14 Oct 2012

தொடர்பிலக்கு,,,,,,,,


பார்த்துப் பார்த்து பண்ணிப்பண்ணி இப்படி மனதின் அருகாமையாகப் போய் பேசுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. 

சசி இவனது மகன்.கல்லூரி பருவத்தில் எட்டெடுத்து வைத்திருக்கிறவன், என்ன எட்டை கொஞ்சம் பெரிதாக வைத்து விட்டான்,கல்லூரியின் உயர் படிப்புக்கு அப்ளைப் பண்ணிபடித்துக் கொண்டிருக்கிறான்.மதுரையில் ஒருதனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி.

“அவனுக்கு ஏன் இந்தப்பெயர், இந்தப்பெயரை எடுத்துவிட்டு வேறெதினுமாய்
வாயில் நுழையாத பெயராகக்கூட வைத்து விட்டுப்போ, எங்களுக்கு
ஆட்சேபனை இல்லை ஆனால் இப்படி இறந்து போனவனின் ஞாபகார்த்தமாய் 
ஒரு பெயரை வைக்காதே”. என அவனுக்கு சசி என்று பெயர் வைக்கப்பட்ட அன்று எழுந்த எதிர்ப்பாய் இருந்தது அது.

அவன்,அவனது மனைவிதவிர்த்துஎல்லோரும்சொன்னார்கள்.அவனதுஅம்மா,
தம்பி, அக்கம்,பக்கம்,சொந்தங்கள் “இப்படியெல்லாமா வைப்பார்கள் பெயரை” என?

டீ க்கடை கண்னன் கூட சொன்னான்.”என்னப்பா போயும்,போயும் செத்தவன் பேரையா வைக்கிறது என/

ஆனால் அன்று காட்டிய பிடிவாதம் பிறப்புச்சான்றிதழில் இருந்து இன்று அவனது கல்லூரி ஆவணங்கள் வரை “சசி” என்றே ஆகி இருக்கிறது.”சசி என்கிற சசிக்குமார்.”

“சசி” என சுருக்கி அழைக்கப்பட்டுகையில் அது ஆணா,பெண்ணா என சந்தேகம் வராமல் இல்லை.பஸ்ஸின் நெரிசலிலும்,புகை வண்டிடின் கூட்டத்திலும் மற்றும் திருமண வீடுகள் என கூட்டம் உள்ள இடங்களில் அவனது பெயரை “சசி” என மட்டும் சுருக்கி கூப்பிட முடியவில்லை,கூட்டம் ஏறிடுகிறது.
அண்ணாந்து பார்க்கிறவர்கள் அழைத்தது ஆணாய் ஆகிப்போன பின்பு கடும் சோகம் காட்டி விடுகிறார்கள் சரி ஏதற்கு பிறர் சோகம் சம்பாதிப்பானேன் என இப்படியே விட்டு விடுவதும் முழுப்பெயர் வைத்து அழைப்பதுமாய் தொடர்கிறது.

இப்போது இவனுக்கும்,இவனது மனைவிக்கும்,ஒன்பதாவது படிக்கிற  மகளுக்கும் இவன் சசி,,,,,,,சசி,,,,சசியே,,,,,,,,,,,உள் மன வெளியெங்கும் ஆக்ரமித்து பரவி நிற்கிற சொல்லை ஆசுவாசமாக்கி இறக்கி வைக்கிற ஒன்றாய் டேய்,,,, எனவும்,யேய்,,,,, எனவும்,இந்தா,,,,,, எனவும் போனால் போகிறது என தம்பி,,,,,, எனவுமாய் எல்லோருமாய் கூப்புடுகிற தினங்களில் இவன் மட்டும் செல்லமாக “ஏய் இட்லி குண்டா” என்பான் ,அப்படி ஒரு பெயர் தமிழ்அகராதியில் எங்கு புரட்டினாலும் கிடைக்கப்போவதில்லைதான்.ஆனால் இவன் கொஞ்சம் சதை போட்டுள்ள மகனை அப்படி அழைப்பதில் தவறில்லை
என்கிற முடிவில் அப்படி விளிக்கிறான்,

இவனது மனைவி கூட வைவதுண்டு அவ்வப்பொழுது.“என்ன தலைக்கு மேல வளந்த புள்ளயப்போயி இப்பிடி கேலி பண்ணீட்டு அலையுறீங்க கொஞ்சம் கூட ஒரு இது,,,,, இல்லாம” என்பாள்.அந்த இது என்ன என இதுநாள் வரை இவனுக்கு புடிபட்டதில்லை,தெரிந்தால் சொல்லுங்களேன் யாராவது/

இப்படியாய் எல்லோராலும் அன்பாகவும்,ஆதரவாகவும் அழைக்கப்படுகிற சசிக்கு அடிக்கடி போன் பண்ணுவதும் அவனது நலம் இன்னபிறவைகள் பற்றி பேசி அறிந்து கொல்கிறஉயர்நுட்பப்பேச்சின்நூல்இவனிடமிருநதோ,இவனது மகனிடமிருந்தோ, மகளிடமிருந்தோ ஆரம்பிக்கக்கூடும் மனந்தொட்டு/

தையல் மிஷினிலிருந்து பிரிந்து தொங்கிய நூலின் நுனி பேன் காற்றில் ஆடிகொண்டிருந்த பின் மதிய வேளையில் போன் பண்ணுகிறான் சசி/ “அப்பா மூணுகாலேஜிக்குபோனம்ப்பாஅதுலரெண்டுலஅப்ளிகேஷன்வாங்கீருக்கோம்,
நானும் ஏங் பிரண்டு சந்திரசேகருந்தான் போயிருந்தோம்ப்பா நானும் அவனும் ரெண்டு காலேஜில எதுல கெடைச்சாலும் ஒண்ணாபடிக்கலாம்ன்னு முடிவு பண்ணீருக்கோம்ப்பா” என்றான்.

“சரிப்பா,சரிப்பா மொதல்ல சாப்புட்டீங்களா,இல்லையாப்பா ரெண்டு பேரும்,
மணி நாலாகப் போகுது.மொதல்ல போயி சாப்புடுங்கப்பா ஏதாவது கடையப்
பாத்து,அப்பறம் அங்கயும் ஒண்ணுமில்லாம போயிரப்போகுது”.எனவும் 
இன்னும் இன்னுமாய் பேசிக்கொண்டிருந்த நாளிலிருந்து கல்லூரியில் சேர்ந்து விட்ட இன்றைய தினம் வரை பேச்சு தொடர்கிறது,
சசியும் எதுவானாலும் ஏங்பிரண்டு சந்திரசேகர் சொன்னாப்பா,அவன்கூட
இருக்கேன்ப்பா,

அவன்தான்ப்பா,அவன் புராஜக்டுப்பா,,,,,,,,,,,,என நிறைய அவனது நண்பனைப்
பற்றிச் சொல்வதும்,பேசுவதும் உண்டு பல சமயங்களில். இவனும் அதை சிரித்துகொண்டே கேட்டுக்கொண்டிருக்கிற சமயங்களில் இவனது பள்ளி நாட்களில் இப்படி மனம் தொட்ட சினேகம்அமைந்து விடவில்லை என்கிற மெல்லிய வருத்தம் மனிதில் ஓடியதுண்டு. 

அலுவகத்திற்கு லீவு போட்டு விட்டு வீட்டிலிருந்த விடுப்பு தினமொன்றின் காலை நேரமாய் மகள் ஸ்கூலுக்கு கிளம்பிப்போன நல்ல நேரமாய் பார்த்து கிளம்பி மதுரை வீதிகளில் அலைந்து திருமலைநாய்க்கர்மகால் மற்றும் ஜவுளிக்கடை என ஏறி இறங்கிவிட்டுமாய் சசிபடிக்கிற கல்லூரிக்கு போன பின் மதியநேரம் அவன் மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் தான் மற்றும் நண்பர்கள் புடைசூழ/என சொன்னான்.

இவனும்இவனதுமனைவியும்கல்லூரியின்அகன்றுவிரிந்தவெளியையையும்,
பழமையான கட்டிடத்தையும் பார்த்து வியந்தவாறும், அவர்களைகடந்த மாணவ,மாணவிகளை வேடிக்கை பார்த்தவாறுமாய் இருந்த கணங்களில்/

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி சொன்னார்."அப்பிடி போய் மர நெழல்ல ஒக்காருங்க,பையன்வரட்டும்"  என்றார், 

அங்கே பெஞ்ச் போட்டிருந்தார்கள்,சிமிண்டினால்செய்யப்பட்டருந்தஅழகான வடிவமைக்குள்ளாகியிருந்த சேர்,கல்லூரி வளாகம் முழுவதுமாய் நிறைந்தி
ருந்த மரங்களின் கீழ் இது மாதிரி நிறையத்தெரிந்தது வித்தியாசப்பட்டதாய்.
அதில் இவர்களைப்போல நிறையப் பேர் அங்கங்கே அமர்ந்திருந்தார்கள்,

அவர்களது பிள்ளைகளை பார்க்க வந்திருப்பார்கள் போலும்.ஜீன்ஸ் பேண்டும் 
அடர் நிறத்தில் ஒரு சட்டையுமாய் அணிந்துவந்தான்,நன்றாக சாப்பிட்டேன் 
என மெனு சொன்ன அவன்(சசி)டீ சர்ட் அணிய இங்கு அனுமதி இல்லை என அவன்முன்பேசொன்னதுஞாபகம்வந்தது.

அவனைஇது போலஜீன்ஸ் அணிகிற  சமயங்களில்“வெள்ளைச் சட்டை அணிந்து கொள், நன்றாக இருக்கும் உனக்கு,” என இவன் சொன்ன
போதெல்லாம் சசி தட்டியே விட்டிருக்கிறான் வார்த்தைகளை"இல்லை 
வேணாம் வெள்ளைச் சட்டை எனக்கு” என/காரணம் கேட்ட போது பள்ளி நாட்களிலிருந்து ஒரே மாதிரியானதை அணிந்து போரடித்துவிட்டது என்கிறான்.

ஆனால் அப்படிச்சொன்ன பல மாணவர்கள் கல்லூரி முடித்து வெளியில் வந்ததும் ஒரே வெள்ளையில் காட்டி தருவது ஒரு மிகை நகை முரணாகவே தெரிகிறது.

சரி பிடித்ததை அணிந்து கொள்ளட்டும் என விட்டுவிட்டநாட்களில் கல்லூரி வளாகமெங்கும்,மற்றும்அவர்கள்இறங்கி நின்ற காம்ளக்ஸ் பஸ்டாண்டின் வெளியெங்கும் காட்சிப்பட்டுத் தெரிந்த மாணவர்களுக்கும்,கணக்கு வாத்தியாராய் இருந்து கொண்டு இன்னமும் வட்டக்கழுத்து பனியனை அணிந்து கொண்டு காட்சிப்படுகிற நண்பனுக்கு இருக்கிற பாக்கியம் கூட தனது பையனுக்கு இல்லையே இந்த இளம் பிராயத்தில்எனத் தோணுகிறது.
பையனிடம் நிறையப் பேசிக்கொள்ளவில்லை.கல்லூரி,அவனதுபடிப்பு,விடுதி,
அறை நண்பர்கள்,மெஸ் சாப்பாடு மற்றும் அவனிடம் கையிருப்பிலிருக்கிற பணம் பற்றி பேசிக் கொண்டும்,கேட்டுக்கொண்டுமாய் கிளம்பிய போது
இன்னும் ஒருமணி நேரத்தில் மீட்டிங்க் இருப்பதாய் சொன்னான். 

வகுப்பின் அத்தனை மாணவர்களும் கலந்து கொள்கிற அந்த மீட்டிங்கில் தான் ஒரு ஸ்பீச்தரப்போவதாகச்சொன்னான். இருந்துபார்க்கலாமா, நாங்களும் கேட்கலாமா, எங்களுக்கு அந்தபாக்கியம் உண்டா,,,,,,,,,,,என கேட்டதற்கு இல்லை நீங்களெல்லாம் கேட்கவோ,பார்க்கவோ முடியாது எனச்சொல்லி விடுகிறான்.

அதன் பின்பாக பேச ஏதும் விசயமற்றவர்களைப்போல கல்லூரியிலிருந்து கிளம்பி வீடு வருகிற வரை மௌனத்தை அடைகாத்துக் கொண்டு வந்த இவனும்,இவனது மனைவியும் இப்படி காலை, மாலை,மற்றும் முன்னிரவு 
வேளைகளில் சசியுடன் பேசிக்கொள்கின்றனர்,

இப்படியாய் பேசிக் கொள்வதும் நன்றாகாத்தானிருக்கிறது.


5 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இயல்பான நிகழ்வுகள்:கண்முன் பார்ப்பது போல் இருக்கிறது.

Anonymous said...

tvgeh ¥â¥ó¥¯¥ì©`¥ë ¥À¥¦¥ó ¼¤°² flvkoe cheap louis vuitton handbags cykft jordan pas cher elseqz http://japsmonclairsonlines.com jc fzi http://fraschaussuresloubtinndesoldes.fr

vimalanperali said...

வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

சசியுடன் மனதிலே பேசிக் கொள்வது - நெகிழ வைத்தது...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/