13 Oct 2012

பேச்சு,,,,



இப்படி பேசுவதும் 
நன்றாகதான் இருக்கிறது. 
வெளியூரில் கல்லூரி விடுதியில் 
தங்கிப்பயில்கிற மகளிடம் 
தினமொன்றின் காலையிலும்  
மாலையிலும் மற்றும் இரவிலுமாய் 
பேசிக்கழிகிற பேச்சின் 
ஆரம்பங்களும் முடிவுகளும் 
மனம் தொட்டதாகவே 
இருந்திருக்கிறது இதுவரை. 
படிப்பு,விடுதி,சாப்பாடு,,,,,,,, 
மற்றும் பொழுது போக்கு 
என்கிற பேச்சுக்களின் மத்தியில் 
வீட்டில் நீங்கள் சாப்பிட்டீர்களா, 
என்ன சாப்பிட்டீர்கள், 
என்ன மெனு இன்றைக்கு 
என்பதாகவே முடிகிறது 
பெரும்பாலுமாக அவளது பேச்சு/

10 comments:

Anonymous said...

rbskz beats by dre cgydpk ralph lauren polo ralph lauren pas cher pjync sac louis vuitton lalkse http://abrcromfitchsparisdesoldes.com ebjnr

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

விடுதியில் இருக்கும் மகளின் வீட்டுச் சாப்பாட்டின் மீதான ஏக்கம் தொனிக்கும் கேள்விக்குப் பதில் சொல்வது சிரமம்தான்.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

அருமைமகளின் ஏக்கத்தையும் தந்தையின் உணர்வையும் கவிதையாக்கிய விதம் ரசித்தேன்.

குட்டன்ஜி said...

வீட்டில் இருக்கும்போது தெரியாத வீட்டுச் சாப்பாட்டின் அருமை அப்போதுதானே தெரிகிறது!
சிறப்பு

vimalanperali said...

வணக்கம் குட்டன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராமல்ஷ்மி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தனிமரம் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் சார்...