11 Nov 2012

வழுவல்,,,,,,,,,

               
அழைத்த ஒலிமிஸ்டு கால்என பதிவாகிறதுயாரும் தோள் தொட்டு அழைக்கவில்லை.
அருகில் வந்து கூப்பிடவும் இல்லைஇதயத்தின் உள்ளே நுழைந்ததாகவோ,மென்மை வாய்ந்த அழைப்பாகவோ இருந்திருக்கவிலைஅது.

தினசரிவருகிற அழைப்புதான் அது எனினும் இன்று அது முக்கியத்துவப்பட்டுத் தெரிவதாக/

அழைப்பு வந்த வேளையிலும் அது கடந்து மிஸ்டு காலாய் பதிவான பொழுதுகளிலும் செல்போனில் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனது மகனுக்கு பிடித்த பாட்டாய் அது இருந்ததில் ஆச்சரியம் ஏதும் இருந்திருக்க முடியாது.ஏனெனில் எனக்கும் பிடித்ததாக/

மனம் பிடித்த பெண்னை நினைத்து நாயகன் கரைகிற பாட்டு.ஆயிரங்களில் வாங்கிய செல்போனில் பேசுவதை தவிர்த்து மற்ற எல்லாமும் செய்துவிட முடிகிறது.

பாட்டுக்கேட்க,போட்டோஎடுக்க,பதிவுசெய்ய,எப்,எம்,டார்ச்லைட்,இண்டெர் நெட்ஈமெயில்,
பேஸ் புக்,,,,,,,,என இன்னும் இன்னுமான நிறைந்து போன வசதிகளை அந்த கையகல ப்ளாஸ்டிக் பெட்டிக்குள் பொதித்து வைத்திருக்கும் அது பேசுவதை தவிர்த்து மற்ற எல்லாம் செய்யலாம் என்னில் என்கிறது.

கடைக்காரர்களிடமோ,செல்போன்சர்வீஸ்சென்டர்களிலோகேட்கையில்டவர் பிராப்ளம்
அதனால்தான் இப்படி என்கிறார்கள்.அதுவும் கரண்ட் இல்லாமல் போய் விடுகிற வேளையில் சுத்தமாய் அல்லது கொர,கொரப்பாய் அல்லது தொடர்பறுந்த பேச்சாய் விட்டு விட்டே கேட்கிறது.

பேசுவதற்காய் வாங்கிய கருவியில் அது தவிர்த்து  மற்றதெல்லாம் செய்ய முடிகிறதென இலவசமல்லாத சிம்கார்டு வாங்கிய நாளொன்றின் மாலையில் அந்த கடைக்காரர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

எந்த ஆப்சனும் இல்லாமல் பேசமட்டுமே முடிகிற குறைந்த விலையில் கிடைக்கிற செல் போனையே வாங்குங்கள்துவே தலைசிறந்தது என பரிந்துரைக்கிறார்என்னைப்போன்று 
கடைக்கு வருகிறவர்களிடமும் இதையே சொல்வதாகச்சொல்கிறார்.

பேசாமல்அப்படியானஒருபோனைவாங்கிவிடுவதுசாலச்சிறந்தது என்கிற முடிவுடன் இருக்கிற
வேளையில்மனம்பிடித்தபாட்டுமுடிந்தசெல்போனை கையில் எடுக்கிறேன்.

அடநம்மஅண்ணந்தான்மிஸ்டுகால்விட்டிருக்கிறது.“அண்ணேஇதோ ருகிறேன்.உங்களிடம்
ம்தொட்டும்,இதயம்நுழைந்தும்பேசவும்நிறைந்துகிடக்கிறது விஷயம்.டவர் பிராபளத்தினால்
பேசமுடியாதுபோனாலும்பரவாயில்லை.உங்களதுஇருப்பிடம் நோக்கிவந்துவிடுகிறேன்”.என
நான் செல்போனை எடுத்து அவரது நம்பரை அழுத்திய நேரம் தூரத்து செடியில் மலர் ஒன்று
புன்னகை பூத்து தீபாவளி வாழ்த்துச் சொல்லிச் சென்றதாய் சொன்னார்கள்.தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றியும் வாழ்த்துக்களும்/