27 Oct 2012

தாலாட்டு,,,,,,,,,


                      
 பஜாரில் உருக்கொண்ட நினைவு உருண்டோடி வந்து உயிர் கொண்ட இடம் கவிஞர் திரு,சரனிதா அவர்களின் அலுவலகமாயிருந்தது.

மாலை 6to7 மின்சாரம் பொய்த்துப் போய் தன் கண்களை இறுக மூடிக்கொள்கிற நேரம். கரண்ட் கட்டான இந்த வேலையேலேயே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக(?/)
பஜாருக்குப் போய் வந்து விடலாம், வாங்க வேண்டிய சரக்குகளை வாங்கிக்கொண்டும்,
பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டுமாய். வெகு முக்கியமாக வீட்டுக்குத்தெரியாமல் ஏதாவது ஒரு கடையில் நல்ல  தேனீராய்(?/) அருந்தி விட்டும் வரலாம் என்பதுமாகவே இருந்த திட்ட வரைவை முன்னிறுத்தி இரண்டு கிலோ பெரிய வெங்காயம்,இரண்டு கிலோ சின்ன வெங்காயம் தேங்காய்கள் இரண்டு (நல்ல காயா பாத்துப் போடுங்க என்கிற அன்புச்
சொல்லுடனுமாய்)வாங்கிய சரக்கு நிறைந்த பையை மாட்டிக்கொண்டு இருந்த நேரம் 
மின்னிட்டதாய் வந்த நினைவில் உருக்கொண்ட இடம் அவரது அலுவலகமாய் இருக்கிறது.

ஐந்துக்கு எட்டு அல்லது ஏழு என்கிற சின்ன அலவிலான அறையது.ஒரு டேபிள் ,மூணு கலர்களில் நான்கு சேர்கள்,டேபிளின் மீது இருந்த ஒரு கம்ப்யூட்டர் அதன் அருகாமையாய் இருந்த ஸ்டூலில் நட்டுவைக்கப்பட்டிருந்த இரண்டு மினரல் வாட்டர் கேன்கள்,மற்றும் கண்ணாடியிட்ட கதவு.இதுதான் அவரது அலுவலகத்தின் அடையாளமாயிருந்தது. மற்றபடி ஒரு கட்டிடப்பொறியாளர் அலுவகத்திற்குண்டான எந்த ஒரு அடையாளமும் இல்லை.

நான் சென்றிருந்த நேரம் கவிஞர் மற்றும் இரண்டு பேருடன் காட்சிப்பட்டதாய் அந்த அலுவலகம்.

சமீபத்தில் அவர் சென்று வந்த அந்தமான் சுற்றுலா நினைவுகளையும் பதியங்களையும் புகைப்படங்களையும் காட்சிப்படுத்திய கம்ப்யூட்டரை என் பக்கம் காண்பித்தார்.

அதில்அந்த மானின் சிறைக்காட்சி ஒரு சின்ன கதையை சொல்லிச்சென்றது. அந்தமான் சிறையின் முன்பாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1943 லேயே இந்திய தேசியைக் கொடியை ஏற்றி இருக்கிறார் என ஒரு கல்வெட்டொன்று சொல்லிச்சென்ற தகவல்தான் அது.
ஆச்சரியமும் வியப்புமாய் அமர்ந்திருந்த பொழுது கவிஞரின் கம்ப்யூட்டர் பதிவில் இருந்த
”நீயா,நானா”நிகழ்வு என் விழியில் பட்டு விரிகிறது.

80 காலங்களிலிருந்து 90வரை பயணித்த இளையராஜா அவர்களின் இசைபற்றிய பேச்சு அது.

நிகழ்வில் பேசியவர்கள் அனைவருமே அவரின் பாடல்கலையும்,பாடல்கள் அவர்களை பாதித்த விதங்களையும் அது தன் மனதை அள்ளிய நிலைபற்றியும் இன்று வரை அது தங்களது வாழ்வில் நீங்காத இடம் பெற்றும்,முக்கிய பிணப்புகளைஏற்ப்படுத்தி தொடர் கன்னிகளாய் ஆகிப்போனதாயும் கூறினார்கள்.
நிகழ்ச்சியில் பாடிக்காட்டப்பட்ட பாடல்,அது கோலோச்சிய காலகட்டம்,அதன் இசை,அதன் பரிணாமம் எல்லாம் மனதை ஆக்ரமித்தவாறாய் அமர்ந்திருந்த பொழுதில் முடிவுக்கு வந்த நிகழ்வையும், சந்திக்கப் போன நண்பரையும் ,திரு.பாலசுப்ரமணியன் திரு.நரசிம்மன்
திரு.ஜெகன்நாதன் அவர்களையும், ஏற்கனெவே அங்கு இருந்த அந்தமான் நண்பரின் நினைவுகளையும் மனதில் சுமந்தபடி வீடு கிளம்புகிறேன்.

80டூ 90 காலங்களில் நம்மில் ஊடுருவியிருந்த இளைய ராஜா அவர்களின் இசையை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்கிற நினைப்புடனும் கவிஞரிடம் கைகொடுத்தவாறுமாய்/

பின் குறிப்பாகக்கூட அல்ல,முன்குறிப்பாகவே/நேரம் கிடைக்கிற போதும் கண்ணுக்குள் அரிக்கிற போதும் நண்பர்களையும்,தோழர்களையும் சந்தித்து விடுங்கள்,பேசி விடுங்கள் அவசியம்/

3 comments:

விச்சு said...

எத்தனை பாடல்கள் வந்தாலும் இன்னும் மெலொடிஸ் என்றால் அது 80 களில் வெளிவந்த இலையராஜா பாடல்கள்தான்.

vimalanperali said...

வாஸ்தாம்தான் விச்சு சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

நேரம் கிடைக்கும் போது 'ராஜா' பாடல்கள் தொகுப்பு வரும்...