அமிர்தாஞ்சன்,ஸாரிடான்,
அசிலாக், கால்பால் என
நிரம்பிப்போன வியாதிகள்
ஒவ்வொன்றிற்கும் தனித்து
அடுக்கப்பட்டிருந்த
மருந்துக்களும் மாத்திரைகளுமாய்
இருந்த வீடுகள்
கலகலப்பாகவே தெரிகிறது.
அன்றாடங்களின் விடியலில்
வாக்கிங்க்,சைக்கிளிங்க்,
ரன்னிங்,எக்ஸர்சைஸ்,யோகா என
பரபரப்பாய் தெரிகிறார்கள்.
அலோபதி,ஹோமியோபதி,
நேச்சுரோபதி,ஆயுர்வேதம்,
சித்தா,யுனானி என
அனைத்திற்குமாய் பகிர்ந்து
நிற்கிற நோயாளிகள் கூட்டம்
சரிபாதியாய் பிரிந்து
நோய்க்கும் பாதி,பேய்க்கும் பாதி என
மந்தரித்து தாய்த்துக்கட்டவும்
கிளம்பி விடுகிறார்கள்.
திரும்பி வருகையில்
ஒரு கையில் மாத்திரை,மருந்துக்களும்,
மறுகையில் பில்லி சூன்யம்
சுமக்கிற பொம்களுடனுமாய்
காட்சிப்பட்டுத்தெரிகிறார்கள்.
8 comments:
ஒரு கையில் மாத்திரை,மருந்துக்களும்,
மறுகையில் பில்லி சூன்யம் ...
அப்பட்டமான உண்மை.
நிதர்சனம் கூறும் கவிதை அதே நேரத்தில் நம் மக்களின் அறியாமை கண்டு வெம்மவும் செய்கிறது ,,
கலிகாலம் தான்... இன்னும் வரும் காலங்களில்...?
அப்பட்டமான உண்மைகள் சார்...
நடப்பை அப்படியே சொல்லி விட்டீர்கள்
வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் அரசன் சே சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் குட்டன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment