மெலிந்து நீண்ட பாம்பொன்று
ஊர்ந்து வருகிறது.வாசல் படியில் நின்று
முகம் கழுவிக்கொண்டிருக்கிறேன்.
விட்டுப்போனதாய் கருதி
பாம்பு நெளிந்த திசையை
நோக்கி குறைத்த பக்கத்து வீட்டு நாய்.
ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த
இரு சக்கர வாகனத்தின்
முன்விளக்கு மாம்பு நெளிந்த
திசையைநோக்கி திரும்பிப் பார்த்ததாய்/
வீட்டிற்கும்,பாம்பு நெளிந்த
இடைவெளிக்கும் இடையிலான
சாலையில் நடந்து சென்ற
பக்கத்து வீட்டு சிறுமி.
அவள் பின்னாலேயே
நடந்தகூன் போட்ட பாட்டி.
முள்ளும்,செடியுமாய் அடர்ந்திருந்த
வெற்று வெளி,
சைக்கிள் ஓட்டுகிற இடைவெளியில்
எண்ணங்கள் சுமந்த மனமெங்கும்
பாம்பு நெளிய முகம்
கழுவி விட்டு மிச்சமிருந்த நீரை
பாம்பின் மேல் ஊற்றுகிறேன்.
இப்பொழுது நான்,பாம்பு,
தண்ணீரற்ற வெற்றுக்குவளை
மனதின் வெற்று வெளியெங்கும்
ஊர்ந்து திரிந்த பாம்பு இவற்றை
சுமந்து வீட்டுக்குள் வருகிறேன்.
இப்பொழுது வீடு வெற்றுவெளியாய்
காட்சியளிக்க வெற்று வெளி
வீடு போல மாறித்தெரிகிறது.
2 comments:
எதை நினைத்துப் பார்க்கிறோமோ அதன்படிதான் பார்வை.எல்லாம் மனம்தானே !
வணக்கம் ஹேமா மேடம் நன்றி.
Post a Comment