற
நாட்களில் கண்டிப்பாக
வாங்கி விட வேண்டும்.
அப்படி வாங்குகையில்
இன்னொன்றும் சேர்ந்து
விடக்கூடும் இந்த பட்டியலில்/ 

11 comments:

சசிகலா said...

மற்ற சரக்குகள் வாங்கிச்செல்கையில்
மறந்து போனேன்.// எந்த சரக்குங்க சும்மா சொன்னேன் நல்லா இருந்தது .

முத்தரசு said...

அண்ணாச்சி, சரக்கு வாங்கியாதால் மறந்து போனீர்கள் - ஹி ஹி ஹி சரக்கு போட்டு பாருங்கள் எல்லாமே தெளிவா ஞபாகம் வரும்.

சென்னை பித்தன் said...

மறந்துபோய் வீடு திரும்பியபின் என்ன ஆயிற்று?

செய்தாலி said...

யாதர்த்தம்
சொன்ன விதம் அருமை சார்

விச்சு said...

மறத்தல் என்பது மனிதனுக்கு அடிக்கடி நேர்வதுதான். இது சிலநேரம் நன்மையாகவும் உள்ளது.

vimalanperali said...

வணக்கம் சசிகல மேடம்.சரக்குகள் படுத்துகிற பாடு சொல்லிமாளவில்லை,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மனசாட்சி சார்,சரக்குபோடுவதென்ன,அனுதினமும் விஷமாகிப்போன உணவையும்,
மாசுபட்டுப்போன காற்றையும்,
அசுத்தமாகிப் போன தண்ணீரயும் அருந்தும் நாம் சரக்கின் விஷத்தை விட சற்று கூடுதலாகவே அருந்துகிறோம்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னைப்பித்தன் சார்,மறந்து போய் வீடு வந்த எல்லா ஆண்களுக்கும் கிடைக்கிறா அர்ச்சனையே/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் செய்தாலி சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வரங்களாயும்,சாபங்களாயும் ஆகிவிட்ட ஞாபகங்கள் போல் மனித வாழ்வில் மறதியும் ஆகிப்போகிறதான்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக விச்சு சார்.