21 Oct 2012

கரம் மசாலா,,,,,,,,,

            
அப்போதெல்லாம் மிக்சி இருக்கவிலை.கிரைணடர்கிடையாது.அயோடின் உப்பு இல்லை. அஜினோமோட்டோ கிடையாது. கரம் மசாலாக்களும், பாவ்பாஜிகளும் கிடையாது.

ஆட்டு உரலும் அம்மிக்கல்லும் மட்டுமே.விவசாய வெலைகளுக்கும்,இன்னபிற கூலி வேலைகளுக்குமாய் சென்று விட்டு உடல் நிறைந்த உழைப்பின் அலுப்புடன் வீடு வந்து சேருகிற அவர்கள் காலத்தில் அம்மிக்கல்லும்,ஆட்டு உரலும் மட்டுமே இருந்தது.

இல்லாத அல்லது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் கொஞ்சம் மட்டுமே இருக்கிற அரசலவை அதில் இம்புட்டு,அதில் இம்புட்டு,,,,,,என எடுத்து அம்மியில் வைத்து அரைக்கிற போது தப்பித்துப் போகிற தேங்காய்ச் சில்லை கைப்பிடித்திழுத்து அம்மியில் வைத்து அதன் தலையில்  நச்நச்சென  தட்டி  அரைத்தெடுத்து  அதன்  கை  மணத்தையும் குழைத்தெடுத்து
போட்டு தாழித்து சமைத்து இட்ட நமது அம்மாக்களும்,பாட்டிகளும் தந்த உணவில் இருந்த ருசி இப்போது இல்லையே,,,?என்கிற கேள்வி நம்முள் அன்றாடம் எழுவதும்,எழுந்து மரிப்பதும் தவிர்க்க இயலாமல் போகிறது.

இத்தனைக்கும்  இப்போது இருந்தது போல அப்போது கேஸ் அடுப்பு இல்லை,குக்கர் இல்லை.இது போன்ற ,முள் கரண்டியோ அல்லது நான் ஸ்டிக் பாத்திரங்களோ,அல்லது சமையல் அறையை அடைக்கிற இன்ன பிற தேவையான அல்லது தேவையற்ற பாத்திரங்களோ எதுவும் இல்லை.

குக்கரின் மூணு விசில் சத்தம்,பால்க் குக்கர் இட்லிக் குக்கர்,இடியாப்பக்குழாய் மற்றும் முறுக்குப்பிழிகிறசாதனங்கள்போன்றவிஞ்ஞானஅறிவின்எந்தநீட்சியும்தன் அறிவை சமையல்
அறைக்குள்ளாக இவ்வளவு அவசரமாக நீட்டாத காலமது.

கம்பங்கஞ்சியும்,கேப்பைக்கூழும்,சோளத்தோசையும் வரகு அரிசிச்சோறும் மிகமிக அரிதாக நெல் அரிசிச்சோறுமாய் பொங்கிக் கொண்டிருந்த சமையலறையில் நமது தாய்மார்கள் அடைகொண்டிருந்த நேரமது.

செம்மண் கொண்டு மொழுகப்பட்ட அடுப்பில் எரியாத விறகையும்,புகையும் பருத்தி மாரையும் வைத்து கனமான இரும்பு ஊது குழாயால் புகை சூழ ஊதி,ஊதி கண்களில் நீரை கட்டி வைத்துக் கொண்டும்,கண்களை கசக்கிக்கொண்டுமாய் சமையல் செய்கிற இடத்திற்கு வெகு அருகாமையாகவும் சமையல் செய்கிறவளின் உடல் மற்றும் அந்த இடமெங்குமாய்ஒட்டி உறவாடியபடி சிந்திக் கிடக்கிற காய்கறித் துண்டுகளும்,வெங்காய சருகுகள் என இன்னும் இன்னமுமான சாப்பிடு பொருட்களின் மிச்சத் துண்டுகளுடன் தீபாவளி,பொங்கல் அல்லது ஏதாவது விஷேச நாட்களில் மட்டும் சுட்டெடுக்கப்படுகிற  தோசை,இட்லி போன்ற பலகாரங்களை சுட்டெடுத்த தாய்மார்கள் அன்று சமையலில் தந்த ருசி இன்று இருக்கிற நவீன சமையல் யுகத்தில் இல்லையே?

”ஏய் இன்னைக்கு அவுக வீட்ல தோசயாம்த்தா,,,,,,,,,,”என ஊர் பூராவும் பேச்சு அரை படுகிறநாளில் சுட்டெடுக்கப்படுகிற அரைஇஞ்ச் கணத்திலான கம்புமாவு தோசையும்,சோளத்
தோசையும்கையகலஇட்லியும்சுட்டெடுத்தகைகளில்பொதிந்திருந்தசமையலின்மணத்தையும்,
ருசியையும்,ஆரோக்கியத்தையும்இன்றுபீட்ஸாக்களும்,பர்க்கர்களும் இன்ன பிறவையான,,,,,,,
ஆகாரங்களும் நமது உணவு முறையாக அவசர,அவசரமாக மாற்றி வைக்கப்பட்ட இந்த நாளில்அம்மாபாட்டிகாலங்களில்இருந்த சமையலின் கைமணம் இப்போது காணக்கிடைக்காத அரிய பொருளாக ஆகிப்போனதே  அது ஏன் என்பதே இந்த நேரத்தின் வருதமாயும் ,கேள்வியாகவும் இருக்கிறது.    

   (சமர்ப்பணம்: இந்தப்பதிவை எழுதத் தூண்டிய "தீதும் நன்றும் பிறர் தரவாரா" திரு ரமணி அவர்களின் எழுத்துக்கு/)

19 comments:

 1. உங்களின் ஏக்கங்கள் எனக்கும் உண்டு... ...ம்...

  ரமணி ஐயா அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி...

  ReplyDelete
 2. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்,தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. பிரிஜ்ஜில் வைத்து உண்ணும காலமன்றோ!
  சோம்பல் காரணமாக ஹோட்டல் உணவுக்கு அடிமையாகி விட்டோம்.

  ReplyDelete
 4. வணக்கம் டீஎன் முரளிதரன் சார்.பிரிஜ்ஜில் வைத்து உண்ணுவதை சொல்லவில்லை.எத்ன் காரணமாக நமது தீடீரென இயப்படி மாறிப் போனதே உணவுக்கலாச்சாரம் மாறிப்போனதே அது எப்படி? தானாக மாறியதா அல்லது மாற்றப்பட்டதா?என்பதுவே இந்த நேரத்டன் கேள்வியாக/

  ReplyDelete
 5. vaypxdg louis vuitton lbmqngjj louis vuitton bolsos ycrbpnd louis vuitton fuisycx ugksc louis vuitton sito ufficiale jojrwil mgmxsc sac louis vuitton pas cher nqfrf hjkxheol http://www.kaufenvuittonnstaschen.info/

  ReplyDelete
 6. "கிளப்" கடையிலிருந்த தோசையும் இட்லியும் ஏன்...பூரியும் கூட இப்போது நமது சமயலறக்குள். நமது வீட்டில் எப்போதோ ஒரு நல்ல நாளைக்கு பொல்ல நாளைக்கு என்று இருந்து வந்த "நெல்லுச்சோறு" இன்று தினசரியாகிப்போனது. "ஒங்க வீட்டுல என்ன சோறு?" என்ற நமது சிறு வயதுக் கேள்வி அற்றுப்போனது. வீட்டிலிருந்த கம்மங்கஞ்சி ரோட்டில் செம்பில் கிடைக்கிறது. இன்னும் கார்கள் சாலையோரத்து சாமியானாவில் விற்பனைக்குக்காத்துக்கிடைக்கிறது காய்கறிகள் ஏசி அறையில் விழித்துக்கிடக்கின்றன... எல்லாம் இப்படி ஆகிப்போனது ஒரு இருபதாண்டுக்குள். உலகமயத்தின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாமோ என்ன்வோ தோழா...

  ReplyDelete
 7. ybshf sac longchamp emafnm veste moncler mkmdm bxvie
  http://frdedoudounemclersmagasinn.info

  ReplyDelete
 8. twnah chaussures louboutin jxsvz sac louis vuitton bskrok http://frdesacvuittonnmagasinn.info ie pem

  ReplyDelete
 9. வணக்கம் திலீப் நாராயணன் தோழர்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/உலக மயத்தின் வெளிப்பாடு இன்று நம் வீட்டு சமையலறைவரை/

  ReplyDelete
 10. சில சமயங்களில்
  நாம் எழுப்பும் ஒலியைவிட
  எதிரொலி சப்தமாகவும் ரசிக்கும்படியாகவும்
  அருமையாகவும் இருந்து விடுவதுண்டு
  என் பதிவை விட தங்கள் பதிவு
  அருமையாகவும் சிறப்பாகவும் உள்ளது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. நன்றி ரமணி சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 12. என் பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது உங்கள் பதிவு. நன்றி உங்களுக்கும் உங்களை எழுதத் தூண்டிய ரமணி சாருக்கும்.

  ReplyDelete
 13. வணக்கம் துரை டேனியேல் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 14. ரமணியின் பதிவில் உங்கள் பின்னூட்டத்தை ரசித்து உங்களைத் தொடர்ந்து வந்தேன். இந்தப் பதிவைப் படிக்கையில் 'தீதும்..' நினைவுக்கு வர.. இறுதியில் உங்கள் சமர்ப்பணம் படித்ததும் சிறிது முறுவல்.

  "செம்மண் கொண்டு மொழுகப்பட்டா...நவீன சமையல் யுகத்தில் இல்லையே" பத்தி என்னை மிகவும் பாதித்தது. இதில் சுவையின் ஆதாரமாக எதைச் சொல்கிறீர்கள்? "சமையல் செய்கிறவளின்" உடல் வருத்தமா அல்லது அன்றைய எளிமையா அல்லது அனைத்தின் கூட்டுப் படைப்பா? நிறைய யோசிக்க வைத்தது. இன்றைய வசதிகள் அன்றைய சுவையை எந்த அளவுக்குக் குறைத்திருக்கின்றன - அப்படி குறைத்திருந்தால் - என்று மிகவும் யோசிக்கிறேன். அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் என்ன ஆகும் என்றும் யோசிக்கிறேன்.
  நல்ல பதிவு.

  ReplyDelete
 15. அதிலுள்ள மணமும் ருசியும் இப்போது இல்லை என்பதுதான் உண்மை.

  ReplyDelete
 16. உண்மை....உண்மை....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 17. வணக்கம் அப்பாத்துரை சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/சமையலும்,
  அடுப்படியும் இங்கு ஒரு உருவகமே/

  ReplyDelete
 18. நன்றி விச்சு சார்,தங்களது
  வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 19. வணக்கம் தமிழ் காமெடி உலகம் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete