20 Oct 2012

வெந்தனல்,,,,,



                                         
அகன்று விரிந்த வட்டமான தோசைக் கல்லின் (புரோட்டாசுடுகிற கல்லும் அதுதான்)வலது ஓரமாய் கைலெடுத்த முட்டையை லேசாக,,,, மிக மிக லேசாக எங்கே உடைந்து விடுமோ என்கிற கூச்சத்துடன் உடைப்பதற்காய் தட்டுகிறார்.

டொப்,,,,,டொப்,,,,,டொப்,,,,,மூன்றாவது தட்டில் மெலிதான கோடு போட்டது போல லேசாக உடைந்த முட்டையை விரித்து கல்லின் ஓஈமாய் ஊற்றுகிறார். மலர்ந்து விரிந்த  பூவைப்போல கைவிரித்துப்பரவுகிறது மஞ்சள கருவுடன் கலந்த வெள்ளை  முட்டை.

ஏற்கனவே இரண்டு வெந்து கொண்டிருந்த தோசைகளுக்கு சிறிதான தோசைகளுக்கு அருகாமையாக ஊற்றிய ஆப்பாயில் நன்றாகவே இருந்தது பார்ப்பதற்கு.

அரிசிமாவும் உளுந்தமாவும் கலந்தரைத்த மாவில் சுட்ட தோசைகளுக்கு மத்தியிலாகவும்,
ஓரத்திலுமாகவும் சுவையாக சாப்பிடசுட்டெடுத்தமாஸ்டர் தோசையை தங்கக் கலரிலும்,
ஆப்பாயிலை பொன்முறுவலாகவும் சுட்டெடுத்து கடைக்குள் அனுப்புகிறார்.

பரவாயில்லையே,இதுவும்பார்ப்பதற்குநன்றாகதானேஇருக்கிறது”எனகடையின் ஓரம் கைகட்டி நின்றவனாக சொல்லியிருந்த புரோட்டாப் பார்சலை வாங்கிக் கொண்டு திரும்புகிறேன்.

எரிந்து தகித்துக்கொண்டிருந்த அடுப்பின் முன்னே கட்டம் போட்ட கைலியும்,அடர் கலரில் சட்டையும்அணிந்திருந்த புரோட்டா மாஸ்டர் தோசைகளையும்,கல்லின் ஓரமாய் உடைபடுகிற முட்டைகளிலிருந்து பிறப்பெடுக்கிற ஆப்பாயில்களையும் சுட்டெடுக்கிறார் அனுதினமுமாய்,
அடுப்பின் தணலில் வெந்தவராக/

அரிசிமாவும்,உளுந்தமாவும்கலந்தரைத்தமாவில்அன்றாடங்களின்நகர்வில்சுட்டெடுக்கிறதோசையும்,இட்லிகளும்,முட்டைகளை உடைத்துஅவர்சுடுகிறஆம்லேட்டுகளும்,ஆப்பாயில்களும்
மைதாவைஉருட்டிப்பிசைந்துசுடுகிறபுரோட்டாக்களும்நம்போல் சாப்பிடப்போகிறவர்களின்
வயிற்றை நிரப்ப அன்றாடம் கடைக்குள்ளாய் அனுப்பப்படுகிறது/மாஸ்டருக்கு,,,,,,,,,,,,,?

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் ரசனையை ரசித்தேன்...

முடிவில் நல்ல கேள்வி...?!

Anonymous said...

lcaqoncjnh louis vuitton oqljacoc louis vuitton whjbwgqsy louis vuitton pwavoxyly http://acquistareborsevuittonns.info/

Anonymous said...

qoknc cdvmjjyoja cheap ralph lauren shirts fnmiwch kftnaqfmcg dr dre beats headphones on sale xehqgyq kcwasqngwl discount gucci purses ubplabn http://michaelkorsbagsxoutletstore.webeden.net/ yscg http://vuittonhandbagsxoutletstores.webeden.net/

vimalanperali said...

வணஃக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?கேளவிகளே இங்கு பதிவுகளாக உருவெடுக்கிற பொழுது நன்றாக இருக்கும் என்பதுதானே நான் பார்த்தவையாய்/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
Subramanian said...

கட்டிடதொழிலாளிக்கு நல்ல வீடு இல்லை. விவசாயிக்கு நல்ல உணவில்லை. நெசவாளிக்கு நல்ல உடைகள் இல்லை. போன்ற பதங்களின் வரிசையில் வரும் கருத்தொன்றை இக்கதை அழகாக சொல்லுகிறது! மிக அருமை அய்யா!

vimalanperali said...

வணக்கம் முனைவர் இரா குணசீலன் சார்.நலம்தானே?நன்றி தங்களது அருமையான வருகைக்கும்,
கருத்துரைகுமாக/

vimalanperali said...

வணக்கம் வே சுப்பரமணியன் சார்.நன்றி தங்களின் உணர்வுப்பூர்வ கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

கவிதை வானம் said...

விமலனின் எழுத்துக்களில் தெரிவது யதார்த்தம் எழுத்து நடையில் வேடிக்கை

Yaathoramani.blogspot.com said...

படத்துடன் பதிவினைப் படிக்க
நானும் உங்களுடன் இருந்ததைப்போல் உணர்ந்தேன்
சொக்கவைக்கும் சொற்திறன்
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பாரதி முத்துரசன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Namasivayam said...

உள்ளூர் சமையலை
உங்கள் தமிழில் சுவைத்தேன்..

அருமை..

உங்கள் கேள்விக்கு பதில் உங்கள் படைப்பிலே இருக்கிறது..

நம் வயிறு நிரப்ப கடைக்குள் அனுப்புகிறார்..
காசும் கொடுத்து விட்டு
பார்சலும் வாங்கிவிட்டீர்கள்..
அவர் வயிறும் நிரம்பிவிடும்..
:-)

vimalanperali said...

வணக்கம் நமச்சிவாயம் சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/