காயப்போட்டிருந்தவேஷ்டியும்,சேலையும்,பேண்ட்,சர்ட்டும்,சுடிதாரும்யாரோ நடந்து வருவதாய் சொல்லிச் செல்கிறது.
வெள்ளை வேஷ்டி நான்கு அல்லது எட்டு என ஏதாவது ஒரு முழத்திற்குள்ளாய்
அடங்கிப்
போயிருக்கலாம்.பூப்போட்டசிவப்புக்கலர்சேலை,கறுப்புக்கலர்பேண்ட்,வெள்ளைக்கலர் சட்டை,
மஞ்சள்க்கலரில் பூக்கள் தரித்து டாப்ஸீம்,ப்ரெவுன்கலரில்
பேண்டுமாய் சிரித்த சுடிதாரும் கொடியில் தொங்கியது.
வரிசையாகவும்ஒன்றைத்தொட்டுஒன்றுமாய்காயப்போடப்பட்டிருந்தஅவைகள் எங்களது
எதிர்வீட்டு வாசல் முன் காற்றிலசைந்து கொடியில் ஆடிக்கொண்டிருந்தது.
வாயில் பிரஷ்ஷை வைத்தவாறே சிவப்புக்கலர் வர்ணம் காட்டிய படிகளில் ஏறியும் இறங்கியு
மாய் வீட்டின்பக்கவாட்டுவெளியிலுமாய்நடந்துகொண்டேபல்துளக்கிக்கொண்டிருந்தபோது
கண்பதிந்தகாட்சியாய்அதுவேஎன்மனதில் பதிவானதாயும்,விரிந்ததாயும்/
பட்டுப்படர்ந்திருந்தபுல் வெளியாய் காணப்பட்ட தரை போனமாதம் வரை கட்டாந்தரையாயும்,
காய்ந்து போயுமாய்/
குடிவந்த புதிதில் முள் முளைத்த
வெளிக்குள் இருந்த வீட்டை சுற்றுப்புறம் சுத்தம் செய்தும்,சூழ்ந்து படர்ந்திருந்த முட்செடிகளை வெட்டியும் வீட்டை மீட்டெடுத்து தனியே பிடுங்கி
நட்டு வைத்த போது அழகு மிளிர்ந்து காணப்பட்ட்தாய் அல்லாவிட்டாலும் தனித்து நின்ற புது
வீட்டிற்கான களையை கொடுத்து நின்றது.
நாங்கள் வீடு கட்டிய பிறகு
இரண்டும் ,மூன்றும் ஐந்து என வந்து நிலை கொண்டு விட்ட
வீடுகள் அந்த இடத்தை ஓரளவு சுத்தமாய்க் காட்டிக் கொடுக்கிறது.வீடுகள் முளைத்து நின்ற இடம் போக மிச்சமிருந்த வெளியில்
சற்று முந்தைய நாட்களில் பெய்த மழையில் பச்சை போர்த்தி காட்சியளித்ததாய்/
வீடு,வீட்டின் முன்பிருந்த தெரு ,தெருவின் முன்பக்கமாயிருந்த
வெளியைதாண்டி எதிர் சாரியில்வீட்டின்முன்காய்ந்தாடியவேஷ்டியும்,சேலையும்,பேண்டும்,சுடிதாரும்கண்களைகவ்விக்கொள்கிறது.
பல்துளக்கி விட்டு படியில்
திரும்பி ஏறுகையில் விழிதிரும்பிய வேகத்தில்
பதிவான காட்சி யாரோ நடந்து வருவதாகவே புலனாகிறது.
வரட்டும்,வரட்டும்ஜோடியாகவோஅல்லதுதனியாகவோ,யுவனாகவோ,அல்லதுயுவதியாகவோ,காதலர்களாகவோஅல்லதுகணவன்,மனைவியாகவோ,,,,,,,,யாராகவேண்டுமானாலும்இருக்கட்டும் .
நான் ஏறிப்போகிற சிவப்பு வர்ணம்
பூசிய படிகளும் காற்று புகதிறந்திருந்த கதவும் அவர்களை ஏற்றுக்கொள்ளும்.
திறந்திருக்கிற கதவு வழியாகவும்,விரிந்திருக்கிற வாசல்படியேறியும் காற்று
மட்டுமல்ல,
மனிதர்களும்அவர்களுடன்கைகோர்த்துக்கொண்டு மனிதமும் வரட்டும்.கூடவே
உழைப்பாளி
களுக்கான தீபாவளித் திருநாளும்/
13 comments:
அருமை நண்பா!
தீபாவளி நல் வாழ்த்துகள்.
வணக்கம் செம்மலை சீனிவாசன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
மனிதம் வளரட்டும்..
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
[[பல்துளக்கி ]]
பல் துலக்கி
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்
//திறந்திருக்கிற கதவு வழியாகவும்,விரிந்திருக்கிற வாசல்படியேறியும் காற்று மட்டுமல்ல,
மனிதர்களும்அவர்களுடன்கைகோர்த்துக்கொண்டு மனிதமும் வரட்டும்.கூடவே உழைப்பாளி
களுக்கான தீபாவளித் திருநாளும்//
கவித்துவமான வரிகள்
வணக்கம் செம்மலை ஆகாஷ் சார்,நன்றி தங்களது வருகைக்கு/வாழ்த்துக்கள்.
வணக்கம் மேகேந்திரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/வாழ்த்துக்கள்/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/வாழ்த்துக்கள்.
வணக்கம் அறிவன் சார்,நன்றி தங்களது விளக்கத்திற்கும்,எடுத்துக்கூறலுக்கும்/இதோ திருத்திக் கொள்கிறேன்,
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக.வாழ்த்துக்கள்.
வணக்கம் டீ.என் முரளிதரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்,
வாழ்த்துக்கள்
Post a Comment