21 Jul 2012

மனக்குமிழ்,,,,,


 யாருண்ணே,,,,,?ராஜ கோபாலா? யாருண்ணே ராஜகோபாலா?என்கிற   இளம் குரலுடன் கலந்து வந்த கேள்வி இரண்டாவது முறையாகத்தான் என்னை தொடுகிறது.
  
 எட்டித் தொட்ட குரலை என்னை நோக்கி எறிந்தவனுக்கு 14 ஐ தாண்டி 15 இருக்கலாம் எனஅறிகிறேன்.எனதுமகன்வகுப்புத் தோழன்.

 இளம் முகம்,வளித்து வாரிய தலைமுடி. இளம் சிவப்பில்வேர்வைவழிந்த என்னைப்பிசுக்கான முகம்.நட்டு வைத்த செடிக்கு கையும்,காலும் முளைத்தது போலத் தெரிந்தான்.

   அவனே பேசிய அவனதுதொண்டைக்குள்ளிலிருந்து இன்னொருவர் எட்டி உதைத்துகுரலைஉடைப்பது போல இருந்தது.

   குரல்கள்   உடை படுகிற  காலம்  அல்லது   பருவங்களை சுமந்த அவனும்,
அவனைப்  போன்ற பலருமாய்  பள்ளியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த
மாலை நேரம்.

   இறகு விரித்த பறவைகள் ஒன்றோடு ஒன்றுதோள்தொட்டும்,இறகுறசியுமாய்
 பறந்தும்,நடந்தும் வந்த ரம்மியமது.

  உரசிய சிறகிலிருந்து உதிர்ந்த இறகுகள் சிதறிக்கிடந்த வெளியெங்கிலுமாய் ஆனந்தித்துத் திரிந்தவைகளில் இரண்டு ஒன்றுடன் ஒன்று உரசி கீழே விழுந்து விடுகிறது.

  பார்த்துக் கொண்டிருந்த எனக்கே மனம் பதறுகிற போதுஅவைகளுக்கு,,,,,? நல்ல வேளையாக காயமேதும்படவில்லை.

  சிரித்தவாறு எழுந்து கைகால்களை உதறிதட்டி விட்டு,விட்டு உற்சாகமாக மூக்கோடு மூக்கு உரசியதாய்வந்தவைகளைப் போலபள்ளியின்வாசலடைத்து வருகிறார்கள்.

   அவர்களிலிருந்துபெயர்ந்தெடுத்துதரைதுளைத்துவந்தவனாகஎன்முன்னே
வந்துநின்ற அவன்தான் என்னை நோக்கி குரலும், கேள்வியும் வீசியவனாக/

     பழனிஅவனதுபெயர்உள்ளூரில்தான்தாளமுத்துதெருவில்இருக்கிறான்.
கைக்கும்,வாய்க்கும்பத்தாதவருமானத்தைகைக்கொண்டகுடும்பத்தில்பிறந்து விட்ட அழகுப் பையன்.

   திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து வரமிருந்து தவமிருந்து பெற்ற பிள்ளை அவன் என்பது உபரித்தவலாக/

  அவரது அப்பா வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஐஸ் வியாபாரம் செய்யப் போய்விடுவார்.அதில் கிடைக்கிற வருமானம் போக வாரத்தின் மீதி நாட்களுக்கு பருப்பு மில்லில்வேலை.

   அதுஅல்லாதநாட்களில் நைட் வாட்ச்மேன் வேலைக்குப்போய்விடுவார்.
அங்கும் நிரந்தரமாகவே இங்கேயே வந்து விடுங்கள் என வேலைக்கு என கூப்பிடுகிறார்கள் கம்பெனிக்காரர்கள் இவர்தான் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்.

 பெயிண்ட் அடிக்கிற மிக்கேல்ராசு கூட சொன்னது. “ஏன் இப்பிடி சைக்கிள் மிதிச்சிக்கிட்டு,ஐஸ்யேவாரம்,பருப்புமில்லுன்னுபோயிக்கிட்டு,செவனேன்னுவாட்ச்மேன்வேலபாத்துக்கிட்டு இருக்கவேண்டியதுதான,இவரு மேல
எவ்வளவு நம்பிக்கை இருந்தா இப்பிடி கூப்புடுவாங்க?என்றாராம்.
 
 பின்னாளில் அவனைப்பற்றியும்,அவனது குடும்பத்தைப்பற்றியுமாய் இப்படி அறிந்து கொள்கிறேன்.எனது மகன் மூலமாக காராசேவுக்கு கையும்,காலும்
முளைத்தது மாதிரி இருக்கிறான் அவன் என பேசிக்கொண்டிருந்த ஒரு நன் நாளின் இரவில்/

   வரச்சொல்லியிருந்தான் பள்ளிக்கு மாலை ஆறரை,ஆறே முக்கால் போல/ அவனது வார்த்தையின் நுனி பற்றி,நடு தொட்டு ,அடிபிடித்து பள்ளி வாசலில் அவசர அவசரமாய் நான் போய் நின்ற நேரம் மாலை 6.50.

  வெயில் தன்னை மஞ்சளுக்குள் மறைத்துக் கொண்டு இரவை நோக்கி கை நீட்டுகிற நேரம். நான் போய் விட்டேன். காலையிலேயே சொல்லியிருந்தான்.

 “இன்றுமாலைவரும்போது செருப்பு வாங்க வேண்டும் அதுபோக பள்ளிக்கு கொண்டு போனமண்ணெண்ணெய்யும்,ஸ்டவ்வும்அப்படியே இருக்கிறது,
அதையும் எடுத்து வரவேண்டும் நீங்கள் வந்தால்தான் அது சாத்தியப்படும்.
ஸ்டவில்இருக்கிறமண்ணெண்ணெய்சிந்தாமலும்,பாட்டிலைபைக்குள்சாயாமல்கொண்டுவருகிறசூட்சும்மும்நெளிவும்,சுளிவும்எனக்குதெரியாதுஅல்லதுகைவராது.அதற்காகத்தான்உங்களது வருகை அவசியப்படுகிறது,கூப்புடுகிறேன்”
என அவன் சொன்ன போது ஆட்டிய தலையை நிறுத்தாமல் பள்ளி வாசலில் நான்.

 பள்ளியில்நடக்கவிருக்கிறஒருகண்காட்சிக்காகஅவன்ஒருசைன்ஸ்ப்ராஜக்ட்செய்துகொண்டுபோயிருந்தான்.

  அதில் ஸ்டவ்வும்,மண்ணெணெய்யும் அடக்கமாகிபோகிறது.அப்படி அடங்கி விட்டவகளை கொண்டு வருவதற்கும் சேர்த்துதான் எனது வருகை.

  நான்,சாலை சாலையில் விரைந்து கொண்டிருந்த மனிதர்கள் விரிந்து சிரித்த
மண்,அதன் வாசனைமிகுந்ததுகள்கள்எல்லாம்பெரிதும்சிறிதுமாய் என்னை நோக்கி சிரித்துக்கொண்டிருந்த வேளையில் என்னை நோக்கி வந்த பையன்,
சைக்கிளபாத்துக்கோங்கன்னே,நான்ராஜகோபால்கிட்டசொல்லீட்டுவந்துர்ரேன் அவனுக்காகநீங்கவாசல்லதவமிருக்கீங்கண்ணு” என கிளம்புகிறான்.

  14ஒன்று 49 திடம் குரல் பரிமாற்றம் செய்து கொண்ட மேல்லிய வேளையது.அது.

   மெல்லிய இறகு ஒன்று உடல் தடவிப் போன உணர்வை ஏற்படுத்திச் சென்ற கணமாயும்/

 ஆ,,இதுவும்நன்றாகத்தான்இருக்கிறது.அவன்,நான்மற்றும்சாலையில்சென்றவாகனங்கள்,மனிதர்கள் எனக்கு எதிராக நின்று தெரிந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவர்மற்றும் கேட் அருகே காக்கி யூனிபார்ம்ல் நின்றிருந்த வாட்ச் மேன், என காட்சிப்படலமாய் என் கண்ணில் பட்ட நேரத்தில் பள்ளியினுள்ளே சென்றவன் சுவற்றிலடித்த பந்தாக திரும்பி வருகிறான்.

 “அண்ணேநீங்கபோவீங்களாம்,அவன்மேட்ச்ஆடிக்கிட்டுஇருக்கான்.முடிச்சிட்டுவருவானாம்.”சொல்லி முடித்து சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.

 சிறிது நேரம் பள்ளியையே வெறித்துப் பார்த்தவனாக நின்று விட்டு கிளம்புகிறேன் ,மெலிதாக திறந்திருந்த வாய் கூட மூட தோணாமல்/

 ஏதாவது ஒரு நினைவு முற்றிப்போகிற நேரங்களில் இப்படித்தான் ஆகிபோகிறது. 

  ஏதோ ஒருவிழிப்புணர்வு ஊர்வலத்தில் பையன்களோடுபையன்களாக சேர்ந்து
சித்துவாத்தியாரை செய்த கேலியும்,வைத வசவும் அவருக்கு கேட்டிருக்குமோ எனக்கருதி பின்னாளில் நான் பள்ளி போக மறுத்த நாட்கள் இப்போது நிழலாடுகிறது. 

 அவர்போலதமிழ்பாடம்நடத்திநான்வேறுயாரையும்பார்த்த்தில்லைஇதுவரை
எனசொல்கிறவர்களைஇப்போதும்நிறைந்துபார்த்திருக்கிறேன்சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

 உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட பள்ளியது.இல்லாத வீட்டுப் பிள்ளைகளையும் தன்னுள்அடைக்காத்துவைத்திருந்தபள்ளியில் வாத்தியார்களும்,
டீச்சர்களுமாய் சூழ்ந்த பள்ளியில் அவரகள் நடத்திய பாடங்கள் பதிந்த அளவு அவர்களும் எங்களின் மனம் பதிந்து போயிருந்தார்கள்.   

 துப்பறியும் நாயும்,போலீசும் பள்ளிக்கு வந்த ஒரு நாளில் பள்ளிக்கு லீவு விட்டு விட்டார்கள். பள்ளியில் திருட்டு நடந்து விட்டதென/

கிழக்கோரமதில்சுவரில்தெரிந்ததிருடனின்வழுக்கிஇழுத்தகாலடித்தடங்களைபார்த்தவாறு பேசிகொண்டிருந்த போலீசாரின் பின்னாலேயே நாங்களும் திரிந்தோம் கட்டாமலேயே/(அன்று அவிழிந்த கை இன்று மனைவியை பார்த்த்தும் கட்டிக்கொள்கிறது.)

 அங்கு படித்த நாட்களில் முகமது வாத்தியார் பலருக்கு முன் மாதிரி என சொல்லலாம்.அவர்நடத்துகிறவரலாற்றுப்பாடங்களில்மன்னர்கள்மட்டுமில்லாமல்மனிதர்களும்தெரிந்தார்கள்.வாழ்க்கை,நடப்பு ,சமூகம்,இலக்கியம்,,,,,,
எனநிறைய  பேசி  எங்களது  மனதில்  பதியனிட்ட   அவரைப்   பள்ளியின்
நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை.(பின்இது மாதிரியானவர்களை எந்தப்பள்ளி
நிர்வாகம்தான்ஏற்றுக்கொள்ளும்?)

நான்படிப்பைநிறுத்தியபின்நாளின்மாலைப்பொழுதொன்றில் பஜாரில்அவரைப் பார்த்தேன்.சம்பளப்பிரச்சனையில்சங்கத்துடன்இணைந்து போராடியதற்காகம், நீதிமன்ற வாசல்ப் படியைமிதித்த்தற்காகவும் என்னை நீக்கிவிட்டது அந்த பள்ளி.இப்போது சிவகாசியில் இருக்கிற ஒரு தனியார் பள்ளீயில் வேலை பார்க்கிறேன்” என்றார். 

 இத்தனை வருட பள்ளி வாழ்க்கையிலும்,வெளி வாழ்க்கையிலும் அவரைப் பார்த்த நாட்களில் அன்றுஅவரதுஅருகாமையாகநின்றுஸ்டாரங்காக நல்ல டீக்குடித்தேன்.மனசு ஆசுவாசப்பட்டு/ 

 போகிறவழியில் பாய் கடையில் டீக் குடித்து விட்டு போக வேண்டும்.ஏதாவது கடிக்கக் கிடைத்தால் தேவலாம்.பெரும்பாலும் வாழைப்பழம் இருக்கும்.வடை பஜ்ஜி என சாப்பிடுவதை விட இது எவ்வளவோ மேல்.

 வாழைப்பழத்தில்அத்தனைரகங்கள்உண்டு என அவரது கடை பார்த்துதான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

கடை அடைத்துத் தெரிந்த வாழைப் பழத்தின் ரகங்கள் நிறைந்து தெரிந்தாகவும் ,மற்றசரக்குகள்நிறையதொங்கியதும்,காலப்போக்கில்குறைந்துகண்முன்னாலேயேஅருகிப்போனசோகம்சற்றேசங்கடமானதுதான்.அண்ணன்தம்பிபிரிவினையால்வந்தவிளைவு என்றார்கள்.

வாழைப்பழத்தார்கள்தொங்கவிடப்படுவதற்காய்அரையப்ப்பட்டிருந்தகொக்கிகள் கடையின் உள்கூரையில்இன்னும்காணக் கிடைக்கிறது.

 இரண்டு அல்லது ஒரு பழத்துடன் நகர்ந்தால் வருகிற ரமணன் சார் தம்பி கடையில்தான் பையனுக்கு செருப்பு எடுக்க வேண்டும். 

 மற்ற கடைகளை விட பத்து,இருபது குறைத்து எடுக்கலாம். கையில் காசு இல்லையென்றாலும் கூட கடன் சொல்லிக் கொள்ளலாம்.ஒரு வாரம் கழித்து கொடுத்த போது கூட ஒரு சிறு முகச் சுழிப்பு இல்லாமல் வாங்கிக் கொள்வார்.

என்னநாம்போகிறநேரம்மனுசன்கடையில்இருக்கவேண்டும்.அவ்வளவுபெரியகடையையும்,அவ்வளவுவிலைகொண்டசரக்குக்களையும்போட்டு விட்டுக்
போய் விடுவார்.கடை திறந்திருக்கும்.அவர் இருக்கமாட்டார்.அவ்வளவு நெரிசலான இடத்தில் கடையை திறந்து போட்டு விட்டுப்போக தனி ஒரு தைரியம் வேண்டும்.

 இன்று அவர் இருக்கிற மாதிரி தெரிகிறது.திறந்திருந்த கடை வாசலில் ஆடிய நிழல் அவர் இருப்பதை உறுதி செய்தது.அப்படியானால்கண்டிப்பாகஇன்று செறுப்பு எடுத்து விடலாம்.

 தெரிபுகளின் நுனி பற்றி சாலை கடக்கிறவனயும்,அவரது கடை நோக்கி விரைகிறவனாகவும்/

10 comments:

 1. நல்லதொரு படைப்பு .. அருமை

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வணக்கம் அருணன் கோபால் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வழக்கம் போல் சிறுகதை நன்று.

  ReplyDelete
 6. வணக்கம் முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. படங்களை எப்படித் தெரிவு செய்கிறீர்கள். எல்லாப்பதிவுகளிலும் படம் அருமையாக இருக்கிறது. ஆசிரியர்கள் பட்டியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசிரியர்கள் பிடிக்கும். சில ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
 8. வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
  நீங்கள் சொல்கிற அளவுக்கெல்லாம் தகுதிவாய்ந்தவனில்லை நான்.ஏதோ கொஞ்சம் படிப்பு, எழுத்து என ஓடிக்கொண்டிருக்கிறேன்.அவ்வளவே.
  நிறையப்பேர் இருக்கிறார்கள் திறமை சாலிகள்.வாய்ப்புகிடைக்காததினால் வெளியே தெரியாமல்/இது போக ஊர் பாஷையில் சொல்வதானால் நான் நேற்றுப்பையன்.நன்றி,வணக்கம்/

  ReplyDelete
 9. நிகழ்வுகளை நெஞ்சுக்குள் நிறுத்தும் வரிகள் ...
  அவ்வளவு வீரியம் அவ்வளவு நேர்த்தி ...
  அப்படியே ஒட்டிக்கொண்டது ... என் அன்பு வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 10. வணக்கம் அரசன் சே,சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete