சமையலறையில் விழுந்த செம்பு தோட்டத்தில் உருண்டதாய் காட்சிப்படுகிறது. அது
வெறும் செம்பா. அல்லது தண்ணீருடனா என்பதல்ல இங்கு உருண்டது செம்பு என்பதுவே காட்சிப்
பதிவாய்/
பதிவாய்/
குடிக்க வைத்திருந்த சில மடக்குத் தண்ணீர் இப்படி தாகம்
தீர்க்க மறந்து செம்புடன் உருண்டது சாதாரண தண்ணீருடனா அல்லது மினரல் வாட்டருடனா என்பது
தெரியாமலேயே?
அருந்திய தேனீரின் ருசி அடி நாக்கிலும் ,வாயின் மேல் அன்னத்திலுமாய்
ஒட்டிகொண்டு சுவை காண்பிக்க இன்னொருதரம் தேனீர் அருந்தியே ஆக வேண்டும் போல இருக்கிறது.
டீயை எதிர் நோக்கிய வாயும்,மனமும் சென்றடைந்த இடம் பெரியவரின்
டீக்கடையாக இருக்கிறது.
அவருக்கான மன ஆறுதல் அந்த”எப்.எம்ரேடியோதான்” போலிருக்கிறது. அவரது தலைக்கு
மேலாகசுவரில்ஊனியிருந்த மரப் பலகையில் பச்சை நிறவயரை பல்லிவாலாக தொங்கவிட்டுக்
கொண்டு /
கொண்டு /
“பொழிந்த மழை அந்தியில்” என்கிற சொல் உருவாக்கம் போல பரிணமித்த
பாடல்களின் முதல்பாதியைவீட்டிலும் மீதிப்பாதியை அல்லது பாடலின் முடிவை அவசரமாக வீட்டைவிட்டு
வெளி வந்த தருணங்களில் இப்படி டீக்கடைகளிலும்,வேறேங்காவதுமாய் கேட்க நேர்கிற
வெளி வந்த தருணங்களில் இப்படி டீக்கடைகளிலும்,வேறேங்காவதுமாய் கேட்க நேர்கிற
தருணங்கள் தற்செயலானதா
அல்லது வலியப் புனைந்து நான் ஏற்ப்படுத்திக்கொண்டதா தெரியவில்லை.
இப்படிதோனிவிடுவதுஇன்று நேற்றல்ல பத்து வருடங்களுக்கு
முன்பாக ஏற்பட்டுவிட்ட பழக்கம் அல்லது விபத்து எனச் சொல்லலாம்.அரசுப்பேருந்தில் கூட
அப்போது எப்.எம் ஒலித்த காலம்.
அரசு பஸ் கிடைக்காத நாட்களில் அல்லது அதிலிருக்கிற கூட்டத்தை
மனம் காரணம் காட்டி இன்னும் நேரமிருக்கிறதுதானே?அடுத்து
வருகிற தனியார்ப்பேருந்தில் போய்க் கொள்ளலாம் என நினைத்து பயணிக்கிற தினங்களில் செவியில்
நுழைந்து இதயம் பரவி மனம் நிறைந்த பாடல்களின் லயத்திற்கு ஆட்ப்பட்டு அந்த பேருந்து
எங்கெங்கு செல்கிறதோ அப்படியே கூடவே சென்று விடலாமோ அதன் கையை பிடித்துக் கொண்டும்
இசை தாலாட்டுடனுமாய் என நினைக்கிற நேரங்களில் வேலைபார்க்கிற ஊர் வந்துவிட இறங்கி விடுவேன்.என்னை
இறக்கிவிட்டு விரைகிற பஸ்ஸில் காதை கழட்டி அனுப்பி வைக்கிறேன்.
தோட்டம்,,,, அது நட்டு வைத்ததையெல்லாம் கூடஅல்ல, விழுந்த
விதையெல்லாம் அப்படியே
முளைக்கிற மண்ணாய் அது.
கையில் அள்ளிப்பேசுகிற ஒரு பிடி மண் அப்பிடியே அசையாமல்
கண் சிமிட்டிப் பேசும்.நலம் விசாரிக்கும்.அப்படியெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பாக
பேசிய மண்ணை இப்போது நலம் விசாரிக்க வேண்டியவனாகிப்போய் நிற்கிறேன்.
மனித உடலை செல்லரித்த கெமிக்கல்கள் போல மண்ணின் உயிரையும்
அதன் சுவாசத்தையும் அதன் மென்னியைப் பிடித்தும் குரல் வளையை மிதித்துமாய் ரசாயன உரங்கள்
நிறுத்திவிட்ட போது வேறெதுவும் செய்வதறியாது வாழக்கதியற்றவர்களைப் போல தற்கொலை செய்து
கொண்ட நிலம் தன் மேனி காட்டி விரிந்திருக்கிறது.
அதில் மூலைக்கொன்றுமாய் வரிசை தப்பியுமாய் நின்ற மரங்களில்
வேப்ப மரங்கள் இரண்டு,பன்னீர்மரங்கள்இரண்டு,புங்கமரங்கள்இரண்டுஎன காட்சிப்பட்டு/
பட்டுக்காய்ந்த இளம் வெயில் தரை நனைத்த போது தெரிகிற புற்களின்
தரை படர்ந்த நிழலும் அதன் மிளிர்வும் செடி,கொடி மனிதர்களின் தொடு உணர்வும் சுறுசுறுப்பு கொள்வதாயும்
விழித்தெழுவதாயும்/
தெரு முனையில் விரிகிற போர்வை அல்லது விரிப்பாக தெருவின்
இரு மருங்கிலுமாய் இருக்கிற வீடுகள்,தெரு முழுமைக்குமாய் நனைத்து மரம் செடி,மனிதர்கள் ஆடு மாடுகள் என எல்லாவற்றின்
மீதுமாய் பாவிப்பரவி காலூன்றி நிற்கையில் தெரிகிற அழகுக்கு ஏது எல்லை எனவே சொல்லத்
தோனுகிறது.”பருவமே புதிய பாடல் பாடு” .பாடுகிறது தினதோறுமாய் மழை நாட்கள் தவிர்த்து/
போர்த்தியிருந்த போர்வை கொஞ்சம் கூட விலகாமல் இன்னும்
தூங்கிக்கொண்டிருந்த மகளைஎழுப்பவேண்டும்சப்தமிட்டு.
“எனக்கென தனியே பணம் கொடுத்து விடுங்கள்.நான் போய் எடுத்துக்கொள்கிறேன்
புதுத்துணிகள் என நண்பர்களுடன் சேர்ந்து” என்கிறாள்.தீபாவளிக்கு ட்ரெஸ் எடுக்க கேட்கையில்
வந்த அவளது பேச்சாக இது.
போன் பண்ணிய அம்மா சற்றுமுன் பண்ணியிருந்தால் தேவலாம்
எனத் தோனியது.மின்சாரம்
தன் கண்ணை இறுக மூடிக் கொண்டு கரண்ட கட்டான
வேளையில் பஜாரிலிருக்கிறேன் நான்.
இரண்டுகிலோ சின்ன வெங்காயம்,இரண்டு கிலோ பெரிய வெங்காயம்,இரண்டு
தேங்காய்கள் நல்லதாக,,,,,எனவாங்கியவைகள்இந்தமாதம்முழுமைக்குமாக சரியாகிவிடப்போவதில்லைதான்.
பத்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையுமாக வாங்கி
வைத்துக்கொள்கிறமுறையைகைக்கொண்டவானாய் எனது சக்கடா வாகனத்தில்(இரு சக்கர வாகனத்தில்) வந்து பஜாரில் இருந்த நேரம் வந்தபோனுக்கு செவிசாய்த்து அம்மாவின் குரலை ஏற்று நான் வர தாமதமாகலாம்சற்றே/என்ற பதிலுடன் நிறுத்திவிட்டுப்போனை காதை விட்டு கீழிறக்கி மனதில் பட்டு முளைத்த நண்பரின் ஞாபகத்துடன் வீடு வருகிறேன்.
வைத்துக்கொள்கிறமுறையைகைக்கொண்டவானாய் எனது சக்கடா வாகனத்தில்(இரு சக்கர வாகனத்தில்) வந்து பஜாரில் இருந்த நேரம் வந்தபோனுக்கு செவிசாய்த்து அம்மாவின் குரலை ஏற்று நான் வர தாமதமாகலாம்சற்றே/என்ற பதிலுடன் நிறுத்திவிட்டுப்போனை காதை விட்டு கீழிறக்கி மனதில் பட்டு முளைத்த நண்பரின் ஞாபகத்துடன் வீடு வருகிறேன்.
சமையலறையில்விழுந்தசெம்புதோட்டத்தில்உருள்வதுபார்க்கநன்றாக
இருக்கலாம்.ஆனால்
தோட்ட வெளியெங்கும் வெள்ளிப்பட்டு விரித்தது போல விரிந்தும்,
சிதறியுமாய்க் கிடக்கிற
பன்னீர் மரப்பூக்களும் அதன் அடியில் நெளிகிற
புளுப்பூச்சிகளும்,தரை படர்ந்திருக்கிற அதன் நிழலும் உயிரும் நசுங்கிப்போகாதா?வேணாம்
விட்டு விடுங்கள்.
விழுந்த செம்பு சமையலறையிலும், விரிந்திருக்கிற பூ தோட்டத்திலுமாய்
இருக்கட்டும்.
மலர்வது ஆயிரங்களாகளாகவும்,பாடுவது அமுதங்களாகளாகவும்,
கேட்பதும்,பூரிப்பதும்,மனம்
லேசாகிப் போவதும் நாமாகவும் இருப்போம்/
6 comments:
good
நன்றி எம்,எஸ் ரஜினி பிரதாப் சிங் அவர்களே/
விழுந்த செம்பு சமையலறையிலும், விரிந்திருக்கிற பூ தோட்டத்திலுமாய் இருக்கட்டும்.
மலர்வது ஆயிரங்களாகளாகவும்,பாடுவது அமுதங்களாகளாகவும், கேட்பதும்,பூரிப்பதும்,மனம்
லேசாகிப் போவதும் நாமாகவும் இருப்போம்/
அருமை அருமை
மனம் கவர்ந்த சொற்சித்திரம்
தொடர வாழ்த்துக்கள்
You might also like:
மிகவும் அருமையாக முடித்துள்ளீர்கள்...
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment