சுழற்சி,,,,,,,,
ஒரு சின்ன சுழியில்
உருவாகிப்போகிற
வேறுபாடுகளே பெரிதாக்கி
உணரப்படுகிறது.
நான்சொன்னபடிதான்,
எனது சுழற்சியிலேயே,
எனது கைப்பாவையாக,
எனது எண்ணங்களின்
மறு பிரதிபலிப்பாக,,,,,,,,,,
என இன்னும் இன்னுமாய்
என்பது தகர்ந்து
நாம்,நமது,என்பது
மலர்கிற போது எல்லாமும்
சாத்தியமாகிப் போகும் எனத்தோணுகிறது.
9 comments:
நாம்,நமது,என்பது
மலர்கிற போது எல்லாமும்
சாத்தியமாகிப் போகும் எனத்தோணுகிறது.//
நிச்சயமாக
அருமையான உயர்ந்த சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
நல்ல வரிகள் சார் !
நான் என்று சொல்லாமல் நாம் என்று சொல்லும் போதே-உதடு ஓட்டும் போது....
எல்லாமே சாத்தியம் தான்.
நன்றி.
வணக்கம் ரமணி சார்,நலம்தானே?மலர்கிறவைகளில்,நாம் என்ன,நான் என்ன மலரவைக்கிறதில்தானே இருக்கிறது என எண்ணத்தோணுகிறது,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
ம்ம் உண்மைதான் நாம் என நினைக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கின்றது!
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?ஒட்டுகிற உதடுகளும் மனதும் நாம் என உச்சரிக்க மறந்து நீதிமன்ற வாயில்களில் தவமிருப்பதாய் வருகிற செய்திகள் மிகவும் கவலைக்
குள்ளாக்குவதாய்?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நாம் என நினைக்க மறந்து இன்று கவுன்சிலிங் தேடி அலைபவர்கள் நிறைந்து/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நான் என்பதின் ஆண்வமும்,நாம் என்பதின் ஒருமைப்பாடும்...சிந்திக்க வைக்கிறது !
வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருக்கைக்கும்,
கருத்துரைக்க்குமாக/
Post a Comment