12 Aug 2012

பின்நிழல்,,,,,,


   அவர் ஏன் அப்படி கோபப்பட்டார்?அவரது கோபம் எங்கிருந்து சுளியிடுகிறது
எனத்தெரியவில்லை. ஆனால் கோபப்பட்டு விட்டார்.

 “கோபம்என்றால்கோபம்அப்படிஒருகோபம்”எனசொல்கிறஅளவில்உஷ்ணமாகிப்போகிறார்.பக்கத்தில்ஏதேனும்சின்னஞ்சிறுஉயிரிகள்இருந்தால் கருகிப்
போயிருப்பார்கள் போலும்.

  முதலில் நாலாம் எண் கவுண்டரில் உள்ள கிளார்க்கைப்பார்க்கிறார்.அவர் கூறிய பதிலில் திருப்தியடையாமல் இரண்டாம் நம்பர் கவுண்டருக்கு வருகிறார்.அங்கேயும் அவருக்கான பதில் இல்லை போலும்.பின் வாங்கியவராய் 5 ஐயும்,6 ஐயும் 1 ஐயும் பார்க்கிறார்.அவர்களெல்லாம் பிஸியாக/

  கடை நிலை ஊழியரைபோய்ப் பார்க்கிறார். அவர்7 எண் கவுண்டரைக்காட்ட அங்கேயும்போய்விபரம்கேட்கிறார்.மெலிந்தஉடல்.தளர்ந்தநடை,உப்பிப்போன கன்னம்.
50வயதிற்கு மேலிருக்கலாம் அவருக்கு.சிவந்த நிறத்திற்கு அவர் அணிந்திருந்த சட்டைமுழுதாக பொருந்திப் போய் விடவில்லை. கண்ணாடித் தட்டிலிருந்த மலர்செடிபோல துருத்திக்கொண்டு ஒட்டாமல்/

 தொளதொளவென வெளிர்நிறத்தில் அணிந்திருந்த சட்டைக்கு கீழிருந்த வேஷ்டியில் ஓடித்தெரிந்த ப்ரெவ்ன்க்கலர் கரை அவரது பாதம் தட்டி நிற்கிறது. கையில் எந்நேரமும் ஒலிக்கலாம் அல்லது எந்நேரமும் பேசிக்கொள்ளலாம் என தயார் நிலையில் இருந்த செல்போன்.

 மேல் புறமாய் திறந்திருந்த சட்டை பட்டன் வழியாக அவரது நெஞ்சின் வெள்ளை ரோமங்கள் வெளிப்பட்டுத்தெரிந்தது.

 படிய வாரியிருந்த தலையிலிருந்து நான்கு வெள்ளை முடிகள் சிலுப்பி நின்றது.
 முகத்தில்மாட்டியிருந்த கண்ணாடி இளம் கருப்புக்கலர் காட்டி சிரித்தது.சிரித்த கண்ணாடியின்பிரேம்களில்பெயிண்ட்உதிர்ந்துஉரிந்து நின்றதுஅவருக்கான
உடலையும்எடையையும்தாங்கியவாறு இருக்கையிலிருந்து ஊன்றி நின்ற 
இரண்டு கால்களில் சூவும்,ஸாக்ஸீம்/

 வலது கால் பாதத்தில் பின் பக்கத்தில் பாதியை காணவில்லை.அரைப்பாதம் வரை வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

 “சுகர் ரொம்பகூடிப்போச்சு சார்.சின்ன புண்ணாத்தான் மொதல்ல இந்த யெடத்துலமொளைச்சதுகாலைகாட்டிசொல்கிறார்..அப்பறம்பெருசாகிக்கிட்டே
போயி ஒரு கால கட்டத்துல ஆறல,என்ன செய்ய?டாக்டர் கிட்டப்போயி நின்னப்ப “ஒனக்கு சுகர் ரொம்ப கூடிப்போச்சு,புண்ணு வந்த பகுதிய ஆபரேசன் பணிஎடுத்துரலாம்அப்படின்னாரு,நம்ம ஏரியா டாக்டருதான் சார்,இல்லைன்னா முழுக்காலுக்கும்பரவிமொழங்கால்லஇருந்துஎடுக்கவேண்டி வரும்ன்னாரு.
அப்பத்தான் எனக்கு சுகர் இருக்குற விஷயமே தெரிய வந்துச்சு.சங்கடப்பட்டு என்னசெய்யசார்அந்தடாக்டர்சொன்னஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆயி ஆபரே
ஷன்பண்ணிக்கிட்டேன்.இப்ப அரப்பாதத்தோட அலையுறேன்”சார்என்றார்,

 நேற்றைக்கு முன் தினம் அவர் எனது வண்டிக்கு பின்னால் லிப்ட கேட்டு ஏறி வரும் போதுதான் இதெல்லாம் சொல்கிறார்.

 “நம்ம ஊருல இருக்குறஒரு தனியார் மில்லுலதான் வேலை பாத்தேன் சார்.நான் அங்க போயிவேலைக்குசேரும்போதுஎனக்கு வயசு 23 சார்.ஒரு 4 வருசத்துக்குமுன்னாடிதான்அங்கயிருந்துவந்தேன்,ரிட்டையர்டாகிஇல்ல, மில்ல மூடிட்டாங்க,லாக் அவுட்டுன்னு அறிவிச்சுட்டாங்க,என்ன செய்ய?நஷ்டம்,யூனியன் நடவடிக்கை,அது இதுன்னு கைவிரிச்சாங்க,காரணம் சொன்னாங்க?அதை நம்பி 27 வருசம் ஓடிருச்சு.என்னய மாதிரி கிட்டத்தட்ட 200 குடும்பம்.அவுங்க கதியெல்லாம் என்னாச்சுன்னு தெரியல.பல பேரு பலபக்கம் பொழப்பப்பாக்க போயிட்டங்க சார்.பல பேரு குடும்பத்த மட்டும் இங்க விட்டுட்டு மெட்ராஸீ,பாம்பேன்னு பொழப்புக்காக அலையுறாங்க சார்.மாசம் ஒரு தடவ ரெண்டு தடவைன்னு வந்து குடும்பத்தப் பாத்துட்டு போய்யிறாங்க.
அவுங்க அங்கயிருந்து வரும் போது இருக்குற சந்தோசம் புள்ள குட்டிகள் விட்டு பிரிஞ்சிப் போறப்ப இருக்குறதில்ல சார்.என்னதான் வசதியான ஊருல இருந்தாலும் வேலபாத்தாலும் கூட இங்க பழைய சாப்பாட்ட சாப்ட்டுட்டு இருந்த மாதிரி இருக்குமா சார்?

 எனக்கு ஏதோ குடும்ப பலம், பூர்வீக சொத்து கொஞ்சம்ன்னு இருந்துச்சி,அத வச்சி ஒரு பொண்ண கரையேத்தீட்டேன்,இப்பதிருப்பூர்ல இருக்காங்க,ஏதோ அவுங்க பொழப்பு ஓடிகிறுது நிக்காமலும்,பழுது படாமலும்,/
இன்னொரு பொண்ணுக்கு யெடம் பாத்துகிட்டு இருக்கேன், மிச்சம் நிக்கிறது பையன்தான் சார்.அவன்கையஊணி கரணம் பாஞ்சிக்கிறுவான்.அந்த அளவுக்கு அவங்கிட்ட தெறம கெடக்கு. பெருமைக்காக சொல்லல சார்,சின்ன வயசுல நான்எப்பிடிஇருந்தேனோஅப்பிடியே இருக்கான் சார்.கழுத கொணத்துலயாவது கொஞ்சம்மாற்றம்இருக்கக்கூடாது.சொன்னாலும் கேக்கமாட்டேங்குறான்,
நாலுயெடத்துல போயி அனுவப்பட்டு வந்தா தன்னால தெரியும்.நானும் சும்மா இல்லாம இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு ஒரு யெடத்துல வாட்ச் மேனா இருக்கேன் சார்.

 எனக்கு மாதிரி இங்க எத்தன பேருக்கு வாய்க்கும் வாய்ப்பு சொல்லுங்க?200 குடும்பங்களதெருவுக்குகொண்டுவந்த அந்த மில்லு நிர்வாகம் இதையெல்லாம் யோசிச்சிருக்குமான்னு தெரியல சார். எப்பயுமே வலியும் வேதனையும் நம்மள மாதிரி ஆட்களுக்குதான் சார்,அவுங்களுக்கு என்ன?

  எங்க யூனியன் தலைவர்  கூட ஆளு காலமாயிப் போனாருன்னு சொன்னாங்க
எல்லாம்கேள்விப்பட்டதுதான்எங்கயிருக்காருஎன்னன்னுதெரியல,துஷ்டிக்குக்
கூட போகமுடியல,அவருஇல்லாட்டிஎங்களுக்குமில்லுல,அந்த   சம்பளமில்ல,
அந்த  மரியாதை   இல்ல,  அந்த   வாழ்வு   இல்ல,,,,,,   ஆனா   அப்பிடியெல்லாம்
எங்களுக்கு  கௌரவமும், நெஞ்சு  நிமிர்வும்  குடுத்தவரு இப்பசாம்பலாபோனப் 
பெறகும்எங்க மனசுல நிக்குறாரு சார். சும்மா சொல்லக்கூடாத் சார்,எங்களோட ரததமும்சதையுமாஇருந்தாருஅவரு,எங்க எல்லார்வீட்டுவிசேசங்கள்லையும்
முடிஞ்சஅளவுகண்டிப்பா கலந்துக்கிருவாரு/

  சுருக்கமா சொன்னா எங்கள்ல ஒருத்தரா இருந்தாரு அவரு.அப்ப்டியெல்லாம் இனி ஒரு மனுசரப்பாக்குரது அபூர்வம் சார்.”

  என்னைப்பார்த்த, எனது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த ஒரு சில பொழுதுகளிலேயே எப்படி அவரால் இப்படியெல்லாம் பேசிவிடமுடிகிறது எனத்தெரியவில்லை.

 நேற்றைக்கு முன்தினம் காலை நான் அலுவலகம் செல்கிற வழியில் தென்பட்டு   என்னுடன்  ஏறி  வந்தவர்தான்  இதெல்லாம் சொல்பவராக  மாறித்
தெரிந்தார்.

 அவரின் சப்தம் இன்னும் கூடிக்கொண்டே போனது.முடி அடர்ந்த கையை ஆட்டி,ஆட்டி வேகமாகவும் தொடர்பு விட்டுப்போகக்கூடாது என்பவராயும் பேசுகிறார்.அவர்சப்தமிடும்போதுஅவரதுஉடல்ஆடிப்போகிறது.பேச்சுஅறுந்துஅறுந்து வார்த்தைகள்தொடர்பற்றுதெறிக்கிறது.

   அவர்வெளிப்படுத்திய வார்த்தைகள் அந்த பரந்த வெளியில் பட்டுப்பரவுகிறது.

17 comments:

கவி அழகன் said...

Nalla unarvudan kudiya kTha

MANO நாஞ்சில் மனோ said...

இவர்கள் கேரக்டர் மனிதர்கள்....!

மனசு கனத்து போச்சு...!

விச்சு said...

சிலர் உடனே பழகிவிடுவார்கள். அவர்களைப் பற்றிய அனைத்தும் சொல்வார்கள்.இவர்கள் வெகுளி கிடையாது. வெள்ளந்தி மனிதர்கள்.

விச்சு said...

சிலர் உடனே பழகிவிடுவார்கள். அவர்களைப் பற்றிய அனைத்தும் சொல்வார்கள்.இவர்கள் வெகுளி கிடையாது. வெள்ளந்தி மனிதர்கள்.

vimalanperali said...

வணக்கம் கவி அழகன் சார்.நல்ம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் நாஞ்சில் மனோ சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நலம்தானே?வெகுளி வெள்ளந்தி எல்லாம் தாண்டி இந்த சமூகத்தில் விரவிகிடக்கிற மனிதர்களின் மனசுஇப்படியெல்லாமுமாக
சொல்லிப்போகிறது நடப்புகளை/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

கீதமஞ்சரி said...

மனிதர்களைப் படம்பிடிப்பது ஒரு கலை. மனிதர்களின் குணாதிசயங்களைப் படம்பிடிப்பது ஒரு கலை. இரண்டாவது கலையில் நீங்கள் மிகத் தேர்ந்தவராயிருக்கிறீர்கள். பாராட்டுகள் விமலன்.

முத்தரசு said...

உங்கள் கோணம் மாறுபட்டதாக இருக்கு

ஹேமா said...

மூச்சு முட்டக் கதைகளைச் சுமந்தபடிதானே அலைகிறோம்.ஒரு கணத்தில் வடிகாலாய் சிலர் கிடைத்துவிடுகிறார்கள் !

சென்னை பித்தன் said...

உங்கள் பார்வையில் மனிதர்கள் முழுமையாக வெளிப்படுகிறார்கள்.நன்று.

vimalanperali said...

வணக்கம் சென்னை பித்தன் சார்.
நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மனசாட்சி சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கீதமஞ்சரி அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Athisaya said...

சரியான நிறுவை கொண்டு தரம்பிடித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் சொந்தமே!:(

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

vimalanperali said...

வணக்கம் அதிசயா அவர்களே?நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/