கூட்டி
முடித்த பின் மடிபடியின் மீது உதிர்ந்து கிடக்கிற ஒற்றைப்பூவை என்ன செய்வதெனத்
தெரியவில்லை.
நீண்டு
மெலிந்த காம்பு வளைந்து இதழ்கள் விரிந்து என்னை திரும்பிப் பார்த்துச் சிரிப்பதாய்
இருக்கிற
பூவின் இருப்பு சற்றைக்கு முன்பு இல்லை.
“சும்மாதானேஇருக்கிறோம்
,மாடிப்படியை விடலாம்,மரத்திலைகளும்,தூசிகளும்,பன்னீர் மரப்
பூக்களும் சிதறி விழுந்து
முதல் நாள் பெய்த மழையில் ஈரத்தில் நனைந்தும் தரை ஒட்டியுமாய் கிடக்கிற படியை மட்டும்
கூட்டினால் போதும்,மாடியின் உள்ளெல்லாம் கூட்ட வேண்டாம்,
அங்கிருக்கிற தூசி யார் கண்ணில்
பட்டு,என்ன தொந்தரவு செய்து விடப் போகிறது? தவிர இப்போது அதைக்கூட்டிக் கொண்டிருந்தால்
அலுவலகத்திற்கு கிளம்ப தாமதமாகி விடக்
கூடும் வேணாம் அப்படி” என வரிசையாககஉயர்ந்து அடுக்கப்பட்டிருக்கிற
படிகளைக்கூட்ட விளக்கு மாறை கையெலெடுத்த நேரம் என்னிலிருந்து நீண்டு நான்காவதாய் எட்டியிருந்த
படியில் படர்ந்து கிடந்த பூக்கள்+மரத்திலைகளின் மீது விழுந்த ஒற்றைப்பன்னீர் மரப்பூ
மற்ற பூக்களில் இரண்டை தேர்ந்டெடுத்து கீழே தள்ளி விட்டு தானும் விழுந்து விடுகிறது
.
படியின்
நுனியில் இருந்ததால் அவைகளுக்கு அப்படி.பத்தும் ஐந்தும் பதினைந்து படிக்கட்டு
-களைக்கொண்ட
மாடியது.
படியின்
கீழ்மடக்கு பரப்பெங்கும் ரோஸ்க்கலர் பூசிக்கொண்டு வலது ஓரங்களில் கன்னத்தில்
விழுந்திருக்கிற கருப்பு மச்சத்தைப்போல
கருப்புக்கோடு படிந்து காணப்பட்ட அவைகளைப்
பார்த்தவாறு பணியில் முனைந்தவனாய் ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,,என
தாவிபதினைந்தாவது
படியில் ஏறி நின்று வெற்றுவம் காட்டி அங்கிருந்து சிதறிச்சிந்தியிருந்த
இலைகளையும் ,வெட்கிச் சிரிக்காமல் தரை படர்ந்து
படுத்துகிடந்த பன்னீர்மரப்பூக்களையும் கூட்டிக்கூட்டி,,,,
பதினைந்திலிருந்து,பதினான்கு,பதினான்கிலிருந்து,பதிமூன்று,பதிமூன்றிலிருந்து,,,,,,,,,,,,,,,,,,என
ஒவ்வொரு படியாக இறக்கி முதல்படியை தொட்ட நேரம் என் கண்ணில் பட்டுச்சிரிக்கிறது ஒற்றையாய்
அந்தப்பூ.
கூட்டி முடித்த பின்பு ஒற்றையாய் படியில் உதிர்ந்து தன் உடல்மொழி
காட்டிச்சிரிக்கிற பூவை என்னசெய்ய?
அப்படியே
விட்டு விடலாம்தான், பூவால் படிக்கழகு, படிகொடுத்த சின்னோண்டான
இடத்தால் பூக்கழகு/
5 comments:
ரசித்தேன்... பதிவும் அழகு...
நன்றி...
பூவின் வாசத்தை உணர முடிகிறது. அருமை.
வணக்கம் ராமஷ்மி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
பூவால் படிக்கழகு,
பூக்கழகு - அழகிய கவிதை !
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment