3 Oct 2012

கட்பீஸ்,,,,,,,,


   “முப்பத்தியெட்டிற்கும்,நாற்பதிற்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை.ஒரு அரை இஞ்ச் லூசாக இருக்கும்,கொண்டு செல்லுங்கள் எல்லாம் சரியாகிப்போகும்  மாமா” என அழுத்தம் கொடுத்த கடைக்காரரின் பேச்சு மிகவும் நன்றாகயிருந்தது கையில் வைத்திருந்த சட்டையை விட/
    
 சரக்கை விட விற்பரும்,அவரின் பேச்சுமே முறுக்காகிப்போகிற தருணங்களில் விளைகிறபேச்சின்விளைச்சளாய் அது. “சும்மா கொண்டு போங்க மாமா,காணலைன்னா கொண்டுவாங்க,மாத்திக்கிடுவோம்.மஞ்சள்,கிஞ்சள்வைச்சிடாமமட்டும் பாத்துக்கங்க.
இல்லைன்னா ஒண்ணு செய்யிங்க மாமா.ரொம்ப லூசா இருந்தா நீங்க போட்டுக்கங்க மாமா”ஒங்கநெறத்துக்குஎடுப்பா இருக்கும் மாமா”என்கிறார் கடைக்காரர் அவர்கொடுத்த
சட்டையைகையில்வைத்துக்கொண்டுதயங்கிநின்ற போது/

 “சட்டையப்போட்டாநல்லாயிருக்கோ இல்லையோ மாமா,ஸ்கூல் சட்டைய போட்டுட்டு அலைஞ்சாஸ்கூலுக்குபோகச்சொல்றீருவாங்கமாமா.தாடியையும்,மீசையையும்வச்சிக்கிட்டு இனிம போயி புத்தகங்ளையும்,நோட்டையும் தூக்கிட்டு பெஞ்சு மேல ஏறி நின்னா நல்லா இருக்குமா மாமா?”-நான்.

 “அப்பிடி சொல்றீங்களா மாமா,நீங்க இப்பிடி சொல்றீங்க மாமா,எங்க வீட்டுப் பக்கத்துல ஒருத்தர்இருக்காருமாமாஅம்பத்தஞ்சுவயசாவதுஇருக்கும்.கௌவர்மெண்ட்ஆபீசுலதான்
வேலை அவருக்கு,

 “அவரு வேலைக்கு போய் வர்ர நேரம் தவிர்த்து எந்நேரமும் புத்தகமும் கையுமாத்தான் இருப்பாரு.அப்பிடி என்னத்தத்தான் படிப்பாரோ என்னமோ தெரியல,வீடு நெறைய  புத்தகங்கள அடுக்கிவச்சிருக்காருமாமா,அப்பிடி அவரு என்னதான் படிச்சி என்னதான் தெரிஞ்சிக்கிட்டாருன்னு தெரியல.ஆனா ரொம்ப  தெளிவான ஆளு மாமா,ஒரு வாட்டி எங்கதெருக்காரன்ஒருத்தன்பக்கத்துதெருவுலபோயிநொரண்டு இழுத்துட்டான்.எல்லாம் வயசு வேகம்தான்.அவுங்க ஒருபத்து பேரோட வந்துட்டாங்க,ராத்திரி பதினோரு மணி இருக்கும்.எல்லாரும் தூங்கிப்போன வேளை.வந்தவுங்க வீடு நொழஞ்சி அவன வெளிய தூக்கிட்டுவந்துட்டாங்க,என்னான்னுவிசாரிச்சாஅதுபொம்பளப்புள்ள மேட்டரு.
லவ்வுன்னாங்க,தொலஞ்சிச்சிடா இனைக்கின்னு நாங்க எல்லாரும் கைய பெசஞ்சிட்டு நிக்கையில, ஒரே ரகளையும் கூச்சலுமா பையன பொலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டீட்டு போயிட்டாங்க.இவருதான்போயிபையனகூட்டீடுவந்தாரு. ஸ்டேசன்லயிருந்து.”

  “அங்கபோயிஎன்னசெஞ்சாருஎன்னபேசுனாருன்னுதெரியல,அவருகூடப்போனவுங்க
தான்சொன்னாங்க.அவருக்கிறுக்குறஅறிவுத்தெளிவுக்குஎங்க வேணும்ன்னாலும் போயி ஜெயிட்டு வந்துருவாருன்னும்,அவ்வளவு நுட்பமும்,தெளிவும்,தைரியமும் அவரு பேச்சுல இருக்குன்னாங்க.”
  “தலைய தொங்கப்போட்டுக்கிடு அப்புராணியா திரிவாரு மாமா.அவரா இந்த வேலைய செஞ்சாருன்னு ஆச்சரியமா இருக்கு மாமா.”

 “ஆமா தெருக்களுக்குள்ள இருக்குற மொறப்ப சரி பண்ணி போலீஸ் ஸ்டேசன் போயி அந்தப் பையனவும் கூட்டிக்கிட்டு வந்தது எப்பிடின்னு கேட்டதுக்கு அமைதியா சிரிக்கிறாரு மாமா,எல்லாம் அவருக்குள்ள இருக்குற அறிவுத்தெளிவு மாமா,அத கத்துக் குடுத்தது அவரு படிக்கிற புத்தகங்கள்தான் போலயிருக்கு.முடிஞ்சா நானும் படிக்கணும் மாமா,பள்ளிகூடத்துல படிச்சத விட வெளி வாழ்க்கையில படிக்க வேண்டியதுதான் நெறைய இருக்கு மாமா.அவரு அளவுக்கு இல்லாட்டிக் கூட ஏதாவது ஒரு துளியாவது கத்துக்கிறணும்மாமா, படிப்புக்கு வயசில்லைன்றாங்க. முடிஞ்சளவு,முடிஞ்சத கத்துக்கிறுவம்மாமா எனச் சொன்ன அவருக்கு 40 தை எட்டித்தொட்டிருக்கலாம் வயது.

 தேனம்மாள் ஸ்டோர் போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு ரெடிமேட் ஸ்டோரில் வந்து யூனிபார்மும்,டையும்எடுப்பதாகத்தான் திட்டம்.வழியில் பார்த்த நண்பனால் திட்டத்தில் லேசான தடம் புரலல்.

 டீக்கடை,பேச்சு,பழையது,புதுசு என நிறையச் சொன்னான்.எனது காதுகளிரண்டையும் கழட்டிஅவனிடம்கொடுத்து விட்டு அவனது பேச்சுக்கு தலையாட்டி நின்றேன்,பேச்சின் ஊடாக “இன்னொரு டீ சாப்பிடுவோமா,இன்னொரு டீ சாப்பிடுவோமா” என நான்கு டீ சாப்பிட்டு விட்டான்.எவ்வளவு தவிர்த்தும் கூட நான் இரண்டு தடவை டீ சாப்பிட வேண்டியதாகிப்போய் விட்டது.நல்ல நண்பன் அவன். அவன் அப்படித்தான் எப்பொழுதும்,கேட்டால் “எப்பொழுதுமே அப்படித்தான்” என மாற்றி சொல்லுவான் பெரிதாக சிரித்துக்கொண்டே/

 பொதுவாகவேஅவனதுபழக்கம்அதுவாகிப்போனதில்ஆச்சரியம் இல்லை. டீக்குடிக்கும் முன்பாக ஒரு டீக் குடிப்பான்.டீ குடிக்கும் போது ஒரு டீக்குடிப்பான்.டீ க்குடித்த பின்பு  ஒரு டீக் குடிப்பான்.”என்ன இது நண்பா என்றால் நூறு மில்லிக்கும் குறைவாக வரி போட்ட கண்ணாடி கிளாஸில் குடிகொண்டிருக்கிற டீயை,மென் ஆவி பறக்க டீ மாஸ்டரிடமிருந்து வாங்கிவாய் திறந்து குடிக்கையில் உள்ளே போகும் தேநீரின் ஒவ்வொரு மிடறும்  நாவின்
சுவையறும்புகளில்பட்டு தருகிற ருசி இருக்கிறதே, அதற்கு என் வாழ்நாட்கள் முழுமையையும் அடகு வைத்து விடலாம்” போலும் என்பான்.

 அவனிடம் பேசி முடித்துவிட்டும், டீக்குடித்துவிட்டுமாய் வந்த கணங்களில் நடந்த நிகழ்வாய் இது/

  நான்,கடைக்காரர்,(சின்னதாய்ஒருகாம்ளக்ஸ்கடை)கையிலிருந்தசட்டைஇவைகளுடன்
நான் நின்றிருந்தபொழுது என்னையையும்,கடையையும் கடந்த நடுத்தர வயது தாய் மகனிடம் சொல்லிக்கொண்டே போகிறாள்.

 “நாளைக்கு  ஒரு நாளு பழைய யூனிபார்முல போ,இன்னைக்கி ராத்திரி அப்பா அவரு வேலை பாக்குற ஜவுளிக்கடை மொதலாளிகிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டு வர்ரேன்னு சொல்லீருக்காரு.வாங்கிட்டு வரட்டும்,நாளைக்குவந்துஇந்தகடையிலயே புது யூனிபார்ம் எடுப்பம்.ம்,,,,,,,,,,,என் ராசால்ல,,,,,,, என்றவாறு கடந்த அவர்களின் பேச்சு காற்றில் கரையாமல் என்னில் அமர வாங்கிய சட்டையை பைக்குள் வைத்துக்கொண்டு  பயணப்படுகிறேன். 

8 comments:

Anonymous said...

ywdogkzm sac longchamp pas cher dilyyhwjtp sac longchamp yxkeuxo sjfhgujw polo ralph lauren qjwkkmcmvb polo ralph lauren pas cher srcjtnx franklin marshall pas cher franklin marshall pas cher lenhg
http://abercromsfitchdessoldes.com http://frapolosraphlaurensales.info/#00626

மாலதி said...

மிகவும் சிறப்பான ஆக்கம் இதேபோல இன்னும் இன்னும் நிறைய உங்களிடம் இருந்து வெளிப்படட்டும் ....

vimalanperali said...

வணக்கம் மாலதி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு இப்ப டீ குடிக்கணும் போல இருக்கு சார்...

பயணம் தொடரட்டும்... நன்றி...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
மேலான கருத்துரைக்குமாக/

குட்டன்ஜி said...

யதார்த்தம்!

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் குட்டன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/