இவ்வளவு தாமதமாகிப்போனதா பள்ளியிலிருந்து வருவதற்கு என அவனிடம் அவனது அம்மா கேட்ட போது காலை மணி 9.45.
இல்லை பள்ளியிலிருந்து சீக்கிரம் கிளம்பிவிட்டேன்.7.30 தொடங்கி 9.00 மணி வரை விளையாண்ட 1.30 மணி நேரமும் தொடர்ச்சியான ஓட்டமும்,நடையும் விளையாட்டு சம்பந்தமான நினைவு மட்டுமே இருந்தது.
வேறெதுமான சிந்தனை அற்று அது மட்டுமே மனதில் சுடராய் இருப்பது ரொம்பவும்நல்லதுஎனவேதோனுகிறது.இல்லையென்றால் டீமிலிருக்கிறவர்க
களின் பேச்சு பலவிதமாக சென்று விடக்கூடும்.
மொத்தம் டீமில் 24 பேர்.தினசரி காலை 7.30 மனிக்கு மைதானத்தில் எங்களது சந்திப்பு.நாங்கள் ஒன்று கூடி களத்திலிறங்கி அணி பிரித்து விளையாட ஆரம்பித்து விட்டால் எங்களது சொல், செயல், சிந்தனை எல்லாமே விளையாட்டு,பந்து, மட்டை,
விளையாடும் மைதானம்,எங்களது மாஸ்டர் மற்றும் எங்களது உடல் மொழி பற்றியதாகவே இருந்திருக்கிறது தவிர வேறொன்றுமாய் இருந்ததில்லை.
அதெல்லாம் மைதானத்தை விட்டுத் தாண்டியவுடன் நடக்குமே கிலோமீட்டர் கணக்கிலான பேச்சு.அடக்கி வைத்திருந்ததையெல்லாம் பேச அப்போதுதானே நேரம் கிடைக்கும்.
பேசித்தீர்த்துக்கொள்வார்கள்.அப்படியும் தீராது.வகுப்பிற்கு செல்லவேண்டுமே என்கிற பிரக்ஞை வரும் போது “அட இது வேறயா”என்கிற கட்டாயத்தில் மாலை பள்ளி விட்ட இனிய நேரத்தில் பேசிக்கொள்ளலாம் என கலைவார்கள்.
அப்போதும் அதே மைதானம் ,அதே பந்து ,அதே மட்டை ,அதே,அதே,,,,,,என காட்சிப்படுகிறபரிதாபமே?சலித்துப்போகிறதுதான்ஆனாலும்விடமுடியவி
ல்லை.
தொட்டாகி விட்டது.இறுதிவரை பயணம் பண்ணிப் பார்க்கலாம் என்கிற வைராக்கியத்தில் தினசரி பள்ளிக்கு விளையாடப்போகிறேன் என்கிற மகனை அம்மாகேட்டபோதுஅவனதுபதில்அப்படியாகத்தான்வருகிறது9வதுபடிக்கிறான்.
“சரி சரி விடு ஒரே செயலை தினமும் செய்கிறபோது ஏற்படுகிற சலிப்பு உன்னில்முளைவிட்டிருக்கிறது.பரவாயில்லை விடு,அதற்குதான் சொன்னேன் இன்று விடுமுறைதினம்தானே.இன்று கூட விலையாடப்போகாவிட்டால் என்ன”?-அம்மா.
இல்லைஅப்படியெல்லாம்திடீரெனபோகாமல்இருக்கமுடியாது .போகமுடிய
வில்லைஎன்றால்முதல்நாளேலீவுசொல்லவேண்டும்P.T மாஸ்டரிடம்,
இல்லையென்றால்அவர்என்னைகிரவுண்டில்உருட்டிவிட்டுவிளையாடி விட
க்கூடும்.
அதற்குபயந்தேபாதிஇப்படிபயபக்தியுடன்நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
அதெல்லாம் கூட ஒருபுறம் இருக்க விளையாட்டின் மீது இருக்கிற தீராக்காதல் கிடந்து கோலாச்சுகிறதே,அதுதான் என்னை இயக்குகிறது.
அந்த இயக்கத்தின் நுனி பிடித்தும் அடிபற்றியுமாய் தினசரி எனது நகர்வு இருக்கிறது பள்ளி நாட்களிலும்,இது போன்ற விடுமுறை நாட்களிலுமாய்”/-பையன்.
“சரியப்பாவிடு ஒண்ணு கேட்டா ஒன்பது பேசுற.வரவர ரொம்பத்தான் கதை சொல்ற கிறுக்கா.சரிசரி வா விளையாடுற பையன் இவ்வளவு நேரம் வெளையாண்டுட்டு பசியோட இருந்தா ஒடம்பு கெட்டுப்போகும்ன்னு நெச்சு பேசுனா ரொம்ப அளக்குறயேடா”-அம்மா.
இல்லம்மாவெளையாண்டுமுடிச்சிட்டுஒன்பதுமணிக்கு கெளம்புனோம்.
அப்பிடியே ஸ்கூலுக்கு வெளியில இருக்குற கடையில வந்து ஒரு பன்னு வாங்கி சாப்புட்டேன்.ஸ்கூல் கேன்டீன்ல ஒன்னுமில்ல.சாப்புட்டுட்டு பையங்ககிட்ட பேசிக்கிட்டு வந்தேன்”.-பையன்.
“என்ன முக்கா மணிநேரமா பேசிகிட்டு வந்தீங்க”?-அம்மா
“இதுக்குஎன்னபதில்சொல்லுவான்அவன்.வுடுஅப்பிடித்தான்.வரட்டுமேகொஞ்சம்முன்னப்பின்ன,வந்திருப்பான்மொகம்நெறையகாத்தவாங்கீட்டும்,கண்ணுநெறையகனவுகளவச்சிக்கிட்டும்.வர்றவழியிலஎத்தனஇருக்கு?”கேட்டுக்கொண்டிருந்த நான் இது மாதிரி ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் சந்தோஷமாய் கைகொடுத்து விட்டு குளிக்கப்போகிறான் அவன்.
5 comments:
Vasithu rasithen arumai
நன்றி கவியழகன் சார்.
தொடங்கியதும் தொடர்ந்ததும்
முடித்ததும் அருமை
ரொம்பக் கிண்டிப்பார்த்தால் ஒன்றுமில்லைதான்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தொடங்கியதும் தொடர்ந்ததும்
முடித்ததும் அருமை
ரொம்பக் கிண்டிப்பார்த்தால் ஒன்றுமில்லைதான்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்.நலம்தானே ?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment