16 Jul 2012

விமர்சனமல்ல,கருத்தே,,,,/


   “ஒன்று ஆய்வு மற்றொன்று புனைவு”என்கிற என்கிற கடிதத்துடன்வந்திருந்த இரண்டு நூலகள் அவை.
  
 ஒன்று“அப்பதா”சிறுகதைத்தொகுதி.இரண்டாவது“அருந்தவப்பன்றிசுப்ரமணியபாரதி”

பொதுவாக சிறுகதைகள் படிக்கிறவர்களை கைபிடித்தும், தோளைனைத்துமாய்
உடன்  அழைத்துப்  போய்  அதன்  உலகில்   சஞ்சரிக்கச் செய்துவிடும் எனக்
கூறுவார்கள் அறிவுலகவாதிகள்.உண்மைதான்அது.

அப்படித்தான் செய்திருக்கிறது “அப்பத்தா” சிறுகதை தொகுப்பு/

   “நீசொன்னதுதான்  நடந்ததுஅம்மா”  என்கிற சுயவிவரண சொல்லாக்கத்துடன்
ஆரம்பித்துபத்துதலைப்புகளில்பத்துதளங்களைகாட்டிவாசகனினன் மனதை ஈர்க்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் நூலாசிரியர் தோழர்திரு “பாரதிகிருஷ்ணகுமார்” அவர்கள்.

  வீட்டின்நிலைவாசலைதாண்டாதஆணின்அதிகாரம் குடிகொண்டுள்ளவீட்டின்
மையநாயகியாகவருகிறஅம்மாமிகவும் ஈர்க்கிறாள்.

தன்வாழ்நாளில்ஒருமுறைகூடதனதுதேவைகளுக்காகபிறர் உதவியைநாடாத
அம்மாஇறந்துபோகிறபோதுமுறிந்துபோனஅப்பாவின்அதிகாரத்தை சொல்லிச்
செல்கிறது “அம்மாவும்,அந்தோன் சேக்காவும்"

  "அறம்வளர்த்தநாதனி"ல்  உள்ளமெல்லாம் கவலைபரவ  தனது  பெயரைப்
பற்றியும்,அதன் நீளம் பற்றியும் பல்வேறு பரிமாணங்களில்யோசிக்கிற கதையின் நாயகன் பாதிக்கதையில் காணாமல் வேறு எங்கோபோய் விடுவதாகவே தோணுகிறது.

   எதையும் விற்று பணம் பண்ணலாம் ,மனித மனதில் நஞ்சைவிதைக்கலாம் என்கிற உலகமயமாக்கத்தின் தாக்கத்தைசொல்லிப்போகிற கதையாக “ஊற்று”.

“பூவிலிருக்கிறதேனைச்சாப்பிடபட்டுவெளியேபோய்விடும்.”எனவீட்டைசுற்றிவருகிறபட்டாம்பூச்சியைஅடித்துச்சாப்புடுகிறபல்லியாகஎங்கும்நிலைகொண்டுள்ள“தெய்வநாயகம்சார்”ஒரு உருவகக்கதை.

  முஸ்லீம்களை மட்டுமல்ல லுங்கியையே வெறுக்கிறஅப்பாக்களின் உருவில்
நிறையப்பேர்நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்   என்றும்,  த ன்னிடமிருந்து பறி
போனலுங்கியேபிழைப்புபறிபோனஒருவனின்தேவைநிறைக்கிறஆடையாகஆகிப்போகிறது என சொல்லிச்செல்கிறது“லுங்கி” சிறுகதை.

  நெஞ்சாங்குழியில் ஆழ வேர் ஊன்றியிருக்கிற ஒருவரின் நினைவுநனவில் வந்து  தண்ணீர்  புகட்டவும்  உயிர்விடுகிற   அப்பத்தாவின்  நிமிடங்கள்  கதை
முழுவதும் செதுக்கப்பட்டு தெரிவதாக.தன்னைத்தானே செதுக்கிக்கொள்கிற சிற்பத்தின்நினைப்பு கதையை படித்து முடித்ததும்வருவது தவிர்க்க இயலாமல் போவதை “அப்பத்தா”கதை நெசவிட்டிருக்கிறது.

   பழைய குடியிருப்பு ஒன்று புதியவர்களின் வருகையாலும்,  செய்கைகளாலும்
எப்படியெல்லாம் மாறிப்போகிறதென்பதையும் அப்படிமாறிப்போனதால் அதில் குடிகொண்டுள்ள மென்மனக்காரர்கள்எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் (குறிப்பாக அம்மா)என்பதைசொல்லிச் செல்கிற கதையாக “கிணறு”(குடியிறுப்பு மட்டுமாபாதிக்கப்பட்டுள்ளது?)

சமீபத்தில்எந்தஒருசிறுகதையையும்படித்துஇதுமாதிரி கண்ணீர்விட்டதில்லை.
எனசொல்லவைக்கிறகதையாக“கோடி”.மனிதமனங்களில்கரடுதட்டிப்போயுள்ளமுரண்பாடுகளும்,பிடிவாதங்களும்,வரட்டுகௌரவங்களும்,போலித்தனங்களும்  குடும்பத்தில்  அது  விதைக்கிற  அவஸ்தையை சொல்லிச் செல்கிறது.

   தன் குறையை     மறைக்க     சுந்தர்ராஜன்    சேர்த்துக்    கொள்கிற    இன்னொரு
வீட்டையே(பெண்ணையே) அவருடன் சேர்த்து வைத்து விட்டுமுப்பதிற்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளுடன் தஞ்சம் புகுந்துவிடுகிற அன்ன பூரணி ஒரு போராளியாகவேதெரிவதை சொல்கிறகதையாக “துறவு”

  கைபிடித்த கணவனின் கயமைத் தனங்களுடன் வாழ்கிற மனைவிஎங்காவது தூரந்தொலைவு செல்கிறபோது  அல்லது  ஏதாவது  விசேஷ  நிகழ்வுகளில்  தன்
மனம் பிடித்தவனை,பள்ளிகால நண்பனை சந்திக்கிறநேர்கிற சமயங்களில் அவிழ்ந்து விடுகிற மனதை அள்ளி முடியபிரியமில்லாமல் அப்படியே விட்டு விட்டு போய் விடுகிற கதையாகவிரிகிறது”கல்பனா”

  கதையும் கதைக்களமும் கதைமாந்தர்களும்  நம்அக்கம்பக்கத்தில் வாழ்கிறவர்
களாகவும்,நம் உறவுகளுக்குள் ஒருவரைப் போலானவரே என்பதும் நாம் அன்றாடம் சந்திக்கிற,பேசுகிற,அளாவளாவிக்கொண்டிருக்கிற மனிதர்களைப் போலவே மென்மை பூத்தவர்களாகவும் ,கரட்டுத்தன்மை மிக்கவர்களாக்கவும் படம் பிடித்து காண்பிக்கப்பட்டுள்ளார்கள்.

   இது  தவிர  கதைகள்  அனைத்திலும்   முக்கிய   கதாப்பாத்திரங்களாகவும்  மையஉருவாகவும்குடிகொண்டுதெரிவதுஅம்மா,அப்பா,அத்தை,,,,என்கிறரத்தப்பிணைப்புகளே/

 இப்படிபுத்தகம்முழுக்கவும் நிறைந்திருக்கிற உறவுகள் கதைகள் அனைத்திலும் ரத்தமும்,சதையுமாய் எழுந்து நடமாடுவதே கதைகளின் வெற்றி/

கதைகளைப்படித்துமுடித்துவிட்டுபுத்தகத்தைமூடிகீழேவைக்கப்பிரியமில்லாமல்இறுகப்பற்றிகொண்டிருக்கிற நேரம் கண்களும்,மனதும் பணித்துப் போகிறது.

  இப்படி பணித்து போகிற மாதிரியானதொரு சிறுகதை தொகுப்பை இலக்கியம் கூறுகிற நல்உலகிற்கு வழங்கிய தோழர் திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் என் கரம் பற்றி இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் என்பதில் மிக,மிக பெருமிதம் கொள்ள முடிகிற அதே நேரத்தில் தமிழ் கூறும் இலக்கிய உலகில் அவருக்கென ஒரு இடம் இருக்கிறது என்பதும் திண்ணம் எனவும் சொல்லத்தோணுகிறது.

 (பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் எழுதிய "அப்பத்தா சிறு கடை தொகுப்பிற்க்கான என் சின்ன அறிமுகம்)

11 comments:

 1. நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு சிறுகதை புத்தகங்களையும் படித்ததில்லை... உங்கள் பதிவு மூலம் புத்தகத்தின் அருமை தெரிகிறது...

  தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 2. நானும் ஏதோ திரைப்பட விமர்சனம் என்று நினைத்து வந்தேன். ஆனால் அருமையான ஒரு அறிமுகத்தை கொடுத்து அசத்தி விட்டீர்கள். நன்றி

  ReplyDelete
 3. அழகிய அறிமுகம்.

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.இதில் "அப்பத்தா" ஒன்று மட்டுமே சிறுகதை புத்தகம்.மற்றது ஆய்வு நூல்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் பாலா சார்.நலம்தானே?
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் கவியழகன் சார்.நலம்தானே?தங்களது வாழ்த்திற்கு நன்றி.

  ReplyDelete
 7. வணக்கம் கோவி சார்,நலம்தானே?நன்றி தங்களது கருத்துக்கு/

  ReplyDelete
 8. சிறப்பான அறிமுகப்படைப்பு.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. getugjcp [url=http://fashionvuittonsxoutletstores.webnode.com/]authentic louis vuitton handbags[/url] becttyqdn louis vuitton handbags authentic ygbzweam http://fashionvuittonsxoutletstores.webnode.com/

  ReplyDelete
 10. வணக்கம் அதிசியா அவர்களே/தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி/

  ReplyDelete