20 Aug 2012

ஈரமூச்சு,,,,


 எனதுகை பேசியின் வண்ணத்திரையில் ஆட்டுக்குட்டியின் படமே இருக்கிறது  இன்னும்.

உடல்முழுக்ககறுப்பாயும்,கால்கள் நான்கிலும் வயிற்றின் நடுப்பகுதியிலுமாய் வெள்ளை ரோமங்கள் காட்டிய ஆட்டுக்குட்டி தரையில் குனிந்து குனிந்து இலைகளை தன் பெருமூச்சால் ஊதி சுத்தம் செய்துவிட்டு அதன் நுனி உதடுகளால்கவ்வியெடுத்து சாப்பிடுகிற அழகைக்காண கோடி கண்வேண்டும்.
கருப்பும்,வெள்ளையும் இப்படி அதற்கு கலந்து பூசியது யார்?எந்த ஓவியரின் கை வண்ணம் அது?ஏன் இப்படி ஒரு கலரை அவர் தேர்வு செய்ய வேண்டும்?நன்றாகயிருக்கிறது பார்ப்பதற்கு.

வண்ணங்களை குழைத்துப் பூசிய ஒரு வண்டொண்று வீருகொண்டு தன் உருவைமாற்றிக்கொண்டுஆடாய்வடிவெடுத்துநிற்பதாகவேதெரிந்த தெனக்கு/ 

இதைஅதனிடம்போய்சொல்லவோ,கேட்கவோமுடியாதுஎன நினைக்கிறேன்.
அப்படியே கேட்டாலும் என்ன சொல்லி விடப்போகிறது பிரமாதமாய். “என்னிடம் இது பற்றி கேட்டால் எனக்கு என்ன தெரியும்?எனது தாயின் கருவில் நான் ஜனித்து  உருக்கொண்ட  நாளில் எப்படி இருந்தேன்எனஎனக்கே தெரியாது இல்லையா?”என்பதாகத்தானே பதில் வரும்.

 அதனால் அதை கேட்பதை விட்டு விட்டு அதன் அழகில் சொக்கி நிற்பவனாய் இப்போது.அதைக்காண கண்கோடிவேண்டும்.கோடிக்கண்ணுக்கு எங்கே போவதுஇப்போது?ஆதலால்  என்னிடம்  உள்ள  ஜோடிக்கண்களையே கோடிக்
கண்களாக்கிப்பார்க்கிறேன்.அவ்வளவே/

கிடைக்கிற நேரங்களில் வாய் நிறையவும்,அது அல்லாத பொழுதுகளில் இப்படிநுனி உதடு கொண்டு கவ்வித் தின்கிற பக்குவத்தை  அதற்கு யார்கற்றுக்
கொடுத்தது,எப்போது,எப்படி? எனத்தெரியவில்லை. அதனிடம் கேட்டபோது அதன்தாய் என்கிறது அது.

"முன்னங்கால்களைஇயல்பாகவும்,பின்னங்கால்களை சற்றே அகட்டியுமாய் வைத்துதன் பால் சுரக்கிற மடிக்காம்புகளை எனக்கு முட்டிக் குடிக்க கற்றுக்
கொடுத்த  எனது தாய் எனக்குக்கற்றுத்தராமல் வேறு யார் கற்றுத்தருவார்கள் 
இதையெல்லாம்?

நான்எனதுஎனமட்டும்இல்லாமல்நாம்நமதுஎனஇயங்குகிறஎங்களதுஇனத்தின் துணைகளானமற்றவற்றைப்பார்த்தும்கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

பிறந்ததிலிருந்து அப்படியெல்லாம் கற்றுத்தெளிந்த நான் இன்று என் இனத்தோடு வராமல் தனியே மேய வந்து விட்டதை வைத்து இத்தனை கேட்டால்  எப்படி? 

காலையில்பொழுதுவிடிகிறநேரமாய்எங்களைஅவிழ்த்துவிடுகிறார்கள்.அடைக்கப்பட்டிருந்த கொட்டடியின் வாசத்திலிருந்தும்,புழுக்கத்திலிருந்தும்.நாங்கள் 
போட்ட புழுக்கைகளும்,பெய்து தீர்த்த கோமியமுமாய் நிறைந்து போன தொழு -வத்திலிருந்துதான் விடிந்த பொழுதை துணைக்கழைத்துக்கொண்டு திறந்து விடுகிறார்கள். விடிந்த பொழுது என கணக்கு எங்களுக்கு.5.00,5.30,6.00 மணி என்பது உங்கள் கணக்காக/

திறந்து விட்டதும் ஊருவர் மீது ஒருவர் ஒட்டியும்,ஒருவர் மீது ஒருவர் உரசியும்,ஒருவர் மீது ஒருவர் மோதியும், உறவாடிக்கொண்டுமாய் வெளியே வருகிற நாங்கள் இப்ப்படி புல் வெளிகளையும்,வெற்றிடங்களையும் மரம் வளர்ந்த வீட்டின் பக்கவாட்டு வெற்று வெளிகளையும் தேடி ஓடி வருகிறோம் எங்களது வயிறு நிறைக்க வேண்டி/

 எங்களை வளர்த்து,எங்களின் மீது அக்கறைப்பட்டு ,எங்கள் உடல் பார்த்து ,எங்கள் நோய் பார்த்து எங்களின் மீது தனி கரிசனம் கொள்கிற எங்களது உரிமையாளர் கூட இவ்வளவு பேசியதில்லை.

இரவு,பகல்எனகொட்டடிகளில் அடைக்கப்பட்டு புழுங்கி தீர்கிற நேரம் தவிர்த்து சுதந்திரக்காற்றைசுவாசிக்கநேர்கிறதருணங்களில்இப்படிகட்டையைக் கொடுத்தால் எப்படி என்பதே இந்த நேரத்தின் எனது முக்கிய கேள்வியாய் இருக்கிறது.

மண்பிளந்துதுளிர்த்துவளர்ந்துகிளை பரப்பி தன் ஆகுருதி காட்டி விரிந்தோங்கி நிற்கிறமரம்அதன்இலைகள்உதிர்க்கிறசமயம்என்னையும்,என்போன்றவர்களையும்நினைவில்வைத்துஉதிர்ப்பதாய்தோணவில்லை.துளிர்ப்பதும்,மொட்டுவிடுவதும்,பூப்பதும்காய்ப்பதும் பின் உதிர்வதும்தானே அதன் இயல்பாகித் தெரிகிறது.

 தன் வாழ் நாளில் கன்றாகி,செடியாகி,மரமாகி நிழல் பரப்புகிற வேலைகளைச் செய்கிறமரத்தைஊன்றியனேவெட்டுகிறான்.வெட்டியவனேஊனுகிறான்திரு--ம்பவுமாய்.

விதைப்பதும்வெட்டுவதும்தொழிலாளின்முக்கியவேலைகளில் ஒன்றாகிப்
போகிறது இங்கு.

இந்நிலையில் பூமியின் வரமான மரம் கொடுத்ததை சாப்பிடவும்,சாப்பிட்டு வயிறு நிறைக்கவும் பசியாறவுமாய் வருகிற எங்களை நீங்கள் போட்டோ எடுத்து உங்களது கை பேசியின் வண்ணத்திரையில் வைத்து அழகுபடுத்திக் கொள்வதில்தவறேதும்இருக்க முடியாது. அதற்காக நான் பயன்பட்டதில்  எனக்கெந்தஆட்சேபனையும் இல்லை,சந்தோஷமே எனக்கு/
  
 இலை தந்த மரங்கள் விறகாயும்,இன்ன பிற பொருளாயும்,நான் இரையாயும் ஆகிப்போகிற கொடுமையைத்தவிர்த்து வேறென்ன நடந்து விடப்போகிறது இங்கு பிரமாதமாய்.எனச்சொன்னஆட்டுக்குட்டியின்படம்எனதுகைபேசியின் வண்ணத்திரையில் காணக்கிடைக்கிறது அனுதினமுமாய்/

13 comments:

 1. வித்தியாசமான பதிவு சார்..

  /// அதற்காக நான் பயன்பட்டதில் எனக்
  கெந்த ஆட்சேபனையும் இல்லை,சந்தோஷமே எனக்கு ///

  சிந்தனை வரிகள்... நன்றி...

  ReplyDelete
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.இதற்கென தனி மனது வேண்டும் எனவே நினைக்கிறேன்.பதிவு போட்ட அடுத்த சில பல நிமிடங்களில்அல்லது மண்த்துளிகளில் தங்களது கருத்துரை வந்து விடுகிறது,அப்படி கருத்து சொல்லும் பாங்கிற்கும்,மேம்பட்ட மனதிற்குமாய் நன்றி.வணக்கம்/

  ReplyDelete
 4. வணக்கம் சொந்தமே!கிராம்தின் வெளிகள் என்றால் வெயிலும் வெறுமை என்று இருந்தது.இந்த ஆடுகளில் கூட இத்தனைஅழகு கண்டுவிட்டீர்கள்.அருமை அருமை!

  ReplyDelete
 5. வனக்கம் அதிசயா அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. ஆடு கதைத்ததா....அந்த உணர்வைக்கூட மனம் கசிய நெகிழச் சொல்லமுடிகிறது உங்களுக்கு.பாராட்டுக்கள் !

  ReplyDelete
 7. ஆடுகளைப் பற்றிய உங்கள் பார்வை ஆச்சர்யப் படைக்கிறது.கிராமப்புற சூழலை நன்கு பதிவு செய்திருக்கிறீர்கள்

  ReplyDelete
 8. வணக்கம் ஹேமாஅவர்களே/ஆடு மட்டும் அல்ல எல்லாமேமனிதனிடம் கதைக்கிறதுதான்.ஏக்கப் பார்வை
  பார்க்கிறதுதான்.நாம்தான் அதைகவனிப்பதில்லை.

  ReplyDelete
 9. நன்றி ஹேமா மேடம் தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 10. வணக்கம் டீ,என் முரளிதரன் சார்.
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. GAofPOvi [url=http://abercromfitchdemagasinn.com]abercrombie fitch pas cher[/url] domesticated prayers swindell commanders lobamba
  abercrombie pas cher BDfyRYk http://abercromfitchdemagasinn.com

  ReplyDelete
 12. சிந்திக்க தூண்டும் பதிவு
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. வணக்கம் கவியழகன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete