“சிறப்பு அழைப்பாளர் திரு நீலநிலா செண்பகராஜன் அவர்கள்(கலை
இலக்கிய பெருமன்றம் விருதுநகர் கிளை)நாளை24.10.12நடக்கவிருக்கிற"இலக்கியா"அமைப்பின்
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகபங்கேற்கிறார்,அவசியம்வரவும்”என்கிறஅன்புஅழைப்புஎன்னை கடிவாளமிட்ட நேரத்திலிருந்து மனதில் ஒரு பூ விரிய ஆரம்பித்திருந்து .
மெலிதாக
மலர்ந்து மணம் வீசிய பூவை அப்படி மனதினுள்ளாக பதியனிட்டவர் கவிஞர் திரு.சரனிதா அவர்கள்
என்று சொல்லலாம்.
காலை
11 மணியின் கூட்ட அமர்வுக்கு சற்று தாமதமாகவே சென்றேன்.சற்று என்ற சொல்லை எனது கைக்கடிகாரம் அரை மணி5 நிமிடம் மொழிபெயர்த்துச்சொன்னது.
எனது
தலையில் நானே ஓங்கி குட்டிக்கொண்டவனாய் கூட்டம் நடந்த இடத்தில் பிரவேசிக்கிறேன்.ஏற்கனேவே
இருந்த 15 பேரில் என்னையும் 16 ஆவதாக இழுத்தணைத்துக்
கொண்டு விரிந்த கூட்டத்தின்
பேச்சு “சிற்றிதழ்கள் ஒரு சிறப்புப்பார்வை” என விரிந்தது.
சிறப்புப்பேச்சாளர்
திரு "நீலநிலா செண்பகராஜன்" அவர்கள் சிற்றிதழ்கள் பற்றி பேசினார்.
சிற்றிதழ்கள்
நம்மில் துவங்கப்பட்ட காலம் ,அவை பிரசவித்த எழுத்தாளர்கள் அவர்கள் பின்பு வளர்ந்து
ஜாம்பவான்களாய் ஆன நிலை பற்றியும்,அவர்களது எழுத்து பற்றியுமாய் பேசினார்.
குறிப்பாக
சிறு பத்திரிக்கையின் காலத்தை நான்காகப் பிரிக்கலாம் என பேசிய அவர் வானம் பாடி காலம்,மணிக்கொடி
காலம்,எழுத்து காலம் தற்போதுள்ள சிற்றிதழாளர்கள் காலம் என்றார்.
அவரது
பேச்சின் ஊடாக ஏழைதாசன் என்ற சிறு பத்திரிக்கையையை பற்றியும் தான் நடத்தி
வருகிறநீலநிலாசிற்றிதழ்பற்றியும்அவர்அடிக்கடி
குறிப்பிடமறக்கவில்லை.
மேலும் சிற்றிதழாளர்கள் பற்றிய
தகவல்களையும், ஒருங்கைணைப்பையும், அவர்களை தன்
இதயத்தின் அருகில் வைத்துப்பார்க்கிற நற்பண்பையும் பெற்றிருந்தது அவரது பேச்சு.
தவிர தமிழ்நாட்டில் உள்ள சிறுபத்திரிக்கைகளது எண்ணிக்கை அவைகள் முன்னிறுத்துகிற
விஷயங்கள்பற்றியும் சொன்ன அவர் அவைகளில் வெளிவருகிற
சிறுகதைகள்,கவிதைகள்,
கட்டுரைகள்,நூல்
விமர்சனங்கள்.சினிமா விமர்சனங்கள் மற்றும் ஆன்மீகம் ஆகியவை பற்றியும் சொல்ல மறக்கவில்லை.
கலையும்,இலக்கியமும்,எழுத்தும்
படிப்பும் கொண்டிருக்கிற இன்றைய சிற்றிதழ்கள் வளர்த்து
எடுத்துக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களும்,அவைகள்
வளர்த்து விட்ட ஜாம்பவான்களின் எழுத்தும் இச் சமூகத்தில் வித்திட்டதும்,செய்த பங்களிப்பும்
நிறையவே/
அவற்றை
நிறைவாகவும்,இனிமையாகவும் சொல்லியிருப்பதாய் முடிக்கிறேன் எனது பேச்சை என அவர் தனது
பேச்சை நிறைவு செய்யவும் கூட்ட அமர்வின் வேறு இரண்டு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த
திரு “கந்தப்பூக்கள் ஸ்ரீபதி” அவர்களும்,திரு “ஆனந்தன்” அவர்களும் கவிதை மற்றும் சிறுகதை
வாசிக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
படிக்கவும்,விமர்சிக்கவும்எனதனது
“நாம நல்லா இருக்கணுல்ல”சிறுகதை தொகுப்பினை கூட்டத்தினருக்குகொடுத்துக்கொண்டிருந்தார்நூலின்ஆசிரியர்
திருசக்தி
முத்துகிருஷ்ணன்
அவர்கள்.
செவ்வக வடிவில்
நீண்டிருந்த அறையில் வெளிர் ஊதா வண்ணத்தில் வர்ணம் காட்டிய சுவர்களும்,நாங்கள் அமர்ந்திருந்த
சேர்களும் அதன் நடுவாக வீற்றிருந்த டேபிளுமாய் இலக்கிய மணம்வீசி விடைதர கிளம்புகிறோம்
“இலக்கியாவுக்கு” நன்றி கூறியவர்களாய்/
(பி.கு:கடந்த24விஜயதசமியன்று
நடந்த இலக்கிய அமைப்பின் சிறப்புக்கூட்டம் பற்றி)
12 comments:
paxbwdjxxp abercrombie pas cher vstxxaft qatna ralph lauren pas cher uvplli hnwbhqkho louboutin femme uetlfutak hkhrbgq
அனுபவ பகிர்வுக்கு நன்றி அய்யா!
வணக்கம் சுப்ரமணியன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
நன்றி விமலன் சார்.
அறிந்தேன்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்...
வணக்கம் சரனிதா சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
நிகழ்சிகளை அழகாக தொகுத்தளித்தீர்!நன்றி!
வணக்கம் புலவர் ராமனுசம் ஐயா.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் வேல்முருகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment