19 Aug 2012

சலங்கை,,,,,,,,,


   மலர் பூக்கும் சரிசிரிக்குமா என்னசிரித்ததேசிரித்ததோடுமட்டுமல்ல பேசியது.
அதுவும் எப்படி?கொஞ்சிக் கொஞ்சி. 

 ஆகா இது எப்படியிருக்கு?அதிகாலை பெருவெளி. சூரியன் கண் விழிக்க சற்றே தாமதப்பட்டுப்போன மென் பொழுதது.தூக்கம் பிடிக்காமல் விழித்த நான் சின்னவனின் வயிற்றில் தலை வைத்து படுத்திருந்து விட்டு அதுவும் நிலை கொள்ளாமல் எழுந்து டீக்கடைக்குச் செல்கிறேன். 

 அங்கே போனால் அப்படித்தான் வாய்க்கிறது.கலங்கலாக ஒரு டீ.வரி போட்ட கண்ணாடி க்ளாஸில் முக்கால் அளவே நிரப்பட்ட திரவம். நன்றாகயிருந்தால் நான்கு அல்லது ஐந்து மடக்கு குடிக்க கிடைக்கும்.அதற்கு ஐந்து ரூபாய். 

 வீட்டில் டீக் கொடுத்தாலும் இது மாதிரி கடைய்ல் போய் எப்போதாவது டீக்குடிப்பது வழக்கமாகிப்போகிறது.அன்றும் அப்படியே/ 

டீக்குடித்து விட்டு வந்த நேரம் இருள் பிரிந்து நன்றாக விடிந்திருந்தது.கோழிகள் தரையைக் கிளறி மேய ஆரம்பித்திருந்தன.ஆடுகள் வெற்று வெளியில் இரைதேடியும் திறந்து விடப்பட்ட சுதந்திரத்துடனுமாய்/ 

தூரத்தில் விரைகிற பால்க்காரனின் சைக்கிள் மணிச்சப்தம்.விரைந்து செல்கிற இருசக்கரவாகனத்தின்ஒலி.மூடப்பட்டிருந்தவீடுகளுக்குள்ளும்,வெளியிலுமாய்கேட்ட மனிதர்களின் பேச்சரவம்.சுத்தமாய் வீசுகிற காற்று.சப்தமாய் கேட்கிற சப்தம்.அதிகாலையின் சுப்ரபாதம்.எல்லாவற்றின் கலவையாய் வீடு வந்து சேர்ந்த நேரம் குப்பைகளும்,மரத்திலைகளும்,தூசியுமாய் கிடந்த வீட்டின் பக்கவாட்டு வெளியையும், மாடியையும் கூட்டி சுத்தம் செய்யலாம் என விளக்குமாறை  கையிலெடுத்த  போது நான்,விளக்குமாறு,குப்பை,இலைகள்
,தூசி மற்றும் தரை என்கிற பிணப்பு எங்களுக்குள் நெசவிடப்பட்டிருந்ததாய்/ 

கூட்டக்கூட்ட மேடிட்டும்,சேர்ந்தும் வருகிறது குப்பையும் இலைகளும்.கூடவே இவை இரண்டினுடனுமாய் கலந்து ஒட்டிக்கொண்டு வருகிற தூசி,அதனடியில் புரள்கிற நெளிகிற ,ஊர்கிற புளுக்களும் பூச்சிகளும்,எறும்புகளும் தத்தமது பாஷையில் ஏதேதோ பேசிக்கொண்டு தரை அளந்து சென்றவாறும் நடந்து நடமிட்டவாறும். 

அவைகள் போகிற போக்கில் கோபமாய் திரும்பிப்பார்த்து என்னை முறைத்து விட்டுச்  செல்வதாய்  தோணுகிறது.  நாங்கள்   நெளிவதற்கும்,  ஊர்வதற்கும்,
ஒளிவதற்கும் இனிஎங்குபோய்இலைகளைத் தேடுவோம் என்பதே அதன் உள் அர்த்தமாய் இருந்தது.அதோ கத்துகிறதே குருவிகள் அதன் “கீச்,கீச்கள்” அதற்கு அங்கீகாரம் அளிப்பதாகவே உள்ளது. 

கீழேதரைமுழுவதும்கூட்டிபெருக்கிவிட்டுமாடிக்குசென்றுகூட்டுகிறேன்,ஒன்று,பத்து,நூறு,,,,,,,,,,,,,,என இலைகளையும் ,தூசியையும் எண்ணாமல் கூட்டிக்கொண்டிருந்த வேலையில் “ஏய்”என ஒரு குரல் வீசி என்மீது எறியப்பட்டதாய்.எந்ததவித கலப்படமும் அற்று சுத்தமான மழலைக்குரலில் செய்யபட்ட சப்தம்.திரும்பிப்பார்த்தால் குரல் வந்த திசை பக்கத்து வீட்டு மாடியாய் இருந்தது.வலது பக்கம் நான்,இடது பக்கம் குழந்தை.சரியான பக்கம்தான் நிற்கிறதாகத் தெரிகிறது.மாடியின் கைபிடிச்சுவரில் ஒட்ட வைத்த பூங்கொத்தாய் தெரிந்தாள் அந்த மழலை/ 

மூன்று வயதிருக்கலாம்.கைகால் முளைத்த மென் புஷ்பம்.சுவரில் அழுந்தி ஒட்ட நின்று கொண்டு மார்பிலிருந்து தெரிந்தாள்.ஏய் எனச் சொன்னவளை அதட்டி அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது,மாமான்னு கூப்புடனும் என்றாள் பக்கத்து வீட்டுப்பெண், பூங்கொத்து நின்றிருந்த மாடிப்பரப்புக்கு சொந்தக்காரி.+2 படிக்கிறவள். அவள் அப்படிச்சொன்ன மறுநிமிடம் “மாமா என்ன செய்றீங்க,?-பூங்கொத்து. 

தரை கூட்டிக்கிட்டி இருக்கேன்.நான். 

கூட்டுங்க,கூட்டுங்க,எனகைகளை விரித்து சொல்கிறாள்,எதுக்கு கூட்டுறீங்க?என்கிற கேள்வியை இணைத்துக்கொண்டு/ 

கூட்டுனாத்தான தரை சுத்தமாகும்.-நான். 

தரை எதுக்கு சுத்தமாயிருக்கணும்?-பூங்கொத்து. 

அப்பத்தான்நல்லாஇருக்கும்.அதுக்குத்தான்.-நான் 

அப்பிடியா மாமா கூட்டுங்க,கூட்டுங்க,கூட்டுற குப்பைய கீழ போடக்கூடாது குப்பக்கூடயிலதான் போடணும்.-பூங்கொத்து, 

சரிப்பா,சரிப்பா நீ சொல்ற படி கேட்டுக்கிறேன்ப்பா.-நான். 

  நீ மட்டும் குப்பைய கீழ போட்டா ஓங்கூட காய் விட்டுருவேன்,நீயி ஆயி மாமான்னுசொல்லீருவேன்ஆமாம்எனசொல்லிவிட்டு இறங்கிப்போய்விட்டது பூங்கொத்து. 

நான் நின்று கொண்டிருந்தேன் பூங்கொத்து போன திசையை வெறித்தவாறு/

8 comments:

 1. ஆஹா... அந்த பூங்கொத்தை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது...

  இன்றைய குழந்தைகளிடம் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள் (உங்களுக்கும் பூங்கொத்திற்கும்)... நன்றி…

  ReplyDelete
 2. வாசித்தேன் ரசித்தேன் அழகிய படைப்பு

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் கவி அழகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. தமிழில் கருத்துரை எழுதியதற்கு நன்றி கவி அழகன் சார்.

  ReplyDelete
 6. Mannikavenum vimalan sir. Nan enthu kai pesiyil than anaivarthu padaippukalaiyum vassithu karuthiduvatu. Eppolthellam kanani pasvikkirano appoluthellam thamil than .

  En thai moli thamil.

  ReplyDelete
 7. Thamilil thaddachu seiya mudiyathathai iddu kavalaippadukiren.

  ReplyDelete
 8. ஸாரி,ரொம்ப ரொம்ப ஸாரி கவியழகன் சார்.உங்களது நிலையை புரிந்து கொள்ளாமல் பேசியதற்கு/

  ReplyDelete