23 Oct 2012

தவணைமுகம்,,,,,,


                      
முன்னாலிருக்கிற முடியை கொஞ்சம் குறைக்கலாமா? ஒரு அரை இஞ்ச் அல்லது முக்கால் இஞ்ச்,,,வெட்டிக்கொண்டசிறிதுநாளிலேயேமுடிவளர்ந்துஇந்தஇடம்கும்மென்று ஆகிவிடுகிறது என தலையில் கைவைத்துச் சொன்ன மறுகணம் சீப்பை எடுத்துச் சீவி முடியை முன்  நெற்றியில் படரவிடுகிறார்.

படர்ந்த முடியை கத்திரிக்கோல் கொண்டே  அளவெடுத்தது போல ஒரு பார்வை ஓட்டி விட்டு வெட்டிவிடுகிறார். வெட்டிய முடிகள் துண்டாகவும், நான் தனியாகவுமாய் அமர்ந்திருந்த மாலைப்பொழுதது.

அன்று சனிக்கிழமை.அரைத்தேரம். அரைப்பள்ளிக்கூடம். அலுவலகம் முடிந்து இரண்டரை
மணிக்கு வீடு வந்தேன்.சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தவனை தூக்கம் இமை அழுத்தி படுக்கையில் சாய்த்து விட்டது.

அலுப்புதான்  என்ன செய்ய இரவு படுக்கைக்குச் செல்ல குறைந்த பட்சம்11  மணி ஆகிப்
போகிறது.அதிகபட்சத்திற்கு அளவில்லை.கடிகார முள்ளின் நகர்வும், அவனது கண் விழிப்பும் சேர்ந்து பயணித்து நேரத்தை அளவிட வைக்கும்.அப்படியான பொழுதன்றின் மறுநாளில்இப்படித்தான்உடல் முழுக்க  அலுப்பை  அப்பிக்  கொண்டு  திரிய  வேண்டியதாய்
இருக்கிறது..அந்த அசதிதான் இப்படி உடல் அழுத்தி படுக்க வைத்து விடுகிறது.

படுக்கையிலிருந்து எழுந்த போது மணி மாலை 4.30அல்லது 5 இருக்கலாம். முகத்தைக் கழுவிக் கொண்டு சலூனுக்குப் போய் விட்டான்.

விரித்துப்படுத்திருந்தபாய் தலையை தாங்கியிருந்த தலையணை இவைகளை எடுத்து வைக்க வேணும் எனத் தோணாதது ஒரு அவரச முரணாக/

அவன் சலூனுக்குள் சென்றநேரம் ஒருவர் அமர்ந்து முடி வெட்டிக்கொண்டிருந்தார். பார்த்தால் ஷேவிங்கும் சேரும் போலத் தெரிகிறது.முகத்தில் அவ்வளவாக முடி ஒன்றும் இல்லை,ஒரு வேலை முடிவெட்டும் போது சேர்த்து பண்ணிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இருப்பவராய் இருந்தால் தவிர்க்க முடியாது.இல்லை அவனைப்போல கணக்குப்பார்த்துக் கொண்டு வீட்டில் போய் சேவிங்க் பண்ணிக் கொள்ளலாம் பணம் மிச்சம் என நினைப்பவராய் இருந்தால்,,,,,,,,,,,,?ஒரு ஐந்து அல்லது ஆறு ரூபாய்க்குள்ளாக முடிகிற விஷயத்தை 25 ரூபாய் செலவுபண்ணிசெய்யவேண்டுமா?என்கிறஉயர்எண்ணத்திலும்  சிந்திப்பவராக இருந்தால்,,,,,.?

டீசாப்பிட்டுவரலாம்எனகிளம்பியவனைகடைக்காரரின்வார்த்தை கடிவாளமிட்டு நிறுத்துகிறது. “சீக்கிரம் வாங்க சார்” என/

அவர் சொல்லினுள் இருக்கிற ஞாயமும் சரிதான்.”நாலு மடக்கு டீயின் ருசிக்காக நாக்கை அடகுவைத்து சென்றுவிட்டால் இங்கு அடுத்தடுத்துஆட்கள்வந்து விடுவார்கள். அவர்களிடம் 
இங்கு ஒருவர் முன் பதிவிட்டும்,பதியனிட்டுமாய் சென்றிருக்கிறார் தேனீர் அருந்த ஆகவே நீங்கள்சற்றுப்பொறுங்கள்எனச் சொல்ல இயலாது.கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களையும் கைநழுவவிடமுடியாது ஆகவே  அவரிடமிருந்து  வந்த   வார்த்தைகளின் சாதக பாதகங்களை
ஆய்ந்தவனாக டீக்குடிக்கப் போகாமல் அமர்ந்து விடுகிறேன்.

முடிவெட்டிமுடிந்தவர்இவ்வளவாஎன்கிறகேள்வியுடன்ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றவுடன்
சலூன்க்கடைகாரர்தனதுதோளிலிருந்ததுண்டையெடுத்து தட்டிய நாற்காலியில் அமர்கிறேன்.

ஊதாக் கலர் ரெக்சின் அணிந்துபுசுபுவெனவும்,மெத்தனமாகவும்தன்னைஇருத்திக் கொண்டு
இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் “போனவாரம் ஒருநா சாய்ங்காலம் வந்தேன், வியாழனோ, 
வெள்ளியோன்னுநெனைப்பு.கடைதொறந்துருச்சு,ஒங்களக் காணல போயிட்டேன்  அப்படியே
கொஞ்ச நேரம் நீங்க வர்ர வரைக்கும் உக்காரலாம்ன்னு பாத்தா வீட்டு நெனைப்பு மனசை அரிக்கவீடுபோயிட்டேன்அதுக்கப்பறம்இன்னைக்கிதான்நேரம் வாய்ச்சது.வந்திருக்கேன்,
அப்புறம்தொழிலெல்லாம் எப்பிடியிருக்கு?எனக்கேட்டவாறே  சேரில்  ஏறிஅமர்ந்து  ஆசுவாசப்
பட்டுக் கொண்டவனாய் இருந்த போது கடை வாசலில் தனது மோட்டார் பைக்கின் சத்தம் உறுமநின்றவர் வண்டியிலிருந்து இறங்காமலும் வண்டியை ஆப் பண்ணாமலும் காலை ஊன்றி
நிற்கிறார்.

வெள்ளை வேஷ்டி,வெள்ளைச் சட்டை,கருப்புக்கலர் பைக்,மாநிறம், தடித்து உயரமாகவும் உருட்டிய விழிகளும் இறுகிய முகமுமாய் இருந்தார்.அவரிடம் “நாளைக்கு தர்ரேன்” என வலியச் சிரித்துச் சொன்ன சலூன் கடைக்காரரை ஏறிட்ட பைக்காரர் “மூணு நாளா இப்படியே சொல்லீட்டீங்க,நாளைக்கும் இப்படியே சொன்னா நல்லாயிருக்காது பாத்துக்கங்க”என்றவராய் கிளம்பிவிட்டார் புகை விட்டுகொண்டு/

“என்ன செய்யிறது சார் இந்த தவணைக்கடன் இருக்குற வரைக்கும் இப்பிடித்தான் சார்.கடை ஓட்டத்துக்காக கொஞ்சம் வட்டிக்கி வாங்கீட்டு வாங்கீட்டேன் சார்.அது வந்து இப்பிடி பாடா படுத்தி எடுக்குது மனுசன,

“வாங்குனதுதான் வாங்குனேன்.ஒரே ஆள்கிட்ட வாங்கீருக்கக்கூடாதா?ரெண்டு மூணு பேர்கிட்ட பிச்சுப்பிச்சு வாங்கீட்டேன்.அது பாத்தா இப்ப,,,,,,,,,,,,,இப்பிடி தெருவுல நின்னு அதிகாரம் பண்ணுற அளவுக்கு கொண்டு வந்து விட்டுருக்கு.ரொம்பயும் இல்ல சார்,ஒரு ஐநூரு ரூபாய் வாங்கியிருக்கேன்.இப்பவந்து சத்தம் போட்டுட்டு போனரு பாருங்க அவருகிட்ட, இன்னோர்த்தர்கிட்ட ஒரு முன்னூறுரூபா, வேறோருத்தர்கிட்ட ஒரு நூத்தம்பது”

“முன்னூறு ரூபா குடுத்தவன் யாருன்னா நீங்க கூட பாத்துருப்பீங்க, விருதாவாத் திரிவானே
ஒருத்தன் அவன்தான்.கரெக்ட்சார்,நீங்கநெனைக்கிற அவனேதான்.

அவனுக்கு சோலி இதுதான். ஒரு பக்கம் புடுங்க, ஒருபக்கம் குடுக்கன்னு,,,,,,,,,,கழுத அவுங்க
கையிலதான் சார் துட்டுப்பொழங்குது,நம்மள மாதிரி ஒழச்சு சாப்புடுறவுக கையில ஒண்ணுமே மிஞ்சுறதில்ல.பின்னஅவுககையத்தான்நாடி நிக்க வேண்டியகதி.அந்த நூத்தம்பது ரூபாஆளு
ஒண்ணும்பிரச்சனையில்லாத ஆளு. கடைக்கு வருவாரு,  காத்தாடியப் போட்டு உக்காருவாரு.
நான் வெளியில எங்கயாவது போயிருந்தாக் கூட கடைக்கி வர்ரவங்ககிட்ட பொறுப்பாப் பேசி 
அனுப்புவாரு. என்னப்பா,என்ன சொல்ற,வாங்குனவுங்களுக்கு நல்ல புள்ளை ஆகப்பாருங்க"
அப்பிடிங்குற சொல்லோட போயிருவாரு”

“ரொம்பஇல்லசார்,ஒரு ரெண்டு நாளு கடையப்பூட்டீட்டேன்.வீட்ல சின்னப்புள்ளைக்கு ஒடம்புச்சரியில்லசார். ஆஸ்பத்திரி மருந்து,மாத்திரை, வீட்டுப்பாடுன்னு  ஆகிப்போயிருச்சி.
செவ்வா,புதன் ரெண்டு நாளும் நல்ல வருமானம் வர்ர நாளு.ரெண்டு நாளும் கடையத் தெறந்துருந்தாஇப்பகடை வாசல்ல வந்து சத்தம் போடுற அளவுக்கு வச்சிருக்க மாட்டேன்.ஏங் பொல்லாத வேளை,இதுக்கெல்லாம் யாரை கொற சொல்லி என்ன செய்ய?”

“என்னென்ன பேசுறாங்கன்னு தெரியுமான்னு தெரியுமாசார் கைநீட்டிகடன் வாங்கீடேங்குற
ஒரேகாரணத்துக்காகஎல்லாத்தையும்தாங்கீட்டுப்போகவேண்டியிருக்கு.கடைய  மூடிப்போட்டு எங்க போன?,இப்பிடி ஓயாம டீக்கடையில போயி நின்னுக்கிட்டு தின்னுக்கிட்டு திரிஞ்சா யேவாரம் என்ன,,,,,,,,,,,,,,, வெளங்கும்.அப்பறம் எப்பிடி ஏங்கடன திருப்பிக்கட்டுனுங்குற நெனப்பு வரும்ன்னு கேக்குறாங்க சார்.இதுல பேச்சோட பேச்சா ஏங் குடும்பத்த வேற இழுக்குறாங்க.அப்பிடியே நின்ன யெடத்துலயே நாக்கபுடுங்கீட்டு செத்துப்போகலாம்ன்னு இருக்கு சார்” எனச்ன்னவரின் கண்களீல் நீர் சுற்றிக்கொண்டு விடுகிறது.

“சரி,சரிவுடுங்க நெருங்கிப் போய் பாத்தா எல்லார் பொழப்பும் இப்பிடித்தான் நொண்டியடிச்சிக்
கிட்டுஓடுது,ஒருத்தரஒருத்தர் பாத்து மனச தேத்திக்கிற வேண்டியதுதான்.நெனைச்சுப்பாத்தா
ஒங்கமொத்தக்கடனே950ரூவாதான். அதக்கட்டுறதுக்குள்ளஒங்க கடைகரண்டு பில்லு,
வீட்டுப்பாடு, டீ செலவு இத்தியாதி, இத்தியாதின்னு வளந்து நிக்கிறது கூட  அந்த 950க்கும்
வட்டியும்  சேர்ந்து வளந்து நிக்குது இதுதான் இன்னைக்கி எல்லார் நெலமையாவும் இருக்கு.
ஒங்களுக்கு சின்ன அளவுல,எங்கள மாதிரி மாசச் சம்பளக்காரவுங்களுக்கு பெரிய அளவுல என சேரை விட்டு எழுந்தவனாய் கடையை பார்க்கிறான்,

அவன் தலை வாரிய சீப்பில் படிந்திருந்த பாதி அளவிலான அழுக்கு, சுவரில் பதிக்கப்பட்டு
இருந்த பெரிய நீளமான கண்ணாடியில்  ஒட்டியிருந்த வெட்டுப்பட்ட தலை முடிகளின் 
சின்னச்சின்னத்துண்டுகள்,சவரம்செய்கிற கத்தியில் ஒட்டியிருந்த சோப்பின் மிச்சம்,அகன்று விரிந்திருந்திருந்த   கத்திரிக்கோல்  கடைகாரர்   அணிந்திருந்த  அடர்நிற உடை,  பெயிண்ட்
உதிர்ந்து  உருவம் காட்டிய சுவர்சுவரின் மேற்க்கூரையில் ஓடிக் கொண்டிருந்த  மின்விசிறி.
லேசான கரை படிந்தும் பளிச்சிடதுமான கடையின் டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்த தரை,எல்லாம் விழிகளில்பட்டுவிரியகடையை விட்டு இறங்கி சிறிது நேரம் அங்கேயே கைகட்டி நின்றவனாக கிளம்புகிறேன்.

6 comments:

Anonymous said...

iajrt ralph lauren polo aygfe veste moncler xibxj mxrsp
http://frdepolorallphlaurenmagasinn.info

Anonymous said...

lahtfsk abercrombie france icxnijqw louboutin ubyzapb polo ralph lauren pas cher vvoacmy blsmc doudoune moncler bbyzbin ceybsx sac longchamp qidhg pvgiqvyf http://lloubuttinnchaussuresdesoldes.com/

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான பகிர்வு சார்...

நன்றி...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

குறையொன்றுமில்லை. said...

இன்னைக்குதான் உங்க பக்கம் வரேன் கதை வித்யாசமான கோணத்தில் சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு வாழ்த்துகள்.கதைன்னு சொல்லவா உண்மை சம்பவம்னு சொல்லலாமா

vimalanperali said...

வணக்கம் லட்சுமி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/உண்மைச்சம்பவங்களே இங்கு கதைகலுக்கு அடித்தளமாக/நன்றி திரும்பவுமாக/